திங்கள், 10 ஜூலை, 2017

சங்கிகளின் அடுத்தடுத்த பொய் பிரசாரத்தில் அதிர்ந்த இஸ்ரேல்..!

பிரதமர் மோடி ஜூலை 4 ஆம் தேதி இஸ்ரேல் நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக சென்றார். இந்தியா – இஸ்ரேல் நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக டிவிட்டர். பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் இரு தரப்பில் இருந்தும் பல தகவல்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் , மோடியின் சமூக ஊடக ஆதரவாளர்களான சங்கிகள் ஒரு படி மேலே போய் வெளியிட்ட போலியாக பதிவுகள் சில ,>போலி பதிவு 1: இஸ்ரேல் நாட்டில் சாலைகளில் ஓவியம் வரையும் ஒரு கலைஞர் , சாலையில் மோடியின் ஓவியத்தை வரைவது போன்ற பதிவு மிஷன் மோடி 2019 என்ற பெயரில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புகைப்படம் 2005 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்திற்கும் இந்தியா-இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போலியான புகைப்படங்களை தயாரிப்பதற்காக பல முறை இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

போலி பதிவு 2:
மோடியின் இஸ்ரேல் வருகையை ஒட்டி , இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இந்திய கொடி ஏற்றப்பட்டுள்ளது என புகைப்படத்துடன் போஸ்ட்கார்ட் நியூஸ் என பெயரில் பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மையில் இந்த புகைப்படம் 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. புகைப்படத்தை போட்டோஷாப் செய்து அதில் இந்திய கொடியை பறக்கவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களில் உள்ள டிராப்பிக் சிக்னல்களில் இரண்டிலும் ஒரே மாதிரியாக சிகப்பு விளக்குகள் எரிந்துகொண்டிருக்கின்றன.
போலி பதிவு 3 :
முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவாக நபவியா இஸ்லாமிக் இளைஞர் அமைப்பு போராட்டம் நடத்துவது போல், அந்த போராட்டத்தில் யூதர்கள் தயாரிப்பு பொருளான கோகோ கோலா, பீசா, கேஎப்சி போன்ற தயாரிப்புகளை வாங்க வேண்டாம் என கூறும் பாதகைகளுடன் போராட்டம் செய்வது போன்ற புகைப்படம்  @ShankhNaad  என்ற டிவிட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

நபவியா இஸ்லாமிக் இளைஞர் அமைப்பு ஸ்ரீலங்காவை சேர்ந்த அமைப்பாகும். இது 2012-ல் எடுக்கப்பட்ட புகைப்படம். இதில் குறிப்பிட்டுள்ள Galle என்னும் பகுதி ஸ்ரீலங்காவில் உள்ளது. ஒரு இஸ்லாமிய விரோத திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

போலி பதிவு 4 :
மோடியின் இஸ்ரேல் பயணத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் மே 5 ஆம் தேதி அஸாகேல் ஆர்ன்ஸ்டெய்ன் (@AzszaelAzazael) என்ற பெயரில் போலியான டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் அவர், தான் ஒரு பெருமை வாய்ந்த இஸ்ரேலியவராகவும் கட்டுக்கோப்பான யூதராகவும் விவரிக்கிறார். ஆனால் அவர் பதிவுகள் அனைத்து இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்துடன் தெரிந்துகொள்ளும் ஒரு நபராக இருக்கிறார்.

ஏன் என்றால் இது அஸாகேல் ஆர்ன்ஸ்டெய்ன் என்ற பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டு இந்தியரால் கையாளப்படும் கணக்கு. இந்த டிவிட்டர் கணக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் இஸ்ரேலை சேர்ந்த பத்திரிக்கையாளரும் மாடல் கலைஞருமான இடான் மாடாலான் -னின் புகைப்படம்.
free wordpress themes தீக்கதிர் 

கருத்துகள் இல்லை: