புதன், 11 ஜூலை, 2018

ஆப்பசைத்த குரங்கு – சிபிஎஸ்இ

Krishnavel T S  :  தமிழக மாணவர்களை குறிவைத்து தாக்க மூன்றாண்டுகளுக்கு முன்பு NEET தேர்வை கொண்டு வந்தது சிபிஎஸ்இ.
சென்ற ஆண்டு நம் மாணவர்கள் பலர் படிக்கும் வைப்பை இழந்தனர், இந்த ஆண்டும் அதே கொடுமை தொடர, மாணவர்களின் காவலனாக வந்தது CPM கட்சி, அவர்கள் உயர்நீதி மன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கின் பலன் நேற்றைய தீர்ப்பு.
NEET தேர்வில் சுமார் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது, உதாரணமாக “சீட்டா” என்ற ஆங்கில வார்த்தையை “சிறுத்தை” என்பதற்கு பதிலாக “சீதா” என்று மொழி பெயர்த்துள்ளார்கள்
உயர்நீதிமன்றம் தன தீர்ப்பில் இந்த 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் அதாவது 49 X 4 = 196 மதிப்பெண்கள், NEET தேர்வை தமிழில் எழுதிய 24,720 மாணவர்களுக்கும் கொடுக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நடத்தப்பட்ட சேர்க்கை அனைத்தையும் தள்ளுபடி செய்து விட்டு, புதிய தகுதி பட்டியல் தயாரித்து மீண்டும் சேர்க்கை நடத்தவேண்டும் என்று கூறிவிட்டது.
இந்த தீர்ப்பால் என்ன நடக்கும் என்று பார்ப்போம், இந்த வருடம் NEET CUT OFF 720-க்கு 119
மதிப்பெண்கள் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இந்த CUT OFF கணக்கு சிபிஎஸ்இ கணக்கிடும் முறை வித்தியாசமானது, அதனை 50th பெர்செண்டைல் என்று சொல்லுவார்கள்.

அதாவது, 50ஆவது ரேங்க்கில் என்ன மதிப்பெண் உள்ளதோ அதுவே CUT OFF.
இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால், 100 பேர் இந்த தேர்வை எழுதினால்,
1. 10 பேர் 100 மதிப்பெண்கள்,
2. 10 பேர் 90 மதிப்பெண்கள்,
3. 10 பேர் 80 மதிப்பெண்கள்,
4. 10 பேர் 70 மதிப்பெண்கள்,
5. 10 பேர் 60 மதிப்பெண்கள்,
6. 10 பேர் 50 மதிப்பெண்கள்,
7. 10 பேர் 40 மதிப்பெண்கள்,
8. 10 பேர் 30 மதிப்பெண்கள்,
9. 10 பேர் 20 மதிப்பெண்கள்,
10. 10 பேர் 10 மதிப்பெண்கள்,
என்று மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள் என்று வைத்துக் கொள்வோம், 50th பெர்செண்டைல்
என்றால் 50 மதிப்பெண்கள் அல்ல மேலே சொன்ன உதாரணம் படி 50ஆவது இடத்தில் உள்ள 60 மதிப்பென்களுக்கு கீழே எடுத்தவர்கள் தகுதி பெறாதவர்கள் ஆகிவிடுவார்கள்.
இந்த வருடம் NEET CUT OFF 720-க்கு 119 மதிப்பெண்கள் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
நம் தமிழ் தேர்வர்கள் 24,000 பேரும் 196 மதிப்பெண்கள் பெறுவார்கள், தமிழில் NEET தேர்வு எழுதிய அனைவரும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு தகுதி உடையவர்கள் ஆகிவிடுவார்கள். மத்திய மற்றும் மாநில கோட்டாவில் இவர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு மருத்துவ கல்லூரியில் இடம் கொடுத்தே ஆக வேண்டும்.
சிபிஎஸ்இ தான் சிறப்பு என்று உளறிக்கொண்டிருந்த, ஏற்கனவே சீட் கிடைத்த பாப்புகளுக்கு ஆப்பு.
அய் ஆம் ஹாப்பி அண்ணாச்சி

கருத்துகள் இல்லை: