வெள்ளி, 14 ஜூலை, 2017

லண்டன் ரஹ்மான் நிகழ்ச்சியில் அதிகம் தமிழ்பாடல்கள் ... ஹிந்தி ரசிகர்கள் எதிர்ப்பு

BBC : லண்டன் வெம்ப்ளியில் உள்ள அரங்கம் ஒன்றில் கடந்த 8 ஆம் தேதி
நடைபெற்ற ஏ.ஆர் ரஹ்மானின் ''நேற்று, இன்று, நாளை'' என்ற இசை கச்சேரி, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி பேசும் ட்விட்டர் பயன்பாட்டாளர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. வெம்ப்ளியில் உள்ள தி எஸ் எஸ் இ அரங்கத்தில் ஜூலை 8 ஆம் தேதி மாலை ஏ.ஆர் ரஹ்மானின் இசை கச்சேரி நடைபெறும் என்றும், அதில் பாடகர்கள் பென்னி தயால், ஜாவேத் அலி, நீத்தி மோகன், ஹரிச்சரன், ஜோனிட்டா காந்தி மற்றும் ரஞ்சித் பரோட் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக உணர்வுக்கு ஆதரவாக ஏ. ஆர். ரஹ்மான் உண்ணாவிரதம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீது 'ஃபத்வா' இச்சூழலில், சமூக ஊடகமான ட்விட்டரில் ஆர் ஸ்மித் என்ற பயன்பாட்டாளர், 'வெம்ப்ளியில் நடைபெற்ற கச்சேரி மிகவும் மோசம். தொடர் கிராஃபிக்குகளால் பெரும் தலைவலி' என்று பதிவிட்டிருந்தார்.


 @archana_ssawant அதனை தொடர்ந்து, அர்ச்சனா சாவந்த் என்ற பயன்பாட்டாளர், 'வெம்ப்ளியில் நடைபெற்ற கச்சேரியால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இந்த ஏமாற்றத்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தேன். மாமனிதரிடமிருந்து இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை' என்று பதிவிட்டிருந்தார். ரஹ்மான் பாலிவுட் ஹிட் பாடல்களை பாட தவறிவிட்டார் என்றும், வெறும் லேசர் லைட்கள் தமிழ் பாடல்களை மட்டுமே கச்சேரியில் கேட்டேன் என்றும் பல பயன்பாட்டாளர்கள் ட்விட்டரில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தது மட்டுமின்றி கச்சேரிக்காக செலுத்தப்பட்ட தொகையை திருப்பியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

 @gautamvaidya நிர்மல் பஜாரியா என்ற பயன்பாட்டாளர், ''கச்சேரியில் பாடப்பட்ட பாடல்களில் 99% தமிழ் பாடல்கள். பாலிவுட் ரசிகர்கள் ஏமாற்றப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளார்கள்'' என்று தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அதேசமயம் கச்சேரிக்கு கெளரவ பாடகராக வரவழைக்கப்பட்ட பாடகர் ஜாவேத் அலி ஏன் நிறைய பாடல்களை பாடவில்லை என்ற கேள்வியையும் பல ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் எழுப்பியுள்ளனர்.

 @nbajaria இந்நிலையில், ஏ.ஆர் ரஹ்மானின் கச்சேரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு தமிழ் மொழி பேசும் ட்விட்டர் பயன்பாட்டாளர்களும், பிரபலங்களும் தங்களுடைய பதிலடி ட்வீட்களை பதிந்து வருகின்றனர். ''ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று வரலாறு படைத்த போது அவர் ஒரு இந்தியர். ஆனால், ஏழு அல்லது எட்டு தமிழ் பாடல்கள் பாடல்கள் பாடினால் நீங்கள் கோபப்படுகிறீர்கள். இது நியாயாமா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி.

 @Chinmayi மேலும், இந்த கச்சேரியில் 65 சதவீதம் இந்தி பாடல்கள் இருந்தது என்றும், இசைக்கு மொழி எல்லையில்லை என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 'மொழித்திணிப்பில் வலி எப்படி இருக்கும் என்று வட இந்தியனுங்களுக்கு புரிய வைத்த தமிழன் ஏ.ஆர் ரகுமானுக்கு வாழ்த்துக்கள்' என்று ராஜன் நெல்லை என்ற ட்விட்டர் பயன்பாட்டாளர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

@NELLAIRAJAN 'தமிழில் பாடல்கள் பாடியதால் இந்திக்காரர்கள் பணத்தை திருப்பி கேட்கிறார்கள். அப்படி என்றால் 1947 லிருந்து இந்தி மொழி பேசும் மாநிலங்களுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் வழங்கி வந்த மானியங்களை திருப்பித்தர வேண்டும்' என்று கிரண் பண்டுலா என்பவர் ரஹ்மானுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை நையாண்டி செய்துள்ளார்.

 ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் தொடர்பான மீம்களும் தற்போது வைரலாக பரப்பப்பட்டு வருகின்றன.
லண்டன் வெம்ப்ளியில் உள்ள அரங்கம் ஒன்றில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற; ஏ.ஆர் ரஹ்மானின் ''நேற்று, இன்று, நாளை'' என்ற இசை கச்சேரி வெம்ப்ளியில் உள்ள தி எஸ் எஸ் இ அரங்கத்தில் ஜூலை 8 ஆம் தேதி மாலை ஏ.ஆர் ரஹ்மானின் இசை கச்சேரி நடைபெறும் என்றும், அதில் பாடகர்கள் பென்னி தயால், ஜாவேத் அலி, நீத்தி மோகன், ஹரிச்சரன், ஜோனிட்டா காந்தி மற்றும் ரஞ்சித் பரோட் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இச்சூழலில், சமூக ஊடகமான ட்விட்டரில் ஆர் ஸ்மித் என்ற பயன்பாட்டாளர், 'வெம்ப்ளியில் நடைபெற்ற கச்சேரி மிகவும் மோசம். தொடர் கிராஃபிக்குகளால் பெரும் தலைவலி' என்று பதிவிட்டிருந்தார்.

@archana_ssawant அதனை தொடர்ந்து, அர்ச்சனா சாவந்த் என்ற பயன்பாட்டாளர், 'வெம்ப்ளியில் நடைபெற்ற கச்சேரியால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இந்த ஏமாற்றத்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தேன். மாமனிதரிடமிருந்து இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை' என்று பதிவிட்டிருந்தார்.
ரஹ்மான் பாலிவுட் ஹிட் பாடல்களை பாட தவறிவிட்டார் என்றும், வெறும் லேசர் லைட்கள் தமிழ் பாடல்களை மட்டுமே கச்சேரியில் கேட்டேன் என்றும் பல பயன்பாட்டாளர்கள் ட்விட்டரில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தது மட்டுமின்றி கச்சேரிக்காக செலுத்தப்பட்ட தொகையை திருப்பியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

 @gautamvaidya நிர்மல் பஜாரியா என்ற பயன்பாட்டாளர், ''கச்சேரியில் பாடப்பட்ட பாடல்களில் 99% தமிழ் பாடல்கள். பாலிவுட் ரசிகர்கள் ஏமாற்றப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளார்கள்'' என்று தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
அதேசமயம் கச்சேரிக்கு கெளரவ பாடகராக வரவழைக்கப்பட்ட பாடகர் ஜாவேத் அலி ஏன் நிறைய பாடல்களை பாடவில்லை என்ற கேள்வியையும் பல ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் எழுப்பியுள்ளனர்.

 

கருத்துகள் இல்லை: