சனி, 11 செப்டம்பர், 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் தொடக்க நாளில் அனைத்து திரையரங்குகளும் நல்ல ரெஸ்பான்ஸ்

ஆர்யா, நயனதாரா [^] நடித்துள்ள பாஸ் என்கிற பாஸ்கரன் இன்று தமிழகம் [^] எங்கும் திரைக்கு வந்தது. தொடக்க நாளில் அனைத்து திரையரங்குகளும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாம்.

ராஜேஷ் இயக்க, ஆர்யா நாயகனாக நடித்துள்ள படம் [^] பாஸ் என்கிற பாஸ்கரன். இதில் அவருக்கு ஜோடியாக நயனதாரா நடித்துள்ளார். காமெடிக்கு சந்தானம். படம் முழுக்க முழுக்க காமெடிக் கதை என்பதால் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் இன்று பாஸ் என்கிற பாஸ்கரன் திரைக்கு வந்தது. முதல் நாளிலேயே அனைத்து திரையரங்குகளும் நிரம்பி வழிந்துள்ளதால் படக் குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையடுத்து படத்தை சட்டுப்புட்டென்று ஹிட் ஆக்கும் வகையில் ஊர் ஊராகப் போய் புரமோஷன் வேலைகளில்இறங்கப் போகின்றனராம். ராஜேஷ், ஆர்யா, சந்தானம் ஆகியோர் இந்த புரமோஷன் பயணத்தில் ஈடுபடவுள்ளனராம். நாயகி நயனதாரா வர மாட்டார் என்று தெரிகிறது.

சமீபத்தில் மதராச பட்டினம் படத்திற்காக இப்படி நாயகி எமி ஜேக்சனுடன் ஆர்யா ஊர்வலம் வந்தார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அதே பாணியில் பாஸ் படத்திற்கும் திட்டமிட்டுள்ளனராம்.

கருத்துகள் இல்லை: