திங்கள், 10 ஜூலை, 2017

பாதபூஜை: சர்ச்சையில் சிக்கிய பாஜக முதல்வர்!

பாதபூஜை: சர்ச்சையில் சிக்கிய முதல்வர்!
கோயில் மின்னம்பலம் : திருவிழாவுக்குச் சென்றபோது பெண்களைக் கொண்டு பாதபூஜை நடத்திக்கொண்ட ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர்தாஸ் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார்.
ஜாம்ஷெட்பூரில் உள்ள பிரம்மா லோக் தம் கோயிலில் குரு பூர்ணிமாவை ஒட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்குத் தலைமை விருந்தினராக முதல்வர் ரகுபர்தாஸ் கடந்த வெள்ளிக்கிழமை சென்றார். அப்போது அவருக்கு மரியாதையோடு வரவேற்பு அளிக்கும்விதமாக பெரிய தாம்பாளத்தில் முதல்வரை நிற்கவைத்து, அவருக்கு இரு பெண்கள் பாதங்களைக் கழுவி ரோஜா மலர்களால் பூஜை நடத்தினர்.
இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் இப்போது வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, ஜார்க்கண்ட் முதல்வர் மேல்தட்டு மனப்பான்மையோடு நடந்துகொண்டதாகவும், பெண்களை அவமதித்துவிட்டதாகவும் சமூகதளங்களில் கண்டனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


ஆனால், விழா ஏற்பாட்டாளர்களோ, “முதல்வர் எந்த ஆதிக்க மனப்பான்மையோடும் நடந்து கொள்ளவில்லை. மேலும், அவருக்காக என்று சிறப்பாக எதுவும் நடத்தப்படவில்லை. யார் தலைமை விருந்தினராக வருகிறார்களோ, அவர்களுக்கு இந்த மண்ணின் பண்பாட்டின் அடிப்படையில் கொடுக்கப்படும் மரியாதைதான் இந்த நிகழ்வு. இதில் சர்ச்சை என்று எதுவும் இல்லை’’ என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: