வெள்ளி, 27 டிசம்பர், 2019

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது போக்சோ கோர்ட்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது போக்சோ கோர்ட்மாலைமலர் : கோவை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடையில் 7 வயது சிறுமி, கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு, அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் நிரூபணமானதால், அவர் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு வழங்கியது.


இந்நிலையில், இன்று பிற்பகல அவருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி ராதிகா அறிவித்தார். 

அதன்படி, 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 302 பிரிவின்கீழ் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு ஆயுள் மற்றும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளா

கருத்துகள் இல்லை: