சனி, 28 டிசம்பர், 2019

முகேஷ் அம்பானி குடும்பத்தின் கறுப்பு பணத்தை உலகெங்கும் தேடும் வருமான வரி துறை?

 https://keralakaumudi.com/en/news/news.php?id=155364&u=income-tax-dept-issues-notice-to-ambani-family-under-black-money-act-asks-to-reveal-foreign-assets
Income tax dept issues notice to Ambani family under black money act, asks to reveal foreign assets.. MUMBAI: The Income Tax department has apparently issued a notice to Reliance Industries Chairman Mukesh Ambani and his family under provisions of the 2015 Black money act. As per reports, the IT department has asked Ambani to reveal about the family's undisclosed assets in the HSBC bank in Geneva. 
Subaguna Rajan :  காலையில் முகேஷ் அம்பானி கருப்புப் பணத்தை வருமான வரித்துறை உலகெங்கும் துரத்துகிறது என்ற செய்தியை வாசித்ததும்
ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் உண்டானது.
என்ன நடக்கிறது இந்தியாவில்?
இது போன்ற பெரும்புள்ளிகளிற்கெதிரான வருமான வரி தேடல் நம் கவனத்திற்குரியது. இப்போதே அவசரப்பட்டு சில அவதானங்களைச் செய்வது முறையில்லைதான். ஆனால் மகிழ்ச்சி சில வார்த்தைகளைப் பேச வைக்கிறது.
மோடி / ஷா பாணி அரசியலில் குஜராத் காலத்திலிருந்து “ பிளாக் மெயில் “ ஒரு முக்கியமான காரணி. குஜராத் உள்துறை அமைச்சராக அமீத் ஷா செய்த சாகசங்கள் அவரது வீழ்ச்சிக்கு பின் சுவராஸ்யமான நூலாகும் வாய்ப்புகள் அதிகம். அவர்களது ‘சொந்த நிறுவனமாக ‘ கருதப்படும் அதானி குழும்மும் , அம்பானி குழுமமும் மோதுகிறதோ என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.
அம்பானியின் ஆகப் பெரிய பலம் பெட்ரோலியம். சமீபத்தில் சவுதியின் மிகப் பெரிய நிறுவனத்தோடு மிகப் பெரிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு நிறுவனமான பி பி சி எல் ஐ யார் வாங்கப் போவது என்ற பேச்சு பரபரப்பாய் உள்ளது ( ப சிதம்பரம் அவர்களே ஒரு பேட்டியில் சொன்னார் ) . இந்த நடவடிக்கைக்கும் அதற்குமான தொடர்பு உள்ளதா?
அமீத் எதையும் செய்யத் தயங்காதவர். அதானி குழுமத்தை முதன்மையாக்குவதன் மூலம் ‘இந்தியாவை ‘ தங்களது விருப்பப்படி ஆட்டிப் படைக்கும் ஆவல் அவரிடம் இருப்பது ஆச்சர்யமில்லை.

ஆனால் ஒரேவேளையில் பல்முனை அரசியல் , பொருளாதார களத் தாக்குதலை நிகழ்த்தும் இரட்டையர் அணியின் கொஞ்சம் “ஓவர் “ ஆகி அழிந்து போவார்களோ என்ற ஆவல்தான் இந்த காலையின் நம்பிக்கை.
குஜராத் பனியா மாஃபியாவும் , அதன் பார்ப்பன சிஇஓ எடுபிடிகளுமான அணிகள் ஒரு தரப்போடு மறுதரப்பு வெளிப்படையாக மோதுவது இந்தியா அரசியல், பொருளாதார ‘இறையாண்மை’ க்கு நன்மையே. மோதல் முற்றட்டும். வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: