தேவர் எம்ஜியார் ஜானகி |
காரணம் சினிமா என்கிற நவீனகலை வடிவத்தின் அடிப்படை இயல்பு அது. ஆனால் எம்ஜிஆரின் அரசியல் என்பது முழுக்க முழுக்க ஜாதி அரசியல். அல்லது ஜாதிபாதுகாப்பு அரசியல். திமுக என்கிற ஜாதிமறுப்பை வலுவாக பேசிய, ஆட்சியில் முன்னெடுத்த அரசியல் கட்சியின் வெம்மை தாங்காமல் அடைக்கலம் தேடி அலைபாய்ந்த "ஜாதி உணர்வுமிக்க" மூன்று அல்லது நான்கு முக்கிய ஜாதியக்குழுமங்களே எம்ஜிஆரின் அரசியல் முதுகெலும்பு.
வரலாற்று ரீதியில் எம்ஜிஆரின் அதிமுக அரசியல் செல்வாக்கு பெ
இவை இரண்டும் பெருமளவு பொருந்திப்போவது யதேச்சையானதல்ல.
அவை இரண்டுக்கும் இடையில் இருக்கும் ஆழமான தொடர்பே தமிழக ஜாதி அரசியலின் மூலவேர். எம்ஜிஆரின் அரசியலுக்கு முதுகெலும்பாய் இருந்து அதனால் தம் ஜாதிய செல்வாக்கை அரசியலில் வளர்த்துக்கொண்ட அந்த குறிப்பிட்ட ஜாதிகளைச் சேர்ந்த சுயஜாதி அபிமானத்தை இன்னும் தொலைக்க விரும்பாத அறிவுஜீவிகள் தான் எம்ஜிஆர் பஜனையை தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்கும் தம்மால் முடிந்த வகைகளில் வழிகளில் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதன்மூலம் தம் சுயஜாதி அபிமானத்தையும் ஜாதி ஒழிப்புக்கு எதிரான மறைமுக பிரச்சாரத்தையும் மிக அழகாக செய்தும் வருகிறார்கள்.
பிகு: இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகளே. அவர்களில் பலர் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தின் "ஜாதிகடந்த" தன்மையை பார்த்தார்களே தவிர அதிமுக கட்சி மற்றும் ஆட்சி என்பது ஜாதிய படிநிலையை தக்கவைப்பது, உறுதிசெய்வது என்பதை பார்க்க மறுத்தனர். பார்த்தாலும் ஏற்கமறுத்தனர் அல்லது உரிய எதிர்வினை ஆற்ற மறுத்தனர். அதற்கானவிலைகளே இன்றைய ஜாதி ஆணவக்கொலைகள்.
கபா திருப்பத்தூர் : அதேபோல பட்டியல் சாதி மக்களின் ஓட்டு வங்கியும் அதிமுக பக்கமே இருக்கிறது. புதிய தமிழகம், விசிக ஆகிய தலித் கட்சிகளின் வளர்ச்சிக்குப் பிறகு அவர்கள் திமுகவுடன் ஏற்படுத்திய கூட்டணியால் தலித் ஓட்டு திமுக பக்கம் இருபது போல ஒரு பாவணை இருக்கிறது. ஆனால் அவர்களும் அதிமுக பக்கமே இருக்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் முத்தரைய மக்கள். பட்டியல் சாதி மக்களைவிட இன்னும் உடல் உழைப்பை நம்பியே இருக்கிறார்கள். அவர்கள் முழுவதுமாக இன்றும் அதிமுகவின் பக்கமே இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக