Venkat Ramanujam : கரூர் மாவட்டத்தில் நடப்பது என்ன?
ஜோதிமணி வெற்றிக்காக அப்பகுதி காங்கிரசுடன் இணைந்து 2019 ஆண்டில் இரவு பகலாக உழைத்த திமுகவை..
முக்கியமாக தற்போதைய அமைச்சர் அப்போது மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி களத்தில் செய்த உழைப்பை திமுகவை விட்டுவிடுங்கள் ..
அப்பகுதியில் உள்ள எந்த ஒரு காங்கிரஸ் கட்சிக்காரர்களும் புறம் தள்ளிவிட முடியாது தானே..
அப்படி ஆதரவு தந்த கட்சியின் ஆறுமாத கால ஆட்சியை எதிர்த்து ..
அந்தக் கட்சி பிரமுகர்களிடம் பேசி சுமுகமாக தீர்த்து முடிக்க முயலாமல் ஏன் கரூர் எம்பி ஜோதிமணி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் கடந்த இரு நாட்களாக நிகழ்த்த வேண்டும்..
மாவட்ட கலெக்டர் தன் நிலையில் இருந்து இறங்கி வந்து ஜோதிமணி நேரில் சந்தித்த பின்னரும் கரூர் எம்பி போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதன் நோக்கம் என்ன. .
புதிய திமுக ஆட்சியில் கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் பல காங்கிரஸ் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை எல்லாம் முக்கியமாக ..
காங்கிரஸ் முக்கிய தலைவர் E.V.K.S.Elangovan மீது போடப்பட்ட 300க்கும் மேற்பட்ட வழக்குகளை புதிய திமுக தமிழ்நாடு அரசு ஒன்றுமே இல்லாமல் செய்துள்ளது..
ஒரு தனிப்பட்ட மாவட்ட எம்பியின் செய்கை என்பது மொத்த மாநிலத்தில் கூட்டணியில் உறவுக்கு குந்தகம் விளைவிக்கும் என்றால் ..
மாநில தலைவர் K.S Alagiri இன்னமும் இதை ஜோதிமணியிடம் விசாரிக்காமல் மௌனம் சாதிப்பது சரியா..
மாவட்ட அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு என்ன பிரச்சனைக்காக போராடுகிறேன் என்பதை முதலில் எழுத்துப்பூர்வமாக மாவட்ட ஆட்சியர் இடத்தில் தெரிவித்தாரா கரூர் காங்கிரஸ் எம்பி..
அப்படி ஏதாவது இருந்து இருந்தால் அதைப் பற்றி விவரங்களை அவர் சமூக வலைத்தளத்தில் ஏன் இதனை தெரிவிக்க மறுக்கிறார். .
அவர் சமூக வலைத்தளத்தில் செய்யும் பதிவுகள் கரூர் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாமல் . .
நின்றேன் நடந்தேன் திமுக மந்திரிகளை ஒவ்வொருவராக சந்தித்தேன் என அவரைப்பற்றி மட்டுமே பேசுகின்றன ..
இது அரசியல் செய்யும் அரசியல்வாதிக்கு நல்ல பலன்களை தராது என்று கரூர் காங்கிரஸ் எம்பிக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையா..
தனிநபர் ஈகோ பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளாக மாற்ற நினைப்பது மாற்ற நினைப்பவர்களுக்கு ..
அது பாதகமாக முடியும் என சொல்லிக்கொடுத்த அறநூல்கள் எல்லாம் மறந்து விட்டதா..
பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை பேசாமல் மேலும் வளர்க்க விரும்பினால். .
ஒருவேளை திமுக காங்கிரஸ் கூட்டணி உறவு இதன் மூலம் பாதிக்கப்படும் என்றால் அதைத்தான் ஜோதிமணி எம்பி விரும்புகிறாரா..
இது ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என 2019 முதல் தொடர்ந்து சொல்லி வந்த திமுகவின் நிலையினை மறுபரிசீலனை செய்ய வைக்கும் கரணியாக அமைந்து விடாதா . .
போன்ற கேள்விகள் ஜோதிமணி கரூர் எம்பி நடத்திவரும் உள்ளிருப்பு போராட்டத்தின் மூலம் ..
இனிமே எழலாம் என்றெல்லாம் கரூர் வாழ் மக்கள் கேட்பார்களே ..
பதில் உள்ளதா சார்ந்தோருக்கு. . 🐝
#சவெரா 26-11-2021 காலை 9:10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக