சனி, 11 செப்டம்பர், 2010

கை எலும்பு உடைவுக்குப் புக்கைகட்டி குணமாக்க முயன்ற இளைஞருக்கு விரல்களுடன் கையினை இழக்கும் அபாயநிலை

கை எலும்பு உடைவுக்குப் புக்கைகட்டி குணமாக்க முயன்ற இளைஞருக்கு விரல்களுடன் கையினை இழக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, கடந்த 3ம் திகதி வெள்ளிக்கிழமை வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் வீடு நிர்மாணிக்கும் வேலையில் ஈடுபட்ட இளைஞர் சாரமரம் முறிந்து வீழ்ந்தபோது கையின் மணிக்கட்டுப் பகுதி உடைந்தது. இதனை குணப்படுத்த அந்த இளைஞர் புக்கை கட்டினார். வேதனை அதிகரிக்கவே அதனைத் தாங்க முடியாமல் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த இளைஞர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது மணிக்கட்டுப் பகுதி எலும்பு உடைந்ததுடன் புக்கை கட்டிய இடத்தில் புண் ஏற்பட்டிருந்தது. உடனடியாக வைத்தியசாலையில் பி.ஓ.பி. போடப்பட்டது. தென்மராட்சிப் பிரதேச மக்களின் வைத்திய தேவைகளுக்கான சகல வசதிகளும் சாவகச்சேரி வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்படும் மக்கள் மூட நம்பிக்கைகளை கைவிட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுமாறு வைத்திய வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளன.

கருத்துகள் இல்லை: