செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது

வரலாற்று புகழ்மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் உற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்றைய தினம் (7) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஓசையுடன் தேர்த் திருவிழா நடைபெற்றது.

இன்று அதிகாலை தொடங்கிய நித்திய பூஜை வசந்தமண்டப பூஜைகளைத் தொடர்ந்து காலை 7.15 மணிக்கு முருகப்பெருமான் தங்கத் தேரில் எழுந்தருளி வந்து அடியவர்களுக்கு அருட்காட்சி கொடுத்து 9.25 மணியளவில் தேர் முட்டியை வந்தடைந்தது.

இம்முறை வெளிநாடுகளில் இருந்தும் தென்னிலங்கையில் இருந்தும் மன்னார் வவுனியா திருகோணமலை போன்ற பிற மாவட்டங்களிலிருந்தும் சுமார் இரண்டு இலட்சம் பக்தர்கள் பங்குபற்றினர்.

எனவே பக்தர்களுக்குரிய வசதிகளைப் பொலிஸாரும் மாநகர சபையினரும் மேற்கொண்டிருந்தனர்.  மக்களுக்கு வேண்டிய சுகாதார குடிதண்ணீர் வசதிகள் போன்றவற்றை யாழ். மாநகரசபையும் மற்றும் ஆலயச் சூழலில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காகவும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் சுமார் 600 பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். 

இதற்கும் மேலாக பரியோவான் முதலுதவிப் படையினர் சாரணர்கள் மற்றும் தொண்டர் படையினரும் சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முருகபெருமானின் தீர்த்தத் திருவிழா நாளை தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்த

கருத்துகள் இல்லை: