வியாழன், 26 டிசம்பர், 2019

பாகிஸ்தானுக்கு போ.. இல்லாட்டி சுடுகாட்டுக்கு போ.. மிரட்டிய போலீஸ்..லக்னோ வயோதிபருக்கு நேர்ந்த கொடுமை


Hemavandhana - tamil.oneindia.com : .. என் மனைவி, பேத்திகளை ஒரு ரூமில் தள்ளி பூட்டிட்டு போய்ட்டாங்க.. நகை, பணத்தை எடுத்துட்டு போய்ட்டாங்க" என்று இஸ்லாமியர் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் நடந்து வருகிறது.. இதற்கான போராட்டங்களும் வலுத்து வருகின்றன. அப்படித்தான் போன வெள்ளிக்கிழமை உத்திரபிரதேசம் முசாபர் நகரில் போராட்டம் நடந்தது.. அந்த நகரில் உள்ள எல்லா இஸ்லாமியர்களும் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.. எல்லோரும் சேர்ந்து ஊர்வலமாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
போராட்டம் இந்த ஊர்வலத்தில் ஒருவர்தான் ஹாஜி ஹமித் ஹசன்.. இவருக்கு 73 வயதாகிறது.. பெரியவர் என்று நினைத்துவிட வேண்டாம்.. இந்த போராட்ட ஊர்வலத்தை முன்னின்று நடத்தியதே இவர்தான்.. அதுவும் எந்த வன்முறையும் இந்த ஊர்வலத்தில் நடந்துவிடக்கூடாது என்று கண்காணிக்கும் முக்கிய பொறுப்பை இவர்தான் அன்று கவனித்தார். ஊர்வலத்தை மிக அழகாக முன்னெடுத்து சென்றார்.
ஊர்வலமும் முடிந்து 2 நாள் ஆன நிலையில், போலீசார் ஹமித் வீட்டுக்கு வந்துவிட்டனர்.. வீட்டை சுற்றி முற்றுகையிட்டு விட்டனர். இதை பற்றி ஹமித் சொல்கிறார்: "நான் வயதில் மூத்தவன் என்பதால், அந்த ஊர்வலத்தில் வன்முறை எதுவும் நடக்காமல் தடுத்து, கண்காணித்தபடியே வந்தேன்.. என் பையனும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டான்.. இதை தவிர வேற எந்த தப்புமே நாங்கள் செய்யவில்லை.. ஆனாலும் போலீசார் என் வீட்டை சுற்றிவிட்டனர்.
 நகை, பணம் வீட்டை நான் உள்பக்கமாக பூட்டியிருந்தேன்.. ஆனால், கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்தனர்.. அதில் நிறைய பேர் யூனிபார்மில் இருந்தனர்.. வந்தவர்கள் என் வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாத்தையும் அடித்து நொறுக்கிட்டாங்க.. என் பேத்திக்கு கல்யாணம் வெச்சிருக்கோம்.. அதுக்காக பீரோவில் 5 லட்சம் ரூபாய் பணமும், நகையும் வெச்சிருந்தோம்.. அதையும் எடுத்துக்கிட்டாங்க.

நான் எவ்வளவோ தடுக்க பார்த்தும் என்னால முடியல.. என்னை அடிச்சிட்டாங்க.. " நீ ஒரு முஸ்லிம். ஒன்னு நீ பாகிஸ்தான் போகணும்.. இல்லேன்னா சுடுகாட்டுக்கு போறியான்"னு கேட்டு மிரட்டினாங்க.. என் மனைவி, பேத்திகளை ஒரு ரூமில் தள்ளி பூட்டிட்டு போய்ட்டாங்க.. என் பேத்திக்கு வர்ற பிப்ரவரி மாசம் கல்யாணம்ன்னு சொல்லி, பத்திரிகையைகூட எடுத்து காட்டினேன்.. ஆனா, நகையை அவங்க தரவே இல்லை.. பெண் குழந்தைங்களை காப்போம்னு பிரதமர் மோடி சொல்றார்.. ஆனால் பெண்களின் நிலை இப்படி இருக்கே?

 கண்ணீர் என் பையன் கிட்ட ஒரு துப்பாக்கியை தந்து, அதை வைத்து ஒரு போட்டோ எடுத்துக்கிட்டாங்க.. ஆயுதம் வெச்சிருக்கிறதா சொல்லி கைதும் பண்ணி கூட்டிட்டு போய்ட்டாங்க.. இப்போ வரைக்கும் என் பையன் வரவே இல்லை.. " என்கிறார் நா தழு தழுக்க 

கருத்துகள் இல்லை: