Sugan Paris : ஐரோப்பிய நாடொன்றில் கதிர்காமர் கொலையுடன் தொடர்புபட்ட ஒருவர் தற்போது சிறையில் இருக்கிறார்.
அரசியற் தஞ்சம் கோரும் தகுதி நிலைக்கு தான் உடந்தையாயிருந்த கதிர்காமர் கொலை உதவும் என்பது அவர் கணிப்பீடும் நம்பிக்கையுமாயிருந்தது.
எவ்வித தடுமாற்றமோ குற்றவுணர்வோ அற்று மிக இயல்பாக தான் அக் கொலையில் எவ்விதம் பங்குகொண்டேன் என அகதி அறிக்கையில் முறையீடு செய்தார்.
ஒரு கொலையாளிக்கு அரசியற்தஞ்சம் கொடுக்கும் சட்ட நடைமுறை சர்வதேசமுறைகளில் இல்லை.
அறியப்பட்ட சர்வதேச பிரமுகர்கள் பலர் இன்றும் சர்வதேசச் சிறைகளில் இருக்கும் பின்னணியும் இதுவே !
அதிலும் லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற உலகப்பிரசித்தமான அரசியல் நிபுணர், அறிஞர் மீதான கொலையென்பது எவரையும் அதிர்ச்சிகொள்ள வைப்பது.எவ்விதத்திலேனும் ஈடுசெய்யமுடியாத இழப்பும், மன்னிப்பேயற்ற செயலும் அது.
அகதி முறையீடு பரிசீலனைக்கு வந்தவுடன் அவர் முறையீடு சர்வதேச குற்றப்பிரிவிற்குப் போய் நிபுணர்கள் இந்தத் தமிழ்மகனுக்கும் கதிர்காமர் கொலைக்குமான தொடர்பை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து அறிக்கையிட்டார்கள்.
கதிர்காமர் கொலையோடு தொடர்புடைய வீட்டை தான் எப்படி வாடகைக்கு எடுத்தது ,புலிகளின் மேல்மட்டங்களுடன் எவ்விதத்தில் தான் தொடர்புகளைப் பேணியது இப்படியாக அனைத்தையும் நடந்தது நடந்தபடியாக ஒப்புவித்த விதத்தில்
ஐரோப்பிய நீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனை விதித்திருக்கிறது.
ஆகையால் மக்களே !
மேற்கத்திய நாடுகளின் தெருக்களில் அரங்குகளில் புலிக்கொடியோடு 'அரசியல்' நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குப் பின்னுள்ள ஆபத்தை உணர்ந்துகொள்ளுங்கள்.
உங்கள் கொலைக்கலாசாரப் பின்னணி உங்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிடும். நீங்கள் அப்பாவிகளாக இருந்தாலும்கூட.
அகதித் தஞ்சம் என்பது வேறு தெரிவுகள் இல்லாத உயிர்வாழ்வதற்கும் தன் வாழ்வை மாண்புறு வழிகளில் மீள ஒழுங்கமைத்துக்கொள்வதற்குமாக வழங்கப்படும் ஒரு அரிய வாய்ப்பாகும்.
போர்களாற் சிதிலமடைந்து பிய்த்தெறியப்பட்ட மக்கள் பலர் அவர்களிற்கான குறைந்தபட்ச வாழ்க்கைக்கான ஆறுதலுக்காக காத்திருக்கிறார்கள்.
தம்வாழ்வை மீள ஒழுங்கமைக்க அவ்வளவு நெருக்கடிகளை அனுபவித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக