சனி, 14 ஜூலை, 2018

காமராஜர் பிறந்தநாள் ஜூலை15.. ராஜாஜியை கவிழ்த்து காமராஜரை அரியணை ஏற்றிய திராவிடம்!

ஆலஞ்சியார் : காமராஜரை எல்லோரும் காங்கிரஸ்காரர் என்று தான்
அறிந்திருப்பார்கள் .. ஆனால் திராவிட கருத்தியலை சார்ந்தவர் அவரென்பது அவரின் அரசியல் வாழ்வியல் உணர்த்தும்..
..
தேசிய நீரோட்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தார் King maker of India ..என்று அவரை சொன்ன காலமும் உண்டு.. திரு.சத்தியமூர்த்தியின் சீடராக அரசியலில் நுழைந்தாலும் மிகப்பெரிய அங்கீகாரம் அவருக்கு ஆரம்பத்தில் கிடைக்கவில்லை ராஜாஜியின் ஆதிக்கத்தின்/ஆளுமையின் முன்பு அறியபடாதவராக அல்லது அதிகம் பேசபடாதவராகவே இருந்தார்.. ராஜாஜியின் வரலாற்றுப்பிழை இவருக்கு பிரகாசமான அரசியல் வாழ்வை தந்தது .. குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி அறிமுகபடுத்திய போது வெகுண்டெழுந்த பெரியார் .. கிரேசின் தீப்பெட்டியுமாக காத்திருங்கள் ..எப்போது நான் சொல்கிறோனே அப்போது அக்ரஹாரத்தை கொளுத்தலாம் என்றார் பெரியார் இவ்வளவு கடுமையாக நடந்துக்கொண்டதில்லை.. சூழிநிலை மிக மோசமாவது கண்டு ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார்.. ..
ராஜாஜியை மாற்றிய தீரவேண்டும் அந்த இடத்திற்கு மீணிடும் பார்பனன் வந்துவிட கூடாது என்பதிலே பெரியார் மிக எச்சரிக்கையாக காய் நகர்த்தினார்.. காமராஜரை முன்னிலைப் படுத்தினார் ஆதரிப்பதாக அறிக்கை வந்தது.. காமராஜரை குடியாத்ததில் நிற்க சொன்னார்.. அப்போது காமராஜர் நான் மிகவும் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவன் குடியாத்ததில் முதலியார்களும் முஸ்லீமான்களுமே அதிகம் வசிக்கிறார்கள் என்ற போது உன்னை எப்படி ஜெயிக்கவைப்பதென்று எனக்கு தெரியும் எனகூறி பச்சை தமிழனை நிறுத்தியிருக்கிறேன் அவரை தமிழர்கள் எல்லோரும் ஆதரிக்கவேண்டுமென்றார்...
தி.கழகத்திலிருந்து பிரிந்து திமுகவை நிறுவிய அண்ணாவும்.. காமராஜரை அந்த தேர்தலில் ஆதரித்தார்.. குணாளா மணாளா குலக்கொழுந்தே ..சென்றுவா குடியாத்தம் வென்று வா கோட்டைக்கு என்றார்.. கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்தும் ஆதரித்தார்.. காமராஜர் வென்றார்..

..
காமராஜர் முதல்வரான போது அப்போதைய காங்.தலைவர் U.N. தேவரை சந்திக்கவில்லை நேராக பெரியாரை சந்தித்து என்ன செய்யவேண்டுமென்ற போது .. ராஜாஜி 6000 பள்ளியை மூடிட்டார் அதை திறந்து நம்ம பிள்ளைங்களை படிக்க வைங்க .. என்றார்..
பள்ளிகளை திறந்தும் குழந்தைகளை படிக்கவைக்க பெற்றோர்கள் அனுப்ப மறுத்ததை அறிந்து சோறு போட்ட அனுப்பிவைப்பாய்ங்க..
என்ற போது அதற்கான போதிய நிதி அரசிடமில்லை என்றவுடன் செல்வந்தர்கள் தொழில் அதிபர்களிடம் நன்கொடை வசூலித்து மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார் காமராஜர்.. பணம் போதவில்லை என்றவுடன் விவசாயிகளிடம் முதல் மரக்காய் சாமிக்கும் இரண்டாவது மரக்காய் ஊர்கோவிலுக்கு கொடுக்குறீங்க மூணாவது மரக்காய் எனக்கு கொடுங்க நான் பிள்ளைகளுக்கு சோறு போடுறேன் என்று எம் பிள்ளைகளின் பசியை போக்கினார்..
..
இரட்டைமலை சீனிவாசன் பேரன் பரமேஸ்வரனை அறநிலையதுறை அமைச்சராக்க பெரியார் கோரினார் அதையும் ஏற்று சமூகநலத்துறை (அப்போது சமூகநலத்தில் தான் அறநிலையம் இருந்தது) அமைச்சராக்கினார்.. அண்ணல் அம்பேத்கர் .. குளத்தில் குளிக்கவும் குனிந்து அள்ளி தண்ணீர் குடிக்கவும் மறுக்கிறான் ஆனால் தமிழகத்தில் என் இனத்தை சேர்ந்தவன் கோவிலுக்குள் நுழையும் அதிகாரம் பெற்றான் என்றார்..
பரமேஸ்வரன் வருகை கண்டு தில்லை நடராஜரும் ஸ்ரீரங்கத்து ரங்கநாதரும் பதறும் காட்சி கண்டேன் அந்த மாட்சி கண்டேன் என்றார் பேரறிஞர் அண்ணா..
..
காமராஜர் மிக சிறந்த நாத்திகர்.. எதுவும் உழைப்பால் வரவேண்டுமென்றும் மூடநம்பிக்கையால் எந்த பலனுமில்லை என்றார்.. ஆர்எஸ்எஸ் அவரை கொலை செய்ய முயற்சித்த போதும் என்னை கொல்லலாம் ஆனால் என் கருத்தை செயலை இதனால் தடுத்துவிட முடியாது என்றார்.. பெரியார் மிகவும் மதித்த தலைவர்.. பெரியார் கருத்துகளுக்கு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் தந்த சிற்பி..
நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் காமராஜரின் ஆட்சியை .. திராவிட சிந்தாந்ததின் அல்லது திராவிட கருத்தியல் ஆட்சியின் தொடக்கமாகவே கருதவேண்டும் ..
நல்ல தலைவராக திமுக அவரை மதித்து கொண்டாடி இருக்கிறது.. அவசரநிலையின் போது ஆட்சியே போனாலும் காமராஜரை கைது செய்யமுடியாதென்று உறுதியோடி இருந்தவர் கலைஞர்.. தாயார் அஞ்சுகம் அம்மையார் மறைந்த போது முதல் ஆளாய் கோபாலபுரத்திலே கலைஞர் வருவதற்குமுன் வந்து நின்றவர் அதே போல காமராஜரின் மறைவின் போது சகோதரனைப்போல முன்னின்று எல்லா காரியங்களையும் கலைஞர் செய்தார்..
முன்பு எழுதிய கவிதையொன்று ஞாபகம் வந்தது..
..
என்ன..
சொல்லிவிட போகிறேன்
எளிமை..
எப்போதும்..
சொல்லில்
இனிமை..
துணிவு..
செயல்திறன்..
அஞ்சாமை
ஆளுமை,
இரக்கம்..
நேர்மை.
பொதுவாழ்வில்
தூய்மை..
கல்வி
#எல்லோருக்கும்_கல்வி ..
..
எங்கள் அறிவாசான்
#பெரியார்
பள்ளியில்
கடவுள் வாழ்த்துக்கு பதில்
காமராஜர் வாழ்த்தை பாடவேண்டுமென்றார்
இதைவிடவா
சொல்லி விட போகிறோம்..
..
காமராஜர் பிறந்தநாள் ஜூலை15
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: