Veerakumar - Oneindia Tamil : டெல்லி: இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை காலை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் கொல்கத்தா வரை உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் (EMSC) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன
"இது நான் உணர்ந்த மிக நீண்ட நிலநடுக்கங்களில் ஒன்றாகும்" என்று மிசோரமின் தென்சால் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அச்சத்தோடு தெரிவித்தார்
வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங்கிலிருந்து கிழக்கே 183 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.
நிலநடுக்க ஆய்வு மையத்தின்படி, அதிகாலை 5.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நில நடுக்கம் விட்டு விட்டு தொடரக் கூடியது. எனவே, அதிகாலை 5.53 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக நில நடுக்கம் விட்டு விட்டு தொடரக் கூடியது. எனவே, அதிகாலை 5.53 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/a-magnitude-6-1-earthquake-recorded-in-the-region-near-the-indo-myanmar-border-440358.html
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/a-magnitude-6-1-earthquake-recorded-in-the-region-near-the-indo-myanmar-border-440358.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக