அஸ்ஸாமின்
முக்கிய நகரமான கௌகாத்தி நகரின் மேற்கே உள்ள கோல்பாரா மாவட்டத்தின்
மத்தியா பகுதியில்தான் இந்த தடுப்பு மையத்தின் பணிகள் வேகமெடுத்துள்ளன. ஏழு
கால்பந்து மைதான அளவில்... அதாவது 2.5 ஹெக்டேர் பரப்பளவில்
கட்டப்பட்டுவரும் இந்தத் தடுப்பு மையத்தில், மொத்தம் 15 நான்கு மாடிக்
கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் இறுதிப்
பதிப்பு வருவதற்கு முன்பாகவே இந்த கட்டடப்பணி தொடங்கப்பட்டதாகக் கூறப்படும்
வேளையில்... அஸ்ஸாம் மாநிலம் மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்பைச்
சந்தித்தது. அதனால், இந்த கட்டடப்பணி சிறிது தாமதமானது எனக் கூறியுள்ளனர்,
அந்தப் பகுதிவாசிகள்.
மழையால்
கட்டுமானப் பணி தாமதமான போதிலும், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் இந்த
வளாகம் தயாராக இருக்கும் என்று அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் இதில், ஒரு மருத்துவமனை, ஒரு
ஆடிட்டோரியம், ஒரு பொதுச் சமையலறை, 180 கழிப்பறைகள் மற்றும் சலவை அறைகள்
ஆகியவற்றைக் கொண்டிருக்கும். தடுப்பு மையத்துக்கு வெளியே ஒரு தொடக்கப்
பள்ளியும் இருக்கும்.
``10 ஏக்கர் பரப்பளவில், காவல் கோபுரங்கள் உட்பட முழுக்க அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கப்போகும் இந்த மையம், ஜெயில் போல் இல்லாமல், `ஹாஸ்டல் டைப்'பில் அறைகள், ஒவ்வோர் அறையிலும் நான்கு முதல் ஐந்து பேர் வரை தங்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், மிகப்பெரிய சுற்றுச்சுவரும் கட்டப்பட்டுவருகிறது. குழந்தைகள், தாய்மார்களுக்கு சிறப்பு வசதி மையங்களும் இங்கேயே ஏற்படுத்தப்படும்'' என்று விவரிக்கிறார், அங்குள்ள அதிகாரி ஒருவர்.

``நாங்கள்,
தினமும் 11 மணி நேரம் வேலைபார்க்கிறோம். காலை 7 மணிக்கெல்லாம்
தொடங்கிவிடுகிறோம். விரைவாக முடிப்பதற்காக, 300-க்கும் மேற்பட்டவர்கள்
இங்கு வேலை செய்துவருகிறோம்" என அங்கு பணிபுரிகிறவர்கள் கூறியுள்ளனர்.
தீர்ப்பாயத்தின் இறுதிப் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. வீரப்பதக்கம் பெற்ற முன்னாள் ராணுவ வீரர் முகம்மது சனாவுல்லா, தெற்கு அபயாபூரி எம்.எல்.ஏ அனந்தகுமார் மாலோவின் பெயர்கள்கூட விடுபட்டுள்ளனவாம். பட்டியலில் பெயர் நீக்கப்பட்டோர் மீண்டும் விண்ணப்பிக்க, 120 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

நடுவர்
தீர்ப்பாயத்தில் அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப் பட்டால், உயர்
நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என
காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காலக்கெடு முடிவதற்குள் தங்களின்
குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்கள், இந்தியாவின் முதல் மற்றும்
முழுமையான தடுப்புக்காவல் மையமான இதற்குக் கொண்டுசெல்லப்பட உள்ளார்கள்.
அஸ்ஸாம் போலீஸ் ஹவுஸிங் கார்ப்பரேஷன் கண்காணிப்பில் கட்டப்பட்டுவரும் இந்த
மையம்போல், 10 மையங்களை அஸ்ஸாமில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக