வெள்ளி, 26 நவம்பர், 2021

போரை தவிர எஞ்சிய எல்லா வழிகளையும் அடைத்து தற்கொலை அழிவுப்பாதையில்..... அந்த தற்குறி

Sugan Paris :  முழுமூட அறிவிலியும் நிர்மூடனுமான ஒரு தற்குறியின் பிறந்தநாள் இன்று.
தன்னிலும் வயதுமூத்த அரசியல் ஆளுமைகளையெல்லாம் அவன் கொன்று கொண்டிருந்தான். ஜனநாயக அரசியல் என்பது அவனுக்கு அலர்ஜி !
சமூகங்கள் அனைத்திற்குமான இயல்பான ஒரு வாழ்க்கைக்கு  அவன் இருப்பு எப்போதும்  அச்சுறுத்தலாயிருந்தது.
எப்போதும் வலிந்த ஒரு போரை நடத்திக்கொண்டு தன்பாதுகாப்பில் மிகக் கவனமாயிருந்தான். 20 000 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் அவன் யுத்த வலயத்திற்கு இழுக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
மிகப்பெரிய கோழை அவன்.தன்னை எப்போதும் கொல்ல எல்லோரும் காத்திருக்கிறார்கள் என சந்தேகத்திலேயே அவன் வாழ்க்கை அமைந்தது.
நீடித்த ஒரு போரில் தன் சமூகமும் தனது அமைப்பும் அழிந்துகொண்டிருப்பதையிட்டு அவனுக்கு எந்த மதிப்பீடுகளும் இருந்ததில்லை. எதையுமே அவனால்  புரிந்துகொள்ளமுடியாத மனக் கட்டமைப்பைக் கொண்டிருந்தான்.
ஒரு யுத்தப்பிரபுவிலும் மேலாக தனக்கான வளங்களை அனைத்து அநியாய வழிகளிலும் திரட்டி யுத்த மேலாண்மையை நிறுவி அதைக் காப்பாற்றுவதில் எப்போதும் கவனமாயிருந்தான்.
யுத்தத்தைத்தவிர இருக்கும் வேறுஎல்லா  வழிகளையும்  அடைத்து
முழுச்சமூகத்தையும் நாட்டையும் தற்கொலை அழிவுப்பாதையில் நடாத்திக்கொண்டிருந்தான்.
முழுச் சமூகங்களுமே ஒரு பணயக்கைதிகள் நிலையில் வாழவேண்டியதாயிற்று.
எப்போது இந்தச் சனியன் அழிந்துதொலையப்போறானோ என எல்லோரும் மனம் வெதும்பி வேண்டிக்கொள்ளும் நிலையில் அவன் நடைமுறை இருந்தது.
எல்லாக் கொடூரர்களுக்கும் எப்படி இறுதிமுடிவு ஒன்று இருக்குமோ அவ்வாறே அவன் அழிந்து தொலைந்தான்.
அவன் அழிவில் மகிழ்ச்சி அடைந்தவர்களும் ஆறுதல் அடைந்தவர்களுமே அனேகம்.
தாயைக் கொன்றவனுக்கும் ஊரில் நூறுபேர்.என்ற ஒரு சொல்வழக்கு உண்டு.
ஹிட்லர் போன்ற பாஸிஸ்டுகள் இப்போதும் நியோ நாஸி களால் தலைமறைவாக இருந்து நினைவு கூரப்படுகிறார்கள்.
 இறந்தவர்களின் கல்லறைகள் சேதமாக்கப்பட்டு அக் கல்லறைகளில் நாஸிக்களின் சின்னம் ஆங்காங்கே அவ்வப்போது எழுதப்படுவதுண்டு.
அதன் வழியில் ஒரு கொரூர பாஸிஸ்டின் மரணத்தையும் இன்று நினைவிற்கொள்வோர் இன்னும் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: