சனி, 11 செப்டம்பர், 2010

பாலாவின்அவன் இவன,்்மெல்ல கசிந்துவரும் தகவல்கள

அவன் இவன்' சில தகவல்கள் பலாவின் படம் என்றாலே படம் முடிந்து திரைக்கு வரும்வரை மர்மதேசமாகவே இருக்கும். ஆனால் அவன் இவன் படம்தொடங்கியதில் இருந்தே படம் குறித்த ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.விஷால் இதில்திருநங்கையாக நடிக்கிறார்... கிராமத்தில் முன்பு, வட்டமாக ஒட்ட முடிவெட்டிக்கொள்வார்கள். ஆர்யாவுக்கு இதேபோன்றஒரு வித்தியாசமான கெட்டப்... இப்படி அடிக்கடி சில தகவல்கள் வெளியாகின்றன.  இதேமாதிரி அண்மையில் வெளியான ஒருசிலவிஷயங்கள் அவன் இவன் எப்படிப்பட்ட படம் என்பதை சொல்லாமல் சொல்லிப் போகுது.நான்கடவுள் படத்திற்கான தேசிய விருதினை பெற்ற மகிழ்ச்சியோடு அவன் இவன் படத்தை தொடங்கினார் பாலா. விஷால்,ஆர்யா கதைநாயகர்கள். நாயகி ஜனனி ஐயர். நந்தா படத்திற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்குஇசையமைக்கிறார்.பாலாவுக்கு பிடித்தமான இசை என்றால் அது இளைய ராஜாவினதுதான். ஆனால் இந்தப் படத்திற்கு பல இடங்களில் ரீமிக்ஸ் இசை தேவைப்படுதாம். அதனால், ரீமிக்ஸ் பற்றி இயராஜாவிடம் எப்படி கேட்க முடியும் என்ற தயக்கத்தால் யுவனை அணுகினாராம் பாலா. (ரீமிஸ் இசைப்பதில்லை என்பது இளையராஜாவின் விடாப்பிடியான கொள்கையாம்.) ஒளிப்பதிவு -ஆர்தர்>வில்சன். வசனம் - பிரபல எழுத்தாளர் எஸ். ரா கிருஷ்ணன். இவர் பாபா, சண்டைக்கோழி, சுல்தான் தி வாரியார் ஆகியப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.தயாரிப்பு - கல்பாத்தி எஸ். அகோரம்.பொதுவாகவே பாலாவின் படம் என்றாலே நாடாறு மாதம், காடாறு மாதம் என்று வருச கணக்காக எடுக்கப்படும். ஆனால்இந்தப் படத்தை ஆறே மாதத்தில் முடித்துக் காட்டுகிறேன் என்ற சவாலின் பகிரங்கமானஅறிவிப்புடன் தொடங்கினார் பாலா.ஏதோ ஒரு வேகத்துல அவர் அப்படி சொல்லிவிட்டாலும் வழக்கம்போல் ஆறு மாதம் தாண்டி எட்டு மாதத்தை கடந்து படப்பிடிப்பு மெல்ல நடந்து கொண்டிருக்கிறது. அதனால் என்ன... தரமான படம் ஒன்றுக்கு எத்தனை மாதம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்.அதுவும் இது பாலாவின் படம், நடப்பதுதானே நடக்கும். என்ற சமாதானத்தோடு பாலா சொன்ன ‘ஆறுமாதகால படம்’ எனும் சவாலை மறந்து விடலாம்.

ஆனால் அவர் சொன்ன இன்னொன்றுதான் இங்கு கவனிக்கப் படவேண்டியது.
  
“அவன் இவன் எனது வழக்கமான படமாக இருக்காது” என்றும் சொல்லியிருந்தார் பாலா. ஆனால் இந்தப் படம் பற்றி திரைவட்டாரத்தில் மெல்ல மெல்ல கசிந்துவரும் தகவல்கள் இது பாலாவின் வழக்கமான படம்தான் என்று சத்தியம் செய்கின்றன.. 

அதென்ன வழக்கமான பாலா படம்... 
“அவன் இவன்”-  சேது, நந்தா, பிதாமகன் போல் புதுமையான திரைக்கதை அமைப்பா... இல்லையென்றால், நாம் தினமும் சாலையோரம் சந்தித்து இரக்கத்தோடோ, அலட்சியத்தோடோ கடந்து போன மாற்றுத் திறனாளியரின் நரக வேதனையை வெளிச்சம் போட்டுக் காட்டிய நான் கடவுள் படத்தினைப் போன்ற கதை அமைப்பா... என்று திரைவட்டாரத்தில் விசாரித்தால், அவர்கள் சில விளக்கம் தருகிறார்கள். 

வியக்கவைக்கும் கதை, திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டிய பாலாவின் வழக்கமான சில விஷயங்கள் இந்தப் படத்திலும் இருக்காம்.

குடும்பத்துடன் வந்து படம் பார்த்து சிரிச்சுட்டே போற மாதிரியான ஜாலியான படமாம் அவன் இவன்.  இதில் அவன் - விஷாலும், இவன்-ஆர்யாவும் சகோதரர்கள். பிதாமகனில் சூர்யா பல இடங்களில் விதவிதமான தொழில் செய்து ஏமற்றுவதைப் போல், இருவரும் பல்வேறான கெட்டப்பில் வந்து பல இடங்களில் திருடுகிறார்கள். கிட்டத்தட்ட பிதாமகனில் விக்ரம் கெட்டப் போன்று ஆர்யாவுக்கும் இதில் தலைமுடி அமைப்பு.

இதுபோக, சேது படத்தில் ஏர்வாடி மனநிலை பாதிக்கப்பட்டோர் காப்பகம் காட்டப்பட்டிருக்கும். இதில் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை. (கடந்த சில நாட்களாக பாலா தனது படப்பிடிப்பை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் நடத்திவருகிறார்.)  

மேலும் பிதாமகன், நான் கடவுள் படத்தில் பல ஹிட்டான சினிமா பாடல்கள் கலந்து மிக்ஸிங் பாடல் ஒன்று காட்சியாக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் பாடலில் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் பல ரீமிக்ஸ் இசையினை கலந்து மிரட்டலான ஒரு புது இசையமைப்பை உருவாக்கியுள்ளாராம் யுவன்.

இவை போன்ற விஷயங்களில்தான், ‘அவன் இவன்’ பாலாவின் வழக்கமான ஸ்டைலில் அமைந்தப் படம் . 

பாலாவின் எல்லாப் படங்களிலும் ‘கஞ்சா’ முக்கிய இடம் பெற்றிருக்கும். இந்தப் படத்தில் அதுவும் இருக்கலாம்...! 

கருத்துகள் இல்லை: