புதன், 8 செப்டம்பர், 2010

போலீஸ் விசாரணையில் நடிகை அனகா நழுவல்:நாடோடிகள், கோரிப்பாளையம் ஆகிய படங்களை தயாரித்த மைக்கேல் ராயப்பன் இப்போது, `சிந்து சமவெளி' படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை சாமி டைரக்டு செய்துள்ளார்.

மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பது
போல் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் திரைக்கு வந்துள்ள இந்த படம், பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
உறவுகளை கொச்சைப்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டு, இது மாதிரி  திரைப்படம் எடுத்ததற்காக என்னை மிரட்டுகிறார்கள்.  எனக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தனர்.  என் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். 

காரை உடைத்துவிட்டனர் என்று சென்னை கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து படத்தின் நாயகி அனகா,படத்தில் கதாநாயகியாக, மருமகள் கதாபாத்திரத்தில் நடித்த அனகாவுக்கு கொலை மிரட்டல் வந்து இருக்கிறது என்று பேட்டி கொடுட்திருந்தார்.
அவர்,   சிந்து சமவெளி, ஒரு கருத்தை போதிக்கிற கதை. மாமனார்-மருமகள் இடையே உறவு இருப்பது போல் கதை அமைந்திருந்தாலும், அந்த உறவினால் ஒரு குடும்பமே அழிந்து போவது போல் காட்டியிருக்கிறார்கள். இதுபோன்ற தப்பான உறவுக்கு இதுதான் தண்டனை என்ற கருத்து படத்தின் முடிவில் சொல்லப்பட்டு இருக்கிறது.
அதனால்தான் அந்த படத்தில் நடித்தேன். ஆனால், எனக்கு பல முனைகளில் இருந்தும் மிரட்டல்கள் வருகின்றன. படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்ப்பதற்காக, சென்னையில் உள்ள மினி உதயம் தியேட்டருக்கு சென்று இருந்தேன். அப்போது சில பெண்கள் என்னை திட்டினார்கள்.
கடந்த 2 நாட்களாக, போனில் மிரட்டல்கள் வருகின்றன. மாமனார்-மருமகள் இடையே கள்ள உறவு இருப்பது போன்ற கதையில் நீ எப்படி நடிக்கலாம். தமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்துகிற உன்னை தீர்த்துக்கட்டி விடுவோம் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து போலீசார் அனகாவிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.  அவரோ, இந்த மிரட்டல் பற்றி இயக்குநருக்குத்தான் தெரியும் என்று நழுவிவிட்டார்.
சாமியோ மிரட்டல் ஆசாமிகள் குறித்து முன்னுக்குப்பின் முரனாண தகவல் கொடுத்துவருகிறார்.  இதனால் பட விளம்பரத்திற்காக சாமி இப்படிச்செய்தாரா என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 
சாமியின் மீதான சந்தேகம் உறுதியானால் அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: