புதன், 8 செப்டம்பர், 2010

நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவில் வரலாறு காணாத ஜன சமுத்திரம்

நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நேற்று 7ம் திகதி நடைபெற்ற போது பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர்த்திருவிழா நேற்று அதிகாலை ஆரம்பமானது. தேர்த்திருவிழாவினைக் காண யாழ். குடாநாட்டில் இருந்தும் தென் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் வருகை தந்திருந்தனர். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரும் பெருமளவில் வருகை தந்திருந்தனர். நேற்று அதிகாலை தொடக்கம் ஆலயத்தை நோக்கி பெருந்தொகையான பக்தர்கள் ஆலயப் பிரதேசம் சமுத்திர வெள்ளமாகக் காட்சியளித்தது. பொலிஸார் ஆலய வளாகத்தில் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அனைத்து பொலிசாரும் தங்களினது பாதத்தில் இருந்த பாதணிகளை அகற்றிய நிலையில் காணப்பட்டனர். ஆலயத்திற்குள்ளேயும் ஆண் பொலிஸாரும், பெண் பொலிஸாரும் சாதாரண பொதுமக்களைப் போல உடையணிந்து காவல்கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். (மேலும்) 08.09.10

கருத்துகள் இல்லை: