வியாழன், 9 செப்டம்பர், 2010

வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும

வடக்கில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும். அதன் பின்னர் வடக்கின் சிவில் நிர்வாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுமென இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடற்படைத் தளபதி வைட் அட்மிரல் திஸர சமரசிங்க மற்றும் விமானப் படைத்தளபதி ரொஷான் குணத்திலக ஆகியோர் சாட்சியமளித்தனர்.
இச் சாட்சியத்தின் போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: