புதன், 8 செப்டம்பர், 2010

18ம் திருத்தச்சட்டத்திற்கு எதிரான ஜேவிபி ஆர்பாட்டத்தில் ஜனவெள்ளம்.

அரசியல் யாப்பின் 18ம் சரத்தில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவர் இருமுறைகளே பதவி வகுக்கமுடியும் என்ற வரையறையை முடிவுக்கு கொண்டுவருமுகமாக அரசினால் மேற்கொள்ளப்படும் அரசியல் யாப்பு மாற்றத்திற்கு எதிராக ஜேவிபி யினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். கொழும்பு நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிந்த நிலையில் இவ்ஜனவெள்ளம் ஒன்று சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கொழும்பு ஆயுர்வேத சந்தியில் ஆரம்பமான இவ்வார்பாட்டம் , பாராளுமன்ற முன்றலை சென்றடைந்துள்ளது. 
அதேநேரம் அரசியல் யாப்பின் மாற்றத்தினை எதிர்த்து இலங்கை சட்டத்தரணிகள் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் ஆர்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். பிரேத பெட்டி ஒன்றில் அரசியல் யாப்பு மாற்றத்தின் மாதிரிப் பிரதியை நீதிமன்றை சுற்றி சுமந்துவந்த சட்டதரணிகள் பிரேத பெட்டிக்கு தீமூட்டினர்

கருத்துகள் இல்லை: