nakkheeran.in - கலைமோகன் :
நாளை
சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எதிர்ப்பு பேரணி என்ற
தலைப்பில் பிரம்மாண்ட பேரணியை நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதற்கான
அழைப்புகளும் கட்சிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக மற்றும்
அதன் கூட்டணி கட்சிகள் நாளை நடத்தவிருக்கும் பேரணிக்கு தடை விதிக்க
வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்திய மக்கள் மன்றத்தின் வாராகி என்பவர் தொடர்ந்த இந்த மனுவானது அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. இந்தநிலையில் நாளை நடைபெற இருக்கக்கூடிய திமுக பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. அதேபோல் காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். ஆனால் நீதிபதிகள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த அனுமதி மறுக்கப்பட்டதா அல்லது அதற்கு முன்பே காவல்துறை இந்த பேரணிக்கு அனுமதி மறுத்திருந்ததா என்று கேள்வி எழுப்பினர்.
அதேபோல் ஜனநாயக நாட்டில் யாரும் போராட்டம் நடத்தலாம் தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். நாளை திமுகவின் பேரணியில் சட்ட ஒழுங்கை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். திமுக பேரணியின் போது காவல்துறை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் .
பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். நிபந்தனை மீறினால் வீடியோ பதிவு செய்யுங்கள். காவல்துறை நிபந்தனையை மீறி பேரணி நடத்தினால் வீடியோ பதிவு செய்வது முக்கிய சாட்சியாக இருக்கும் என்று நிபந்தனைகளுடன் திமுக நடத்தும் பேரணிக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து அனுமதி அளித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக