ஜெயபாண்டியன் :
தொலைக்காட்சிகளில் தேவையில்லாமல்
ஆங்கிலச்சொற்களை கலந்து தமிழ்பேசுவது பற்றிய பொதுவான ஒரு கருத்து.
எல்லா அலைத்தடங்களிலும் தமிழ் பேசுவோரும், அவர்களுக்கு எழுதிக்கொடுப்போரும் ஒரு குறிப்பிட்ட வகையினரே என்று தோன்றுகிறது. அதாவது இவர்கள் நகரங்களில் வாழ்ந்து ஆங்கிலவழிப் பள்ளிகளில் படித்து தமிழை புறக்கணித்தவர்கள் என்றே தோன்றுகிறது.
தொலைக்காட்சி இயக்குநர்கள் நல்ல தமிழறிந்தவர்களை தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்தவேண்டும்.
சான்றாக, சமையல் காட்சிகளில் cut பண்ணி என்று சொல்வதற்குப்பதிலாக வெட்டி என்றும் heat பண்ணி என்பதற்குப்பதிலாக சூடாக்கி என்றும் சொல்வதில் என்ன சிரமம்?
இதேபோல் potatoவை add பண்ணுங்க என்பதற்குப்பதிலாக உருளைக்கிழங்கைப் போடுங்க என்று ஏன் இவர்கள் சொல்ல மறுக்கிறார்கள் என்பது எனக்கு விளங்கவேயில்லை.
மக்கள் அன்றாட வாழ்வில் பேசுவதுபோல் பேசுகிறோம் என்று இவர்கள் விடையளிப்பார்கள்.
ஆனால் இவர்கள் மக்கள் என்று குறிப்பிடுவது யாரை? இவர்களைப்போல் நகரத்தில் வாழ்ந்து ஆங்கிலவழி கற்று தமிழைப் புறக்கணித்தவர்களைத்தானே?
உலகிலுள்ள தமிழ் மக்கள்தொகையின் ஒப்பளவில் இவர்கள் சிறுபான்மையினரே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக