திங்கள், 22 நவம்பர், 2021

எம்ஜியார் ஜெயலலிதாவின் வீட்டில் ஜெய்சங்கரை துப்பாக்கியால் சுடப்போனார் .. குட்டி பத்மினி உடைத்த ரகசியம்

 Mathivanan Maran -  Oneindia Tamil :   சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் நடிகர் ஜெய்சங்கர் நெருங்கிப் பழகியதால் அவரை சுடுவதற்காக துப்பாக்கியுடன் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சென்றார்;
ஆனால் ஜெய்சங்கர் அங்கே அப்போது இல்லை என்று நடிகை குட்டி பத்மினி தெரிவித்திருக்கும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வீடியோ பதிவில் குட்டி பத்மினி கூறியிருப்பதாவது; ராமண்ணான்னு ஒரு டைரக்டர். அவருடைய நீ படத்தில் ஜெயலலிதா அக்காவும் ஜெய்சங்கர் அங்கிளும் ஒன்னா ஆக்ட் பண்றாங்க..
ஜெயலலிதா அக்காவுக்கு யாராவது நல்லா இங்கிலீஷ் பேசுனா அவங்களை ரொம்பப் பிடிக்கும்.
ஜெய்சங்கர் அங்கிளும் நல்லா பேச இரண்டு பேருக்கும் இடையே நல்ல நட்பு உருவாகுது.


அதற்கு அடுத்து யார் நீ படத்துலயும் தொடர்ந்து நடிக்கிறாங்க.
அப்ப என்ன ஆகுதுன்னா இவங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரி..
ஸ்டுடியோவில் இருக்கும் போது எப்பவுமே ஒரு ஓரமாக ஒரு சேரில் கால்மேல் கால் போட்டுகிட்டு புத்தகம் வெச்சுகிட்டு யார் கூடயும் பேசாத அம்மு அக்கா (ஜெயலலிதா), ஜெய்சங்கர் அங்கிளோட மட்டும் அடிக்கடி கலகலன்னு பேசுறாங்க..  

சிரிச்சு சிரிச்சு பேசுறாங்க.. ரெண்டு பேரும் பழகுறதில ஒரு சந்தோம் தெரியுது.
இது எப்படியோ ஒரு கிசு கிசுவாக போய் புரட்சித் தலைவரோட (எம்.ஜி.ஆர்) காதுவரைக்கும் போயிடுது.. அவ்வளவுதான் ஒருநாள் என்ன பண்றாருன்னா..
ஒரு துப்பாக்கியை எடுத்துக்கிட்டு ஜெய்சங்கர் அங்கிள் ஜெயலலிதா அக்கா வீட்டில் இருக்கிறதா நினைச்சுகிட்டு சுட வந்தராரு..
ஆனால் அந்த வீட்டுல நல்லவேளை அப்ப ஜெய்சங்கர் அங்கிள் இல்லை...
 இருந்திருந்தா ஜெய்சங்கர் அங்கிளை எம்.ஜி.ஆர். சுட்டிருந்தாலும் சுட்டிருப்பார்..
இவ்வாறு அந்த வீடியோவில் நடிகை குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குட்டி பத்மினி இந்த தகவலை எப்போது பகிர்ந்து கொண்டார் என்பது உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம்பெறவில்லை? இந்த வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டும் வருகின்றன.

கருத்துகள் இல்லை: