வியாழன், 9 செப்டம்பர், 2010

ராஜராஜ சோழன் சிலையை மீட்க முயற்சி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முதலாம் ராஜ ராஜ சோழன் வெண்கல சிலையும் ராணி சிலையும் இருப்பதாக தகவல் வெளியானது. தனியாருக்கு சொந்தமான “காளிகோ” அருங்காட்சியத்தில் சிலை இருப்பதாக “சராபி” பவுண் டேஷன் தனது இணைய தளத்தில் தகவலை வெளியிட்டது.இதையடுத்து சிலையை மீட்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் கருணாநிதி, குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். நல்லிணக்க அடிப்படையில் அந்த சிலையை குஜராத் அரசு அன்பளிப்பாக தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.இது தொடர்பாக குஜராத் முதல்-மந்திரியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார். தஞ்சை பெரிய கோவில் 1,000-ம் ஆண்டு விழா கொண்டாடப்படும் இந்த வேளையில் முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி ராணி சிலையை அங்கு இருந்தால் சிறப்பாக இருக்கும். அதனால் சிலையை வழங்கி உதவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை: