வெள்ளி, 26 நவம்பர், 2021

மன்சூர் அலிகான்: நடிகன் என்பதால் இப்படியா? செல்லப்பூனையின் உயிர் பறிபோனது .. நீதிமன்ற அனுமதியை ஏற்க மறுத்த நடிகர்!

Mansoor alikhan refused to go inside the house with the permission of the judge

tamil.asianetnews.com : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான் (Mansoor Ali khan), சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வருபவர். தனக்கென அரசியல் கட்சி ஒன்றையும் துவங்கியுள்ள இவர், பல்வேறு சமூக பிரச்சனைகள் மற்றும் அறப்போராட்டங்கள் மூலமாக முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அதற்க்கு சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான், சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வருபவர். தனக்கென அரசியல் கட்சி ஒன்றையும் துவங்கியுள்ள இவர், பல்வேறு சமூக பிரச்சனைகள் மற்றும் அறப்போராட்டங்கள் மூலமாக முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அதற்க்கு சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்.


இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூரலிகானின் வீடு சுமார் 2500 சதுர அடி, அளவிற்கு அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து கட்டியுள்ளதாக கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, சீல் வைப்பதற்கு முன்னதாக தனது வீட்டில் மாட்டிக்கொண்ட தான் வளர்க்கும் பூனையை மீட்பதற்காகவாவது வீட்டை திறக்க வேண்டும், என்ற கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.

வெளிநாட்டை சேர்ந்த மன்சூரலிகானின் செல்ல பூனை அந்த வீட்டுக்குள் சிக்கிக்கொண்டு சுமார் ஒரு மாத காலமாக உணவின்றியும், வெளியே வர முடியாமலும் பரிதாபமாக உயிரிழந்தது. எனவே சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி, பூனையை மீட்பதற்காக 1 மணி நேரம் மட்டும் வீட்டை திறந்துவிடுமாறு உத்தரவிட்டும், பூனை இறந்ததை அறிந்து நீதிமன்றம் அறிவித்தது போல், தனது வீட்டை திறக்க வேண்டாம், என்று மறுப்பு தெரிவித்த மன்சூரலிகான், அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு கடிதம், ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நடிகர் மன்சூரலிகான், இதுகுறித்து கூறியுள்ளதாவது, "தான் 20 வருடங்களுக்கு முன்பு வாங்கிய இந்த இடத்தில் முறையாக அனுமதி பெற்று வீடு கட்டியுள்ளேன். இன்று வரை சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாக கட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால், அந்த சொத்தை வாங்கியவர்களின் குடும்பத்தில் இருந்த பிரச்சனை காரணமாக, என் வீட்டின் மீது தவறான தகவல்களையும், புகார்களையும் பரப்பி, என் வீட்டுக்கு இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் என்னை போன்று தான் வீடு கட்டியுள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு இத்தகைய நிலை ஏற்படவில்லை. காரணம், நான் ஒரு நடிகன் என்பதால் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை கொடுத்திருக்கிறார்கள்.

1 கருத்து:

Tamil சொன்னது…


தமிழ் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தேவையான கருவிகளை www.valaithamil.com இணையதளத்தில் கண்டறியலாம்.

மேலும் வலைத்தமிழ் நடத்தும் கதை & கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு ரூ.1000 வரை பரிசு வெல்லும் வாய்ப்பையும் பெறுங்கள்.