செவ்வாய், 24 டிசம்பர், 2019

சென்னை பேரணி....ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

மாலைமலர் : குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை எழும்பூரில் பேரணி நடத்திய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை:< குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நேற்று திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
ம.தி.மு.க. தலைவர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் சார்பில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், முஸ்லிம் லீக், இடதுசாரி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகில் இருந்து தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இந்நிலையில்,  காவல் துறையினர் உத்தரவை பேரணி நடத்தியதாக தி.மு.க. தலைவர்  மு.க.ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவை மீறியது போன்றவற்றுக்காக சட்டப்பிரிவு 143, 188, 341 ஆகியவற்றின்கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது >

கருத்துகள் இல்லை: