வியாழன், 25 நவம்பர், 2021

கரூரில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பயின்ற பள்ளியின் ஆசிரியரும் தற்கொலை!

  News18 Tamil  : கரூரில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி பயின்ற பள்ளியில்,
கணித ஆசிரியராக பணியாற்றிய சரவணன் என்பவர் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி அவரது உறவினர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் மாவட்டத்தில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.  


மாணவி எழுதிய கடிதத்தில், பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மாணவி, தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்


இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூரில் மாணவ,மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் இவ்வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினார். பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மாணவி பயின்ற பள்ளியில்  கணித ஆசிரியராக பணியாற்றிய சரவணன் என்பவர் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி அவரது உறவினர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: