திங்கள், 9 ஜூலை, 2018

மாநில சுயாட்சி மாநாடு .... இங்குதான் மாநில உரிமை பறிபோகிறது.

ஆலஞ்சியார் : திராவிட நாடு கோரிக்கையை திமுக ஒத்திவைத்தபிறகு #கலைஞர் ..மாநில சுயாட்சி என்பது இந்தியாவை துண்டுதுண்டாக வெட்டுவதற்கான கொடுவாளென்றோ இந்திய ஒருமைபாட்டிற்கு குந்தகம் விளைக்க வைக்கபடும் வேட்டு என்றோ எண்ணாதீர்.. என்றார்
எடுக்கபட்ட மிக முக்கிய கோரிக்கை மாநில சுயாட்சி.. இது குறித்து
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்டதாக அரசியல் சட்டம் திருத்தபட வேண்டுமென்பதே எமது கோரிக்கை என்றார் பேரறிஞர்_அண்ணா ஆம் பல்வேறு மொழி கலாச்சார பின்னணியை கொண்ட ஒரு நாட்டில் நாடென்பது கூட சரியான சொல் இல்லை துணைகண்டத்தை அதாவது ஒருங்கிணைந்த இந்திய நாட்டில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிதல் சமமான நீதியை தராதென்பதோடு .. ஒரு சில அதிகார அமைப்பே ஆட்சி செலுத்த வகைசெய்யும் .. அது ஒரே இடத்தில் அதிகாரத்தை வைத்தல் சர்வாதிகாரத்தை கொண்டதாக மாற்றும்..

..
இந்திய ஒன்றியமாக இருந்தாலும் இங்கே
இரு கூட்டமைப்பாக தான் செயல்படுகிறது..
இங்கே இரண்டு அரசுகள் உண்டு: மத்திய அரசு, மாநில அரசுகள்... இவ்விரு அரசுகளுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஈரவை முறை (ராஜ்யசபா & லோக்சபா, சில மாநிலச் சட்டமன்றங்களிலும் கீழவை உண்டு) அரசியல் சாசனத்தின் உச்ச ஆதிக்கம்.. அரசியல் சாசனத்தின் பகுதி உறுதித்தன்மை.. சுதந்திரமான நீதி அமைப்பு..
ஆனால் மத்திய அரசு ஒரு திட்டத்தை / செயலை செய்துவிட்டால் அதை எதிர்க்கும் அதிகாரமோ அல்லது அதை ஏற்காத சட்டவரைவோ கொண்டு வந்தாலும் அதற்கு ஒப்புதலை மத்திய அரசுதான் வழங்க வேண்டும்.. குறிப்பாக
நீட் தேர்வு தமிழகம் வேண்டாமென்கிறது ..ஆனால்
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு என்ற விஷயம் கல்வி என்ற தலைப்பின் கீழ் வருகிறது கல்வி அரசியல் சாசனத்தின் பொதுப்பட்டியலில் உள்ளது. அதாவது மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே அதில் சட்டம் இயற்றலாம். ஆனால் மத்திய அரசு பாராளுமன்றத்தில் நீட் சட்டம் இயற்றி விட்டதால் தமிழக அரசு சட்டசபையில் அதை மறுதலித்துச் சட்டம் இயற்றினாலும் அதை அமல்படுத்த ஜனாதிபதி ஒப்புதல் தேவையாகிறது அதை ஜனாதிபதி செய்யமாட்டார் காரணம் மத்திய கேபினெட் பரிந்துரைத்தால் மட்டுமே அவரால் அனுமதிக்கமுடியும்.. இங்குதான் மாநில உரிமை பறிபோகிறது..
..
இது ஒரு விடயம்தான் பல்வேறு துறைகளில் மாநிலத்தின் உரிமைகள் மெல்ல மெல்ல பறிக்கப்பட்டு அது மத்தியரசின் கைகளுக்கு போகிறது இந்த சூழலில் தான் அதிகார பரவல் என்பது அதாவது அந்தந்த மாநிலங்கள் சுயமாக சட்டமியற்றிக்கொள்ள..மாநிலங்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் .. ஆனால் மத்தியரசு மாநிலஉரிமைகளை தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு செல்லவே ஆர்வம்காட்டுகிறது.. சமீபகாலமாக பாதுகாப்பை காரணம் காட்டி ..வளர்ச்சி என கூறி மாநிலங்களின் அதிகாரத்தை குறைப்பதும் .. பல்வேறு மக்களின் சுயத்தை இழக்க செய்து பொதுதன்மை என்ற போலியை திணிக்க முயல்வதும் நடந்துவருகிறது .. இந்நிலையில் .. சமூகநீதி..மாநில சுயாட்சியை கொள்கையாக கொண்ட பேரியக்கம் திமுக ..
மாநில சுயாட்சியை வலியுறுத்தி மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறது.. வழக்கம் போல் ஊடகங்களும் பாசிசமும் .. இது நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமென சுயாட்சி கோஷத்தை நீர்த்து போக செய்ய முனையும் தளபதி சரியான நேரத்தில் மாநில சுயாட்சி குறித்து இந்தியளவில் கவனத்தை ஈர்க்க மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பது சிறந்த தலைவராக தன்னை நிலைநிறுத்தி நிறைய கேள்விகளுக்கு பதிலை தன் செயல்மூலம் தந்திருக்கிறார்..
கூட்டாட்சி என்பதன் தர்க்கப்பூர்வ நீட்சியே மாநில சுயாட்சி (State Autonomy) .. மாநில சுயாட்சி விடயத்தில் தமிழகமே மற்ற இந்திய மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது..
சுயமரியாதைகாரன் என்ற முறையில் எமது நன்றியை பதிவு செய்கிறேன்..
..
தொடர்ந்து மாநில சுயாட்சிக்காக முரசு கொட்டுவோம்..
..
"The Federation is a Union because it is indestructible"..... B.R. Ambedkar..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: