புதன், 25 டிசம்பர், 2019

சமுகவலையில் ஸ்டாலின் இமேஜை டமேஜ் செய்யும் நாக்பூர் உளவாளிகள் ..

Vijay Bhaskarvijay : வருங்கால தமிழக முதல்வரும் . திமுக தலைவருமான
திரு. மு.க ஸ்டாலின் மத்திய அரசை ஆளும் கட்சியை நோக்கி ஒரு விமர்சன அறிக்கை வெளியிடுகிறார்.
அது செய்தியாக முகநூலில் விழுகிறது.
வெளியான 39 நிமிடத்தில் 154 முகபாவனை குறிகள் விழுகின்றன.
அதில் திரு. ஸ்டாலினுக்கு ஆதரவாக 123 ம், எதிர்ப்பாக வெறும் 31 ம் குறிகள் விழுகின்றன.
அதாவது 80 % தமிழக மக்கள் ஸ்டாலினை ஆதரிக்கிறார்கள்.
20% தமிழர்கள் ஸ்டாலினின் அந்த அறிக்கையை எதிர்க்கிறார்கள்.
ஆனால் கமெண்ட் செக்சனைப் பாருங்கள்.
கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட கமெண்டுகள் ஸ்டாலினை மட்டரகமாக கிண்டல் செய்து இருக்கின்றன.
எதிர்ப்பு குறியே 31 தான் விழுந்திருக்கிறது.
ஆனால் கமெண்ட்கள் எப்படி நாற்பத்தி ஐந்தை தாண்டி போகிறது.
எப்படி போகிறது என்றால் மு.க ஸ்டாலினின் இமேஜ் கடுகளவு கூட மக்களிடையே உயர்ந்து விடக் கூடாது என்று ஒரு கூட்டமே உழைத்துக் கொண்டிருக்கிறது.
எங்கெல்லாம் சமூக வலைதளங்களில் மு.க ஸ்டாலினுக்கு ஆதரவான செய்தி வருகிறதோ அங்கெல்லாம் போய் அவருக்கு பயங்கர எதிர்ப்பு இருப்பது மாதிரி ஒரு சூழலை வாசிப்பவருக்கு காட்ட முயல்கிறது.

ஒரு செய்தியின் கீழே அவருக்கு எண்பது சதவிகிதம் ஆதரவு இருந்தாலும் ஏதோ அவருக்கு மக்களிடையே பயங்கர எதிர்ப்பு இருப்பது மாதிரி கமெண்ட் செக்சனில் காட்டிக் கொள்கிறார்கள்.
திமுக ஐடி விங் இதை புரிந்து வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை.
திமுக ஐடி விங் முதலில் செய்ய வேண்டிய வேலையாக அடுத்த பத்து நாட்களுக்கு ஸ்டாலின் செய்திகளுக்கு கீழே வரும் ஆதரவு எதிர்ப்பு முகபாவனை குறிகளை கணக்கில் எடுக்க வேண்டும்.
பின் அதற்கு கீழே வரும் கமெண்டுகள் எண்ணிக்கையில் வரும் எதிர்ப்பு கமெண்டுகளை கணக்கில் எடுக்க வேண்டும்.
இப்படி பத்து நாட்கள் கணக்கெடுத்து அந்த தகவல்களை ஆராய்ந்தால் அவர்களுடையை சித்தரிப்பு யுத்தியை புரிந்து கொள்ளலாம்.
அடுத்து தலைவர் ஸ்டாலினை நோக்கி வைக்கப்படும் எதிர்ப்பு கமெண்டுகளை ஆராய வேண்டும்.
அதை விரிவாக ஆறு வகையாக பிரித்து, அதற்கு எப்படி பதில் கொடுக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
யோசித்து திமுக ஐடி விங் ”கமெண்ட் தளத்தில்” இன்னும் அதிகம் இயங்க வேண்டும்.
எனக்கு தெரிந்து பல செய்தி லின்கின் கீழே இஸ்லாமியர்கள்தாம் திமுக ஆதரவாக கமெண்ட் எழுதுகிறார்கள். மற்ற திமுகவினர் வசதியாக ஒதுங்கி போய்விடுகின்றனர்.
எல்லா கட்சிக்கும் ஐடி விங் என்றொரு பகுதி இருக்கும் போது திமுக ஐடி விங் இதில் எல்லாம் இன்னும் களமாடலாமே..
தமிழகத்தில் திமுகவுக்கு அமோக அதரவு இருக்கிறது என்பது 38 எம்பிக்கள் வென்ற போதே தெரிந்து விட்டது.
அப்படியும் கூட ஒரு சிறு கூட்டம் அவர் இமேஜ் வளரக் கூடாது என்று கடுமையாக பாடுபடும் போது,
மக்கள் ஆதரவுள்ள திமுக ஏன் சோசியல் நெட்வொர்க்கில் இன்னும் இறங்கி வேலை செய்து மக்களிடத்தில் தலைவரின் இமேஜை அதிகப்படுத்தக் கூடாது.
இந்த கோணத்தில் கொஞ்சம் யோசிக்கலாம்.

கருத்துகள் இல்லை: