இனி மக்களுக்கு கருத்து சொல்லும் வகையிலான படங்களை எடுக்கப் போவதில்லை. நானும் அதிரடி மசாலா படங்களைத் தரப்போகிறேன், என்றார் இயக்குநர் சாமி.
இயக்குநர் சாமி, சென்னையில் நேற்று சினிமா நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "130 தியேட்டர்களில், சிந்து சமவெளி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படித்த, சுயமாக சிந்திக்கும் அனைவரும் அந்த படத்தை கொண்டாடுகிறார்கள்.
சில சமூக விரோதிகள், கலாசார காவலர்கள் என்ற போர்வையில் பெண்களின் சுதந்திரத்துக்கு எதிராக செயல்பட்டு, படம் பார்க்க வரும் பெண்களை திசை திருப்புகிறார்கள். தியேட்டரின் வாசலில் நின்றுகொண்டு படம் பார்க்க வரும் பெண்களிடம் படத்தை பற்றி தவறாக எடுத்துக்கூறி, அவர்கள் மனதை குழப்புகிறார்கள். அதையும் மீறி தெளிவான பெண்கள் படத்தை பார்த்து பாராட்டுகிறார்கள்.
இந்தப் படத்தை எதிர்ப்பவர்களிடம் நான் கேட்பது, பெண்களுக்கென்று தனிப்பட்ட ஆசை கிடையாதா? அவர்கள் உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தக் கூடாதா? பெண்கள் பார்க்கும் படத்தை கூட, பிற்போக்கு மனம் படைத்த சில ஆண்கள்தான் முடிவு செய்ய வேண்டுமா?
படத்தின் விளம்பரத்துக்காக, என் காரை நானே உடைத்துக்கொண்டதாக இன்னும் சிலர் வதந்தி பரப்புகிறார்கள். போலீசார் என்னை கைது செய்யப்போவதாக பயமுறுத்துகிறார்கள்.
அதனால், என் படங்களின் மூலம் பொதுமக்களுக்கு கருத்து சொன்னது போதும் என்று நினைக்கிறேன். இனிமேல், சர்ச்சைக்குரிய படங்களை இயக்குவதில்லை என்ற முடிவு நான் வந்து விட்டேன். நானும் அதிரடியான மசாலா படங்களைத் தரப் போகிறேன்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக