செவ்வாய், 7 செப்டம்பர், 2010

Sri Ranga MP சிறிறங்காவும் பல்டி. ஐ.தே.க யினர் அரசியல் யாப்பு மாற்ற பிரதிக்கு எரியூட்டினர்.

அரசியல் யாப்பு மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் ஐக்கிய தேசியக் கட்சியினர் பாராளுமன்றிற்கு வெளியே அரசியல் யாப்பு மாற்ற பிரதியை எரித்துள்ளனர். கறுப்பு உடைகள் அணிந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே , ஜெயலத் ஜெயவர்த்தனா, சஜித் பிறேமதாஸ, தயாசிறி ஜெயசேகர , ஜோன் அமரதுங்க ஆகியோர் இச்செயலைச் செய்துள்ளனர்.

இன்று ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பேசிய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க , அரசியல் யாப்பு மாற்றம் ஓர் மோசடி எனவும் ஒழுங்கான முறையில் அது மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நுவரேலிய மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்பி சிறிறங்கா அரசின் அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: