புதன், 8 செப்டம்பர், 2010

தமிழ் நடிகர் முரளி மரணம்

பிரபல திரைப்பட நடிகர் முரளி சென்னையில் காலமானார்.


ஏராளமான தமிழ்ப்படங்களில் முன்னணி நாயகனாக நடித்து வந்த முரளி(46 வயது), நெஞ்சுவலி காரணமாக சென்னை   போரூர் ராமச்சந்திரா  
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.   மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவரின் உயிர் பிரிந்தது.

1984 ம் ஆண்டு பூவிலங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் முரளி.  தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படத்தில் நடித்தார்
இதயம்,புதுவசந்தம்,பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக்கொடி கட்டு என்று பல சூப்பர் ஹிட் படங்களைத்தந்த முரளி என்றும் மார்க்கண்டேயன் என்பது மாதிரி இதயம் படத்தில் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இளமையாக இருந்துவந்தார்.

கடல்பூக்கள்,தேசிய கீதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து வந்த
இவரது மகன் ஆதர்வா நாயகனாக நடித்த ‘பாணா’திரைப்படம் தற்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

நாயகனாகிவிட்ட மகன் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முரளி,   ‘’30 வருட திரையுலக வாழ்க்கையில் நான்
ஆயிரம் தவறுகள் செய்திருக்கிறேன். அதையெல்லாம் மன்னித்து தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். என் மகன் அதர்வாவிடம், தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லியிருக்கிறேன்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‘பகல் நிலவு’, ‘இதயம்’ படங்களில் நடித்தேன். அதே நிறுவனம் என் மகனை ஹீரோவாக
அறிமுகம் செய்கிறது.

‘பூவிலங்கு’ படத்தில் நான் நடித்திருந்ததை விட அதர்வா சிறப்பாக நடித்திருக்கிறான். எனக்கு டான்ஸ் ஆடவே வராது. அதர்வா
நன்றாக டான்ஸ் ஆடியிருக்கிறான். ஒரு நடிகன் மகன் ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம். இங்கு வந்திருந்தவர்கள், அதர்வாவை பாராட்டினார்கள். எனவே அவன் ஜெயித்து விடுவான் என நம்புகிறேன்’’என்று கூறியிருந்தார்.

பணம் முக்கியமல்ல; நல்ல படம்தான் முக்கியம் என்று ஆதர்வாவுக்கு அறிவுரை கூறி தனது மகனின் அடுத்தடுத்த படங்களில்
கவனம் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில் திடீர் நெஞ்சுவலியால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பலனின்றி இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது.
தமிழ் உணர்வாளர்:

பாணா காத்தாடி தவிர தனது படங்கள் அனைத்திலும் ஹீரோவாகவே நடித்த பெருமைக்குரியவர் முரளி. முரளியின் தந்தை கன்னடர் என்றாலும், அவரது தாய் ஒரு தமிழ்ப் பெண். இதனால் பிறந்தது பெங்களூர் என்றாலும் சுத்தத் தமிழராக இருந்தவர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களின்போது கன்னட திரையுலகின் எதிர்ப்பையும் மீறி கலந்து கொண்டு தனது உணர்வைப் பதிவு செய்தார்.


கருத்துகள் இல்லை: