சனி, 11 செப்டம்பர், 2010

தங்கபாலு நீக்கப்பட வேண்டும் : இளங்கோவன் திடீர் போர்க்கொடி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலுவை நீக்க வேண்டும்,'' என முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இளங்கோவன் கூறினார்.

நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேசமணிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும். நாகர்கோவிலை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். முதல்வர் நாகர்கோவில் வரும்போது இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை இன்னும் முறைப்படுத்த வேண்டும். அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் தாக்கப்படுவதும், அவர்களது வீடுகள் மீது தாக்குதல் நடைபெறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. கூட்டணி பற்றி, தேர்தல் வரும் போது காங்., தலைவர் சோனியா அறிவிப்பார். கடந்த 45 ஆண்டுகளாக காங்., தமிழகத்தில் எல்லாருக்கும் ஏணியாகவே இருந்துள்ளது. தமிழகத்தில் காங்., தனித்து ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு தாமதமானால், ஏணியில் ஏறிச் சென்று சிம்மாசனத்தில் சரி சமமாக அமர வேண்டும். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி போன்ற சிறந்த தலைவர்கள் இல்லாதது, தமிழக காங்கிரசுக்கு பெரும் குறையாக உள்ளது.

தமிழக காங்., கமிட்டியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. ராதாபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு காமராஜர் பெயர் வைக்கக் கோரி சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடத்திய காங்கிரஸ்காரர்கள் மீது, கமிட்டியினரே போலீசில் புகார் செய்தனர். மாநிலத்தில் காங்கிரசின் திருப்தியற்ற செயல்பாடு பற்றி மேலிடத்தில் சொல்லியுள்ளோம். தமிழக காங்., தலைவர் தங்கபாலு நீக்கப்பட வேண்டும். காங்கிரசில் கோஷ்டி பூசல் என்பதை ஏற்க முடியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தந்து விட்டு, பார்லியில் தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு எதிர்த்து பேசுகிறார். முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை.

தமிழகத்தில் காங்., ஆட்சி அமைய வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். காங்., ஆட்சிக்கு வந்தால், தமிழகம் வளம் பெறும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை. கடந்த தேர்தல்களில் சில நிர்பந்தங்களால் கன்னியாகுமரி தொகுதியை இழந்தோம். இனி அப்படி நடக்காது. நான் மாநில காங்., தலைவராக நியமிக்கப்படுவேனா? என்பது பற்றி சோனியா தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

வாசு.gunasekaran - Lagos,நைஜீரியா
2010-09-11 16:12:02 IST
இளங்கோவனுக்கு மினிஸ்டர் போஸ்ட் வேனுமாம்ப , அதுக்குதான் அலையிரர் . புருஞ்சிக்கொங்க ....
Ramu - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-11 16:06:07 IST
இந்திய நாட்டை ஒரு இந்தியன் தான் ஆட்சி செய்ய வேண்டும் ,அதேபோல் தமிழ் நாட்டை ஒரு தமிழன்தான் ஆட்சி செய்ய வேண்டும் ,அது திமுக,அதிமுக,காங் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் .அடுத்த மாநிலத்தவர் வர கூடாது...
ராஜ் குமார் - Madurai,இந்தியா
2010-09-11 15:26:53 IST
ராமதாசுக்கு அடுத்த காமெடி பீஸ் இவர்தான்...
தங்க பாலு pa - திருச்சி,இந்தியா
2010-09-11 15:05:55 IST
அவர் (தங்கபாலு) பாட்டுக்கு காலேஜ் உண்டு காங்கிரஸ் உண்டு,ஏகப்பட்ட அமௌன்ட் பார்த்துகிட்டு பேசாமல் இருந்தால் என்ன இளங்கோ மானத்தை வாங்குற .பேசாமல் என்னை தொடர்பு கொண்டு உனக்கு எவளவு என்று என்னை தொடர்பு கொண்டால் பேசி சுமுகமான முடிவு எடுக்கலாம் .உனக்கு மட்டும் ஒன்னு சொல்லுறேன் எங்க அண்ணன் காலேஜ் கூடிய விரைவில் மெடிக்கல் காலேஜ் அகபோகுது போசாமல் இருந்தால் அதுக்கும் சேர்த்து ஒரு அமௌன்ட் வாங்கி தரேன் ....
அறிவழகன் - திருச்சி,இந்தியா
2010-09-11 14:12:12 IST
ஐயா, இளங்கோவன் அவர்களே கடந்த முறை தாங்கள் தானே தமிழ் நாட்டின் தமிழக காங்கிரஸ் தலைவர் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள் இன்று குறை சொல்ல வந்துள்ளீர்கள் வெட்கமாக இல்லை உமக்கு. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து இப்போ தங்கமான தங்கபாலுவை கடிக்கிரீரா? உன் கனவு பழிக்காது ஐயா, உமக்கு காலம் தான் பதில் சொல்லும். அன்புடன், உண்மையான காங்கிரஸ் காரன், திருச்சி....
ramasami - coimbatore,இந்தியா
2010-09-11 13:46:31 IST
அய்யா ஈ வீ கே எஸ் , முதலில் டெல்லிக்கு காவடி தூக்குவதை காங்கிரஸ் தலைகள் நிறுத்தட்டும் .அப்புறம் டெபாசிட் வாங்குறத பற்றி யோசிக்கலாம்.யார் இருக்கா உங்களுக்கு ஓட்டுப்போட ?....
உண்மை இந்தியன் - london,இந்தியா
2010-09-11 13:32:01 IST
இளங்கோவன் இருக்கும் வரை congressku தமிழ்நாட்டில் மதிப்பு irukaathu...
esspee - trichi,இந்தியா
2010-09-11 13:23:59 IST
தமிழக காங்கிரஸ் ஒரு குங்குமம் சுமக்கும் கழுதை என்பது வெகு நாட்களுக்கு முன்னமே நிருபிகபட்ட உண்மை. இதை அவர்களே வெட்கம் கேட்டு சட்டசபையில் ஒப்புக்கொண்டுள்ளனர். இதில் கட்சி தலைவர் யாராக இருந்தாலும் செய்யவேண்டிய வேலை, அழும் கட்சிக்கு தலையாட்டுவது மட்டும் தான். அகில இந்திய காங்கிரஸ் தலைமை எப்போதும் மத்திய ஆட்சியை பிடிப்பது ஒன்றே குறிகோளுடன் செயல்படும். அதற்க்கு தமிழகத்தை பற்றியோ அல்லது ஆட்சியை பற்றியோ கவலை இல்லை. அதெல்லாம் காமராஜருடன் போச்சு இப்போ 17 எம் பி சீட்டு மட்டுமே குறிக்கோள். இதற்குபோய் நான் நீ என்று கோஷ்டி சண்டை வேஸ்ட் ....
கண்மணி - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-11 13:17:24 IST
சுப்ரமணிய சாமியின் அடுத்த வாரிசு தான் இந்த அண்ணன். மனசுல ரொம்ப புத்திசாலி என்று நினைப்பு....
BALA - Palayamkottai,இந்தியா
2010-09-11 13:16:50 IST
நீங்க மத்திய ஜவுளி துறை அமைச்சராக இருந்த பொது குறைந்தபட்சம் உங்க தொகுதிக்கு என்னத்த செய்து கிழிச்சிடிங்க....
jeyaraj - Kanchipuram,இந்தியா
2010-09-11 11:59:16 IST
தங்கபாலு தலையும் மூளையும் சுத்தம். அவரை ஒரு மடதலைவராக பார்போம்....
vinoth - chennai,இந்தியா
2010-09-11 11:39:35 IST
தமிழக காங்., தலைவர் தங்கபாலு நீக்கப்பட வேண்டும். காங்கிரசில் கோஷ்டி பூசல் என்பதை ஏற்க முடியது ஆஹா ஆரம்பிசிட்டங்காய ஆரம்பிசிட்டங்கா...
லார்சன் - Dubai,இந்தியா
2010-09-11 11:15:00 IST
உண் வாயை வச்சிட்டு சும்மா இருக்க முடியலையா..? உனக்கு ஏன்டா இந்த பதவி ஆசை...? நீ காங்கிரெஸ் தலைவன் ஆனா என்னடா கிழிச்சு தள்ளுவ... தவள மாதிரி உண் வாய திறந்து எதாவது பேசிட்டே இருக்காதா... நல்ல புள்ளையாட்டும் இருக்கனும்... ஓகே.. நண்பன் டா.......
SethuRajan - Singapore,இந்தியா
2010-09-11 10:29:29 IST
சூப்பர்...
c.ramasamy - tup,இந்தியா
2010-09-11 10:26:10 IST
அண்ணா,நீங்க சரியான ஆளுணோ...அங்க கடிச்சு இங்க கடுச்சு...உங்க ஆளவே கடிக்க ஆரம்பிச்சுடீங்க...இது யார புடிச்ச கெரகம்னு தெரியலை...i...
பாஷா.J - DUBAI,இந்தியா
2010-09-11 10:13:39 IST
ரொம்போ புத்திசாலி மாதிரி பேட்டி கொடுக்குறார்! எப்படி!!!!!!! அவரை மாத்தினால் தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துடுமா? எப்படியும் உன்னை கட்சியை விட்டு தூக்க போறாங்க நீ ஆ தி மு க வில் செரபோற கொஞ்சம் வெயிட் பண்ண................
திருக்குமரன் - திருவாரூர்,இந்தியா
2010-09-11 09:33:07 IST
ஆசை எவனை விட்டு வைத்தது....
தண்டபாணி - தூத்துக்குடி,இந்தியா
2010-09-11 08:47:17 IST
தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணியானாலும் (அல்லது தனித்தனியே நின்றாலும்) கண்டிப்பாகத்தோற்கடிக்கப்படவேண்டும்... வேறு யாரு ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை... ஆனால் தி.மு.க மீண்டும் வந்தால் தமிழ்நாட்டை(மக்களை) யாராலும் காப்பாற்றமுடியாது....
AXN பிரபு - சென்னை,இந்தியா
2010-09-11 08:36:11 IST
தவளை வாய் மீண்டும் பிதற்ற ஆரம்பித்து விட்டது. ஐயா இளங்கோவா ! திமுகவையும் உனது கட்சியான காங்கிரஸ்ஐயும் இப்படி வீரமாக தாகும் உன் வாய் ஏன் அதிமுகவையோ ஜெயளைதவையோ ஒரு வார்த்தை பேச மாட்டேன் என்கிறது ? காங்கிரஸ் ஆட்சிக்கு வர திமுகவை விமர்சிக்கும் வீரன் நீ என்று யாரை ஏமாற்றுகிறாய் ? அப்படி திமுக வீழ்ந்தால் adhimuga thaanae ஆட்சிக்கு varum . yidhil காங்கிரஸ் aatchi yengae nottugiradhu ? unmaiyil நீ காங்கிரஸ் katchi ஆட்சிக்கு வர yenninaal yirnadu kazhagangaliyum vimarsanam sei. appodhu நீ வீரன் என்று oppukolgirome....
iindian - dubai.,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-11 08:09:36 IST
LET CONGRESS GO TO HELL. WHO BOTHERS! BUT ONE THING , THIS THANGABALU WHEN HE WAS MP, HE HAD THE DISTICTION, RECORD OF NOT ASKED EVEN A SINGLE QUESTION IN PARLIAMENT. SO, HE SHOULD BE DRIVEN OUT OF TAMILNADU!...
மதி - Chennai,இந்தியா
2010-09-11 08:08:45 IST
தமிழகத்தில் காங்., ஆட்சி அமைய வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால் நீ ஆட்சிக்கு வரவேண்டும் என்றா விரும்புகிறார்கள்? பிள்ளை பூச்சியை மடியில் கட்டிக்கொண்டு,புராணம் பார்த்தவன் கதையாக உன்னையும் ராமதாஸையும் கட்சியில் வைத்துக்கொண்டு காலம் ஓட்டுவது மிக்க கஷ்டமே.கவுன்சிலர் தேர்தலில் நின்றே உன்னால் வெற்றிபெற முடியாது! வெட்டிப் பேச்சு பேசி, கட்சியைக் குழி தோண்டிப் புதைப்பதுதானே உன் எண்ணம். அம்மா கட்சியில் பதவி பெறுவது நிச்சயம்.எனவே போகும்போது,காங்கிரசை சவக்குழியில் புதைக்கத்திட்டம் இடுவது உனக்கே நல்லா இருக்கா இளங்கோவா?...
பாமரன் - America,இந்தியா
2010-09-11 08:06:21 IST
சபாஷ்டா இளங்கோவா!!!...
MANNANDHAI - India,இந்தியா
2010-09-11 07:49:30 IST
தந்தை பெரியார் அவர்களின் காலம் கடந்த திருமணத்தையே எதிர்த்து போர்க்கொடி பிடித்து வெளியே வந்து தி மு க வை துவக்கிய முக்கிய தூண்களில் ஒருவர் EVK சம்பத் அவர்கள். பின்னர் ஏதோ காரணங்களால் விலகி தனிக்கட்சி துவங்கிச் சென்றுவிட்டார். அவர் மட்டும் DMK விலேயே தங்கியிருந்தால் அண்ணாவே முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்பதெல்லாம் பழைய ஏங்கவைக்கும் வரலாறு. இவர் அத்தகைய சம்பத் அவர்களின் புதல்வர். might is right என்பது இவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். சூழ்நிலைகளை பயன் படுத்திகொண்டு வலிமையுள்ளவன் ஜெயிப்பதையே நாம் இதுவரை பார்த்து கொண்டிருக்கிறோம். இவர் புதிதாக எதையும் சொல்லவில்லை. ஆயினும், புதிதாக எதையாவது செயவாரேயாயின், பார்க்கலாம்....
jopet - singapore,சிங்கப்பூர்
2010-09-11 07:47:00 IST
அட உனக்கு பந்தியிலேயே இடம் இல்லன்னு சொல்லறாங்க நீ என்னன்னா பாயாசத்துல சக்கரை சரியா இருக்கான்னு பாத்துகோங்கன்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டு நிக்கிறை அவவளவுதான் உன் சாப்டர் close . நீ இனிமேல் காங்கிரஸ்ல்ல சீட்டு வாங்க முடியாது வாங்கினாலும் ஜெய்க்க முடியாது. அப்படியே நீ அதிமுகவுக்கு போனாலும் உனக்கு உன் தொகுதி கிடைக்காது. வேற எங்கேயாவது நின்னாலும் உன்னை காங்கிரஸ்காரனுன்களே தோக்கடிசிடுவானுங்க. சரின்னு விஜயகாந்த் கிட்ட சேந்தின்னா உன்னை வேட்டி ஜட்டியை எல்லாம் உருவிட்டு தெருவில பராரியா விட்டுடுவான் அவன் அந்தளவுக்கு அவன் காசுல்ல கெட்டி. இப்ப ஒன்னு சொன்னா கோவிச்சுக்காத! நீ உனக்கு ஆப்பை நீயே தேடி அதுல போய் உக்காந்திட்டேயா! அதனால உன் ஜோலி முடிஞ்சுபோச்சுயா முடிஞ்சுபோச்சு!...
மணி - சென்னை,இந்தியா
2010-09-11 07:11:45 IST
தமிழகம் செழிக்க காங்கிரஸ் அழியவேண்டும். காங்கிரஸ் அழிய தங்கபாலுவின் தலைமை மிக அவசியம். நல்லெண்ணம் கொண்டோரே!!தடுக்காதீர்கள்!!....
V.Subbarao - Singapore,இந்தியா
2010-09-11 07:05:57 IST
திரு. இளங்கோவன் அவர்களே, தங்கள் எடுத்துகாட்டு, சரியானதே. அது தமிழகத்தில் மட்டுமல்ல , இந்திய நாடு முழுவதிலுமுள்ள காங்கிரஸ் காரர்கள் அப்படித்தான் ; சுயநலம் முதன்மையில். உதாரணம் வேண்டுமா: இன்று தினமலர் போட்டோ ஆல்பத்திணை பாருங்கள். காலம் சென்ற வல்லபாபை பந்த் அவர்கள் ஒரு பழம் பெரும் காங்கிரஸ் காரர். அவரின் நினைவு நாளில் சிலையினை கௌரவிக்கும் படத்தில் அவர்மகன் 'பந்த்; ஐ தவிர வேறு பேர் சொல்லும் காங்கிரஸ் காரர்கள் ஒருவருமிலர். இதுதான் இந்திய காங்கிரஸ்....
Rajavel - Singapore,இந்தியா
2010-09-11 06:28:12 IST
தமிழ்நாடு காங்கிரஸ்க்கு E V K S இளங்கோவன் போன்ற ஒரு முதுகெலும்புள்ள தலைமை தேவை....
john - tirunelveli,இந்தியா
2010-09-11 06:27:28 IST
எங்களுக்கு(தமிழ் மக்களுக்கு ,எங்கள் ரத்த உறவு இலங்கை தமிழனுக்கு ) முதல் எதிரியே காங்கிரஸ்தான் ....அதனால நீ தலை கீழா நின்னாலும் ஆட்சிக்கு வரவிட மாட்டோம் .நீயே ஒரு வெட்டிபய ,உன் பேச்ச எவனாவது கேப்பானா ?.உன்ன தலைவரா வேற ஆக்கனுமா ?சும்மா புலம்பாம வாய மூடிக்கிட்டு குப்புற படுத்து தூங்கு !...
ப. மாதவன் - சென்னை,இந்தியா
2010-09-11 05:58:47 IST
அதே மூப்பனார், வாழப்பாடி காலத்தில் தானே ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார். அப்பொழுது எங்கே போனது உங்கள் கட்சியின் பற்று? தலைவரின் பற்று? உங்கள் அடிப்படை கொள்கை என்ன? பணமும் பதவியும் தானே. இனி அந்த கொள்கைகளுக்கு தமிழகத்தில் விலைக் கிடையாது. இருப்பது நான்கு பேர்கள். அதிலும் நான்கு கோஷ்ட்டிகள். தனித்து நின்றால் நிற்க கூட ஆள் கிடைக்காது....
செல்வன் - Chennai,இந்தியா
2010-09-11 05:50:36 IST
கட்சியில தன்மானமுள்ள நபர்கள் ஒருசிலராவது உள்ளனர் என்பதை இவர் நிரூபித்துள்ளார். ஊழல் மாமன்னனின் கூஜா தூக்கிகளும், கால் நக்கிகளும் வெட்கமில்லாமல் ஆளும்கட்சியின் பினாமியாக காங்கிரஸ் கட்சியில் தாலைமையில் உட்கார்ந்து கொண்டு கல்லா பெட்டியை நிரப்பிக்கொண்டு இருக்க கேள்வி கேட்ட்க முதுகெலும்பில்லாத காங்கிரேச்ச்கரர்கள் ஏன் வாழவேண்டும்....
sathish - cbe,இந்தியா
2010-09-11 05:49:40 IST
சரியான செம அடி,, இந்த பொம்மை தங்க பாலுவை தூக்கி குப்பை தொட்டிலில் போடணும்,,, எல்லாம் சோனியா சொல்வார்,,,எல்லாம் சோனியா சொல்வார் ,,அப்போ இவரு என்ன தான் சொல்வாரு,, இப்படி ஒரு தலையாட்டி பொம்மை {மத்தியில் ஒரு பெரிய பிரதம மந்திரி பொம்மையும் இருக்கிறது}தேவையா,, நாப்பது வருசமா தூக்கு தூக்கியா இருக்கிறது போதாதா ,, இளங்கோவனை தலைவர் ஆக்கவேண்டும் ,, காங்கிரசில் முதுகெலும்பு,, உண்மையான காங்கிரஸ் ஆளு,, நேர்மை,, நீதிக்கு வேண்டி போராடும் ஆளு ,, இவருக்கு கொஞ்சம் அன்னை சோனியா கடை கண் காட்டினால் போதும் நிச்சயமாக காங்கிரஸ்தான் அடுத்த ஆட்சி ,,பின்னர் இந்த திராவிட கட்சிகள் எல்லாம் தூக்கு தூக்கியாக மாறும்,,, இவரின் கையை கொஞ்சம் பல படுத்தினால் போதும்,,,,ஏன்தான் சோனியாவுக்கு இன்னும் புரியவில்லை,,, ராகுல் கூட தலை அசைத்துவிட்டார்,, மறுபடியும் இந்தியாவை காங்கிரஸ் ஆளும் அந்த பொற்கால நாள் வரத்தான் போகிறது,,, அந்த பொற்காலம் வெகு தூரமில்லை,,, இன்னும் சோனியா கொஞ்சம் தீவிர முயற்சி எடுத்தால் போதும்,, இங்குள்ள தலைவர்களை கொஞ்சம் பேசாவிட்டால் போதும்,,, இளங்கோவனுக்கு தலைவர் பதவி உடனே கொடுத்தால் நிச்சயமாக காங்கிரஸ் மறுபடியும் சிம்மாசனம் ஏறும் ,,,, இல்லை என்றால் இதே போல் அடுத்தவர் எச்சிலைக்கு கோஷ்டி அடிதடி தான்,,,...
veera - chennai,இந்தியா
2010-09-11 05:15:04 IST
KVT is the bridge between Karuna and sonia. How he will be removed...
கலைச்செல்வன் - பால்டிமோர்யுஎஸ்ஏ,இந்தியா
2010-09-11 04:14:40 IST
முதலில் உன்னை காங்கிரசை விட்டு நீக்கவேண்டும்.இன்றோ ?! நாளையோ ?! என்று இழுத்துக்கொண்டு, மரணப்படுக்கையில் கிடக்கும் காங்கிரசை உடனடியாக புதை குழிக்கு அனுப்ப முயலும் உன்னை, உடனடியாக கட்சியிலிருந்து நீக்கினால்தான் கொஞ்சகாலத் திற்காவது காங்கிரஸ் தமிழகத்தில் உயிர்வாழும். தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமையவேண்டும் என்று ஒருவரும் ஆசைப்படவில்லை. 1967 க்குப் பிறகு காங்கிரசை அடியோடு ஒழித்து காலிசெய்து விட்ட தமிழக மக்கள், காங்கிரஸ் ஆட்சியை கெட்ட கனவாக மறந்தே விட்டார்கள்.ஆனாப்பட்ட காங்கிரஸ் பாட்டனார்களே முட்டி மோதி பாச்சா பலிக்காமல் பரலோகம் போய்ச்சேர்ந்து விட்டார்கள்.பெரிய யானைகளாலேயே முடியாத காரியம் கேவலம் எலிப்புழுக்கை உன்னால்தானா முடியப்போகிறது.நல்லா இழுத்துப் போர்த்தி காங்கிரஸ் ஆட்சியைப்பற்றி பகல் கனவு காணுங்கள் ( நன்றி அப்துல் கலாம் )............
jagir - jahra,குவைத்
2010-09-11 03:22:51 IST
சூப்பர் ராஜா. கெளம்பிட்டியா....
jamal - chennai,இந்தியா
2010-09-11 02:33:38 IST
லூசுக்கு இதே வேலை...
வாசு கனடா - டொராண்டோ,கனடா
2010-09-11 01:49:10 IST
இந்த ஆள் எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்க முடியாது,ஆகையால் தங்கபாலுவுக்கு கொல்லி வைத்து அந்த பதவியை பிடிக்க முயச்சிக்கிறார்,இந்த ஆள் வாழப்படி ராமமுத்திக்கு கொடுத்த தொல்லை சொல்ல முடியாது,காங்கிரஸ் தமிழ் நாட்டில் உருப்பட கூடாது அது முழு தமிழ் இனத்துக்கும் கேடு விளைவிக்கும் சிந்தித்து செயல்பட வேண்டும் தமிழ் நட்டு மக்கள்,...
காமெடி பீஸ் - boston,யூ.எஸ்.ஏ
2010-09-11 01:16:21 IST
அப்படிபோடு. அடுத்த தலைவர் இவர்தான். அதுக்குத்தான் இந்த ஆட்டம் போட்டியா?...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-09-11 01:04:40 IST
சுத்தம். ஆமாங்க, அந்த தங்கவேலு வேஸ்ட்ங்க. நல்லா சிரிச்சிட்டு ஞானபழம் மாறி போசு கொடுக்கிறாரே தவிர ஒரு கெத்தே இல்லீங்க. அடாவடியா ஒரு ஆள தூக்கி போடுங்க. நீங்க காவடி தூக்குறத பாத்து எங்களுக்கே பாவமா இருக்கு....
zamir khan - chennai,இந்தியா
2010-09-11 00:58:23 IST
Why did you loose Kanyakumari ( Nagercoil) parliament constituency? Are you not responsible? Mr.EVKS, think it well. Now, what you are doing is nothing other than creating destruction to congress. We are doubtful whether you got something cooking in your mind. It seems you are joining hands with Ms.Jaya. How is that? EVKS control your blood pressure. There is no use and, you are spoiling your future. If you want to build congress then first strengthen Kanyakumari which use to be a congress fort. Nesamony, Ponnappa Nadar, James, Palaya, Mahadevan Pillai, Vijayaraghavan those were the pillars of the congress and had reputation among the people. Visit the villages and see how those leaders were adored by the people. When you could not with hold such a fort how you anticipate to built congress??. Secondly, stop making noise which is not going to give fruit to congress. Develop root level. Is it possible for you now? Do not just hold the tail leaving the entire animal....
srini - chennai,இந்தியா
2010-09-11 00:48:01 IST
கொஞ்சம் அந்த திருட்டு முழிய மாத்திகிட்டு நல்ல முழியோட வா...
srini - chennai,இந்தியா
2010-09-11 00:46:15 IST
முல்லை பெரியாறு பத்தி பேசற, பாலாறு பத்தி பேசவே இல்ல, அங்க காங்கிரஸ் காரன் ஆட்சி செய்யறான்னு பேசலியா, கர்நாடகவில காங்கிரஸ் ஆட்சி இருந்தப்போ காவிரி பிரச்சனைக்கு ஒண்ணுமே செய்யல, இப்பவும் மத்தியில ஒன்கட்சி தானே இருக்கு. ஒரு ஆணியும் புடுங்கல ? சரி இலங்கை தமிழர் பிரச்னையில் ராஜீவின் இலங்கை இந்திய ஒப்ந்தத்தை நிறைவேற்றுவதில் பொடியன்கள்தான் பிரச்னை செய்கிறார்கள் இல்லை என்றல் ஈழத்தில் தேனாறும் பாலாரும் ஓடும் என்று நீயும் ஒன்கட்சியில் உள்ள எல்லா ஈனர்களும் பேசி வந்திர்கள், இப்ப எல்லாம் ஒரு பொடியனையும் காணோமே, இப்ப ஆணிய புடுங்க வேண்டியதுதானே. தமிழனுக்கு சிங்களவனுக்கு இணையான குடி உரிமையை வாங்கி தரவேண்டியதுதனே, அவ்வளவு ஏன், அடி பட்டு சாவற மீனவன பத்தி பேசவே இல்ல. ஒன்கட்சிய தமிழ் நாட்டுல வளக்கறது பத்தி மட்டும் வாய் கிழியரமாதிரி பேசற....
ஜெயசங்கர் - chennai,இந்தியா
2010-09-11 00:43:35 IST
இவனால மக்களிடம் வோட்டு வாங்க வக்கு இல்ல. இவன் நியூஸ் போட்டு நீங்க ஏன் பக்கத்த வேஸ்ட் பண்றீங்க?...
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-09-11 00:26:49 IST
தங்கபாலுவை நீக்கினால் காங்கிரஸ் உருப்பட வாய்ப்பு இருக்கிறது.ஆகையால் தங்கபாலுவை நீக்க கூடாது....

கருத்துகள் இல்லை: