
தெலுங்கின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இதேபோல் தமிழ் சினிமா உலகிலும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, வாய்ப்பு அளிக்காதவர்களின் பட்டியலை வெளியிடப்போவதாக கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக இவர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறத் தொடங்கியுள்ளார்.
சென்னை ஹோட்டல் ஒன்றில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பிரபல இயக்குநர் முருகதாஸ் மீது புகார் கூறிய ஸ்ரீரெட்டி அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் மீது குற்றம் சாட்டினார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது புதிய புகார் ஒன்றைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி. இந்தப் பதிவில் ராகவா லாரன்ஸ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து விளக்கமாகத் தெரிவித்திருந்தார் அவர்.
புதிய பதிவு:
அடுத்தடுத்து தமிழ் திரையுலகப் பிரபலங்கள் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்து வருவது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் விஷால் தனக்கு மிரட்டல் விடுத்திருப்பதாக புதிய பதிவு வெளியிட்டுள்ளார்.மிரட்டும் விஷால்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக