திங்கள், 23 டிசம்பர், 2019

பேரணி முழுவதும் வீடியோ எடுங்க ..கலவரம் வராமல் தடுக்கவும் .. சந்தேக நடமாட்டங்களை கண்டறியவும் ...

Devi Somasundaram : முதலில் பாராட்டும் .வாழ்த்தும்.
1. பேரணி முழுக்க ஒரு இடம் விடாம வீடியோ எடுங்க.. சுவத்துக்கு பின்னாடி, மரத்து மேல, சந்து பொந்துலன்னு உங்கள சுத்தி கண்காணிங்க..
2 .சந்தேகத்திக்கு இடம் தர மாதிரி யார் கண்ல பட்டாலும் பிடிச்சு போலிஸ் கிட்ட குடுங்க ...போலிஸ்ல நல்ல போலிஸும் உண்டு...அரசின் அடியாளா இருக்க வேண்டிய நிர்பந்தத்திலயும் ந்மக்கு உதவ ஆட்கள் உண்டு..அவர்களிடம் ஒப்படைங்க.
3 .கலவரம் கிரியேட் செய்ய வருபவன் என்ன முகமூடிலயும் வரலாம்...அவன் திமுக கொடி கட்டி இருப்பான், கருப்பு உடை போட்டு இருக்கலாம், இஸ்லாமிய தொப்பி போட்டு இருக்கலாம், போலிஸ் முகமூடி கூட போட்டு இருக்கலாம்....நம்ம ஆட்க்ளுக்கு யார் திருடனா இருப்பான்னு புரியும்..கவனமா இருஙக.
4. நம்ம நோக்கம் அரசை எதிர்ப்பது என்பதில் உறுதியா இருங்க ..போலிஸ் அடிக்கோ .துப்பாக்கிகோ பயந்து நாம பின் வாங்கறதில்ல ...என்பதை ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து நிருபித்து இருக்கோம் .
5 . வழக்கம் போல எவன் செத்தா என்ன நாம சோத்தை தின்போம்னு வீட்ல சீரியல் பாத்துட்டு நமக்கு என்னான்னு இருப்பவன கணக்கெடுங்க ....என்னிக்காச்சும் அரசு என்ன செய்துச்சுன்னு வருவான்ல அன்னிக்கு வச்சு செய்வோம்..
6 வழக்கம் போல இடுப்ப கிள்ளி ஹஷ் டேக் போடறவன் இடுப்ப கிள்ள வருவான்...பெண்கள் கைல செருப்ப வச்சுக்கங்க .
7 .திமுக போராட்டம் பிசு பிசுத்ததுனு ஒருத்தன் எழுதுவான்...திமுக காசு குடுத்து ஆட்கள கூட்டி வந்துச்சுன்னு ஒருத்தன் எழுதுவாந்.. பேரணின்னு டிராமா போடுது பி ஜே பி கூட கூட்டணினு ஒருத்தன் எழுதுவான்.. .இந்த காமடிலாம் கண்டுகாம நோக்கத்தில் கவனமா இருங்க...
வாழ்த்துகளும் ..அன்பும் ..இந்த பாசிஸ் அரசு விழும் வரை நம் எதிர்ப்பு ஓயாது .
#தேவி..

கருத்துகள் இல்லை: