வியாழன், 9 செப்டம்பர், 2010

சீனா தெற்காசியாவில் காலடி வைக்க நினைக்கிறது”

இந்தியாவுடன் உறவைப்பேண சீனா விருப்பம்

ஆசியாவின் இன்றியமையாத உறுப்பினர் என்ற முறையில், தெற்காசியாவில் அமைதி மற்றும் நிலையான அரசியல் நிலவுவதற்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சமீப காலமாக இந்திய எல்லைப் பகுதிகளில் சீன இராணுவம் அத்துமீறி வருகிறது. இதையடுத்து பிரதமர் மன் மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், சீனா தெற்காசியாவைத் தன் ஆக்கிரமிப்பில் வைத்துக்கொள்ள விரும்புவதைச் சுட்டிக் காட்டும் வகையில், “சீனா தெற்காசியாவில் காலடி வைக்க நினைக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர் பாளர் ஜியாங் யு நேற்று கூறியதாவது:- ஆசியாவின் முக்கிய உறுப்பினர்களில் ஒன்று என்ற முறையில், தெற்காசியா உள்ளிட்ட அப் பகுதியில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலைத்திருப்பதற்கு, அனைத்து நாடுகளின் பொது வளர்ச்சி மற்றும் நமது பொது நலனுக்காகவும் சீனா பொறுப்புடன் செயலாற்றும்.

கருத்துகள் இல்லை: