


நினைவுநாளில் ட்விட்டரில் #பெரியார் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தந்தை பெரியாரின் 46 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்ட உருவ படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். " தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் உணர்வுகளை மதிக்காமல் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை செயல்படுத்தியதால் ஜார்கண்ட் தேர்தலில் அமித்ஷா மற்றும் மோடிக்கு மரண அடி விழுந்துள்ளதாக கூறினார். மேலும் இந்தியாவில் இனி நடைபெறவுள்ள எந்த தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெறாது என்றும் கி.வீரமணி பேட்டியில் தெரிவித்தார்."
தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் உணர்வுகளை மதிக்காமல் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை செயல்படுத்தியதால் ஜார்கண்ட் தேர்தலில் அமித்ஷா மற்றும் மோடிக்கு மரண அடி விழுந்துள்ளதாக கூறினார். மேலும் இந்தியாவில் இனி நடைபெறவுள்ள எந்த தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெறாது என்றும் கி.வீரமணி பேட்டியில் தெரிவித்தார்.



கேரள முதல்வர் பினராயி விஜயனும் பெரியாருக்கு தனது மரியாதையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள், தமிழ்கத்தின் சமூகப்
பரப்பிலும், அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை என்பதும்
குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக