சனி, 14 ஜூலை, 2018

நடிகை சன்னி லியோன் ...கவுர் என்ற சீக்கிய பெயரை பயன்படுத்துவதை சீக்கிய மதவாதிகள் ... சோ ஆங்க்ரி...

மின்னம்பலம்: நடிகை சன்னி லியோன்
‘கவுர்’ என்ற பெயரை
பயன்படுத்தியதற்கு, பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீக்கிய அமைப்பினர் வலியுறித்தி உள்ளனர்.
உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இந்தியாவின் மத்தியதர சீக்கிய குடும்பத்தில் பிறந்து கனடாவுக்கு இடம் பெயர்ந்தார் சன்னி லியோன். கனடாவின் ஆபாசப் பட உலகில் மிகப் பெரிய நட்சத்திரமாக உருவாகி உலகளவில் ரசிகர்களைப் பெற்றார். பின் பாலிவுட்டில் நடித்து வருகிறார். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது வீரமாதேவி என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். சன்னியின் இயற் பெயர், கரன்ஜித் கவுர் வோரா.
தற்போது‘கரன்ஜித் கவுர் : தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’ என்ற பெயரில் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாக தயாராகிவருகிறது. இந்த தொடர் ஜூலை 16ஆம் தேதி முதல் வெளியாகிறது.

இந்நிலையில் கவுர் என்ற பெயரை சன்னி லியோன் பயன்படுத்த சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிரோன்மணி குருத்துவாரா பிரபந்தக் கமிட்டியும், சீக்கிய பெண்கள் அமைப்பும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்களின் செய்தி தொடர்பாளர் தில்ஜீத் சிங் பேடி நேற்று(ஜூலை 13) அளித்துள்ள பேட்டியில், “எங்கள் மத அடிப்படை சட்டம் XVII, அதன் படி சீக்கிய குருவால் சீக்கிய பெண்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையான பெயர் கவுர். ஆண் குழந்தை பிறந்தால் சிங் என்றும் பெண் குழந்தை பிறந்தால் கவுர் என்றும் அவர்களது பெயருக்கு பின் அறிவிக்கப்படும். சீக்கிய குருவின் போதனைகளைப் பின்பற்றாத யாரும் இதை பயன்படுத்த அனுமதிக்க முடியாது. அப்படி பயன்படுத்தினால் அது சீக்கிய மத உணர்வை புண்படுத்தும். சன்னி லியோன் இந்தப் பெயரை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இதற்காக அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை: