வெள்ளி, 10 செப்டம்பர், 2010

சரத் பொன்சேகா: நாட்டை ஊழலிலிருந்து மீட்பதற்கு சிறை செல்ல அஞ்சப் போவதில்லை

தன்னை சிறையில் தள்ளவும் அரசியல் ரீதியாக கொலை செய்வதற்குமே தனக்கெதிராக இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டதாக ஜெனரல் சரத்பொன்சேகா இன்று நடைபெற்ற இரண்டாவது நீதிமன்ற அமர்வின்போது தெரிவித்துள்ளார். நாட்டை ஊழலிலிருந்து மீட்பதற்கு சிறை செல்ல அஞ்சப் போவதில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நீதிமன்ற விசாரணையில் எனக்கு நம்பிக்கையில்லை. சாட்சியங்கள் எப்படியிருப்பினும் குற்றவாளியாக காணப்பட்டு நான் சிறையில் தள்ளப்படுவேன் என்பது எனக்குத் தெரியும். என்மீதான குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: