புதன், 11 ஜூலை, 2018

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்; அவாமி தேசிய கட்சியின் தலைவர் உள்பட 14 பேர் உயிரழப்பு


பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்; அவாமி தேசிய கட்சியின் தலைவர் உள்பட 14 பேர் பலிதினத்தந்தி : பாகிஸ்தானில் தேர்தல் பேரணியில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் அவாமி தேசிய கட்சியின் தலைவர் உள்பட 14 பேர் பலியாகினர். பெஷாவர், பாகிஸ்தானில் வருகிற 25ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் பிரசாரத்தின்போது 6 அரசியல் தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அந்த பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான், அவாமி தேசிய கட்சி தலைவர்கள் அஸ்பந்தியர் வாலி, அமீர் ஹைதர் ஹோட்டி, காமி வதான் கட்சி தலைவர் அப்தாப் ஷெர்பாவ், ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாசில் தலைவர் அக்ரம் கான் துர்ரானி, மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் மகன் டால்ஹா சயீத் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.


பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையத்தின் இயக்குனர் ஒபைத் பரூக் கூறினார்.

இந்த நிலையில், அந்நாட்டின் வடமேற்கே பெஷாவர் நகரில் யாகாடூட் பகுதியில் அவாமி தேசிய கட்சி தலைவர் பிலார் நேற்றிரவு கூட்டம் ஒன்றை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அவரது கட்சியின் தொண்டர்கள் கூடியிருந்தனர்.

பெஷாவர் நகரின் பி.கே. 78 தொகுதியின் வேட்பாளரான பிலார், கூட்டத்தில் பங்கேற்க மேடைக்கு வந்தபொழுது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.  இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர் தற்கொலை வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பிலார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அவர் மரணமடைந்து விட்டார்.  இந்த சம்பவத்தில் பிலார் உள்பட 14 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  இந்த தாக்குதலுக்கு 8 கிலோ டி.என்.டி. வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது என வெடிகுண்டு செயலிழப்பு குழு தலைவர் ஷப்கத் மாலிக் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: