புதன், 8 செப்டம்பர், 2010

ரஜினியின் திருமணத்தைப் புறக்கணித்தார்களா?தமிழ்த்திரை உலகினர் சிலர்

தம்பதியரை மேடையிலிருந்து ரஜினி அழைத்து வந்து பெரியவர்களிடம் ஆசி பெறவைத்தார்.இயக்குநர் கே.பாலசந்தர்,மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஆர்.எம்.வீரப்பன்,  கவிப்பேரரசு வைரமுத்து, இல. கணேசன் ஆகியோர் காலில் விழுந்து வணங்கிய மணமக்களுக்கு வாழ்த்துகள் சொன்னார்கள். சிவகுமார், கமல்ஹாசன், கவுதமி, சிரஞ்சீவி,  மணிரத்னம், போனிகபூர், ஸ்ரீதேவி, மோகன்பாபு, கலைப்புலி தாணு, விஜயகாந்த், சரத்குமார், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அபிஷேக் பச்சன்,  ஐஸ்வர்யாராய், திருமாவளவன், இயக்குநர்கள் ஷங்கர், பி. வாசு, பார்த்திபன் என பிரபலங்களின் பட்டியல் காலையிலும் மாலையிலும் நீண்டது.

வரவேற்புக்கு முதல்வர் கருணாநிதி மனைவி  தயாளுவுடன் வந்திருந்தார். முதல்வரின் துணைவி ராஜாத்தி அம்மாள் மகள் கனிமொழியுடன் வந்திருந்தார். துணை முதல் வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் வி.வி.ஐ.பி.களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்தது.
வந்தாலும் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதா வரவே இல்லை! அதுமட்டு மின்றி அ.தி.மு.க.தரப்பிலிருந்தும் ஒருவரும் வராதது அங்கிருந்தவர்களை லேசாக முணுமுணுக்க வைத்தது. சற்று நேரத்திற் கெல்லாம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து வந்த மகாலிங்கம், ரஜினியைச் சந்தித்து ஓர் அன்பளிப்பைக் கொடுக்க, சில  நிமிடம் எதுவும் புரியாமல் விழித்தார் ரஜினி.பின்னர் மகாலிங்கமே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுசிரித்து கைகுலுக்கியஅவர், மணமக்களைக்கூட வாழ்த்தாமல்து ரிதகதியில் நகர்ந்துவிட்டார்.
பையனூரில் உருவாகவிருக்கும் கலைஞர் நகர் அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு ஜெயலலிதாவுக்கு எரிச்சல் ஊட்டியிருக்கலாம். அதனால் தான் வரவில்லை என்பதாக சொல்லிக் கொண்டார்கள். ‘‘சுயநலத்துக்காக வேலை செய்பவர்கள் சீக்கிரமே களைப்பு அடைந்துவிடுவார்கள். பொதுநலத்துக்காக வேலை செய்பவர்கள்  களைப்படையவே மாட்டார்கள்.கலைஞர் பொதுநலத்துக்காக வேலை செய்வதால் அவருக்கு களைப்பே ஏற்படுவதில்லை!’’ எனப் பேசியிருந்தார் ரஜினி.
இந்தப் பேச்சு ஜெயலலிதாவை வெறுப்பேற்றி இருக்கலாம். இதனால்தான் ரஜினி வீட்டுத் திருமணம் முடிந்த மறுநாளே, கலைஞரின் பொதுநலம் -சுயநலம்பற்றியதாக்குதல் அறிக்கையைஜெயலலிதா வெளியிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஜெயலலிதா வராமல் போனதற்கு அந்தக் காரணங்கள் சரி. ரஜினிக்கு அடுத்த பட்டியலில் உள்ள நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சிம்பு உள்பட முக்கியமானவர்கள் யாரும் வரவில்லை என்பது திரையுலகத்தினரிடையே  பேச்சாக அடிபட்டது. அதுமட்டுமின்றி சத்யராஜ், வடிவேலு, விவேக், செந்தில், கவுண்டமணி போன்றவர்களும், ஸ்ரேயா, ஸ்நேகா உள்பட பிரபல இளம் நடிகைகள் பலரும் திருமணத்திற்கு வரவில்லை.மேலும் இளையராஜா,பாரதிராஜா உள்பட முக்கியப் புள்ளிகளும் ஆப்சென்ட்.
முறையாக அழைக்கப்படாததே காரணம் என பலர் சொன்னாலும் தமிழ்த்திரை உலகினர் சிலர் ரஜினியின் திருமணத்தைப் புறக்கணித்தார்களா? என்ற பேச்சும் அடிபடுகிறது.

கருத்துகள் இல்லை: