வியாழன், 9 செப்டம்பர், 2010

்கிழக்கு மாகாண CM: தமிழ் மக்களுக்கு இந்தத் தமிழ் கூட்டமைப்பு செய்யும் பரிகாராம் என்ன?

எவ்வளவோ எதிர்பார்ப்போடு வாக்களித்த எமது தமிழ் மக்களுக்கு இந்தத் தமிழ் கூட்டமைப்பு செய்யும் பரிகாராம் என்ன: கிழக்கு மாகாண முதல்வர்

கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சினால் மட்டக்களப்பு மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு களுதாவளை மகாவித்தியாலயத்தில் (07.09.2010)இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அவர் தொடர்நது குறிப்பிடுகையில், தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நாம் இல்லாதொழிக்க வேண்டும். இவர்களால் எம் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைத்ததும் இல்லை இனிமேலும் கிடைக்கப் போவதுமில்லை.
எனவே மக்கள் இந்தத் தருணத்தில் சிந்தித்துச் செயற்பட வேணடும்.
மேலும் தொடர்நது பேசுகையில் எவ்வளவோ எதிர்பார்ப்போடு வாக்களித்த எமது தமிழ் மக்களுக்கு இந்தத் தமிழ் கூட்டமைப்பு செய்யும் பரிகாராம் என்ன?
எதுவுமே இல்லை.
காலங்காலமாக எம்மக்களை ஏமாற்றியே அரசியல் நடாத்தி இருந்திருக்கின்றார்கள்.
தற்போது ஏமாற்றிக் னெகாண்டே அரசியல் நடாத்துகின்றார்கள்.
உதாரணமாகச் சொல்லப் போனால் பத்திரிகைகளில் பேட்டி வழங்குவது. அதாவது அத்து மீறிய குடியேற்றம் செய்கிறது அரசு அதற்கு உடந்தையாக செயற்படுகிறது கிழக்கு மாகாண சபை என்று மக்களை திசை திருப்புவது. நான் இவர்களிடம் கேட்கின்றேன் கிழக்கில் எத்தனை அத்து மீறிய சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.
இதற்கு கிழக்கு மாகாண சபை எங்கே எப்போது அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. முடியுமானால் சொல்லட்டும். முதலில் அத்து மீறிய குடியேற்றம் என்பதன் வரைவிலக்கணத்தை இவர்கள் புரிந்து கொண்டு பேச வேண்டும்.
எது தொடர்பிலும் பூரணமான தரவுகள் இல்லாமல் வெறுமனே பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பதும் அத்தோடு அநாமதய இணையத் தளங்களுக்குச் செவ்வியளிப்பதுமாக இவர்களது வாழ்நாள் கழிகின்றது.
மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் எத்தனை அபிவிருத்தித் திட்டங்களைச் செய்திருக்கின்றார்கள் என்று நான் கேட்கின்றேன்.
நிச்சயமாகச் சொல்லமுடியும் எதுவும் இல்லை என்று.
தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைவரான சம்பந்தன் அவர்கள் இன்னும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியினைச் செலவு செய்யவில்லை. காரணம் அவர் நாட்டில் இருப்பதேயில்லை.
மட்டக்ளப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு எம்.பி கோயில்களில் பூஜை செய்து திரிகின்றார். அத்தோடு இருக்கும் இடம் எல்லாம் கோயில் கட்ட நிதி சேர்க்கின்றார். போதாமல் புலம்பெயர் தமிழ்களிடம் நிதி சேகரித்து கோயில் கட்டப் பாடுபடுகின்றார்.
பாருங்கள் மக்களே நன்றாகச் சிந்தியுங்கள் கோயில் என்பது எமது மக்களின் நிதியைக் கொண்டே எம்மால் கட்ட முடியும். இவர் வெளிநாட்டிற்குச் சென்று கோயில் கட்ட நிதி சேகரிக்கின்றார்.
மக்களுக்கு எத்தனையோ அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றது அதனைத் தீர்பதற்கு வழிகளைத் தேடாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டு அரசியல் லாபம் தேடுகின்றார்கள்.
இவர்களுக்கு எதிர்வருகின்ற காலங்களில் மக்கள் சரியான பாடத்தினைப் புகட்டி இவர்களை ஓரங்கட்ட வேண்டும் அப்போதுதான் எமது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கம் என மிகவும் காரசாரமாக முதலமைச்சரது பேச்சு அமைந்திருந்ததது.

கருத்துகள் இல்லை: