வெள்ளி, 10 செப்டம்பர், 2010

24வயது யுவதியை வல்லுறவுக்குட்படுத்தி பலவந்தமாக திருமணம் செய்தவரை கைதுசெய்துள்ளனர்

24வயது யுவதியை கடத்தி வல்லுறவுக்குட்படுத்தி பலவந்தமாக அவரைத் திருமணம் செய்தவரை மாத்தறை பொலிசார் இன்று கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் இந்த யுவதியை சந்தித்து தான் அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஆதரவாளர் என்றும் தொழில் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார். அதன்பின் எம்.பியிடம் கடிதம் பெற வருமாறு அக்குரஸ்ஸ என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று பின் அம்பலாங்கொடைக்கு கூட்டிப்போய் பலவந்தமாக வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் பின்னர் அந்த யுவதியையே திருமணம் செய்துள்ளார். ஓருவாறு தப்பிச்சென்ற யுவதி பொலீசில் முறையிட்டதையடுத்தே நபர் கைதாகியுள்ளார். அவர் நாமல் ராஜபக்ச எம்.பியுடன் எவ்வித தொடர்புமற்றவர் என்பதுடன் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: