வியாழன், 13 ஜூலை, 2017

சபரிமலை ஐயப்பன் ஒரு அரசர் .. கடவுள் அல்ல ..அய்யனார், சாஸ்தா, தர்மராஜா, போதிராஜா இவை அனைத்துமே புத்தர் வழிபாடே.

ஐயப்பன் கோயில் - தெரியாத உண்மைகள்
கேரளா சபரிமலையில் உள்ள ஐயப்பன், உண்மையில் புராண கதை அல்ல, அது வரலாற்று பூர்வமான உண்மை. ஆனால் அந்த உண்மை இந்து பக்தர்கள் விரும்பும் உண்மை அல்ல, ஐயப்பன் உண்மையில் இந்து கடவுள் அல்ல அது ஒரு பவுத்த கோயில், அதை விட வினோதம் என்னவென்றால், அய்யப்பனே புத்தரை வணங்கி வந்த ஒரு அரசகுடும்ப இளவரசன் என்பது தான்.
இங்கு சொல்லப்பட்டிருப்பது, கற்பனை அல்ல, பந்தள அரசவம்சத்தில் வந்த, கேசரி பாலக்ருஷ்ண பிள்ளை எழுதிய Followers, மற்றும் ஈழவர்செம்பாட்டு என்ற நூலிகளில் இருந்து பெரும்பகுதியும் நலன்கல் கிருஷ்ணபிள்ளை மற்றும் டாக்டர்.எஸ்.கே.நாயர் ஆகியோரின் புத்தகங்களிலிருந்தும், திரு.ஜம்னாதாஸ் எழுதிய திருப்தி புத்தர் கோயிலே என்ற புத்தகத்திலிருந்தும் சொல்லப்படும் வரலாறே
ஐயப்பன் பற்றிய புராண கதைகளை சுருக்கமாக பார்த்தால், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்தவன், கழுத்தில் மணியுடன் காட்டில் குழந்தையாக பந்தள ராஜனால் கண்டெடுக்கப் பட்டு, அவனிடம் வாழ்கிறான் (காது கேளாத வாய்பேச முடியாத குருவின் மகனை குணப்படுத்துகிறான் (கேரள கிருஸ்த்துவ மதத்தின் தாக்கம்), சின்னம்மாவின் சூழ்ச்சியால் காட்டுக்கு புலிப்பால் கொண்டு வர போகிறான், அங்கே மகிஷியை கொல்கிறான், பின்னர் உதயணன் என்ற கொள்ளையனை கொல்கிறான், பின் சபரி மலையில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் செய்கிறான். உண்மையிலேயே நான் படித்த புராண கதைகளில் அந்த கதாசிரியரின் ஒரு தனித்துவ முத்திரை (Author’s Personal Touch) இல்லாத கதை இதுவென்று தான் சொல்வேன்.

ஐயப்பனின் உண்மை வரலாறு என்னவென்று பார்ப்போம், இதற்கு முன் பாலக்காட்டில் நம்பூத்ரிகள் அந்நாட்டு மன்னனால் விரட்டி அடிக்கப்பட்ட வரலாறில் நாம் கிபி 1200-ல் சடவர்ம சுந்தரபாண்டியன் மற்றும் சடவர்ம வீரபாண்டியன் இருவருக்கும் ஏற்பட்ட வாரிசு தகராறில் மாலிக்காபூர் (உண்மையில் மாலிக்காபூர் இஸ்லாமிய மதத்தை தழுவிய குசராத்தி பார்பனன், அலாவுதீன் கில்ஜியிடம் அடிமையாகா வேலை பார்த்தவன், கில்ஜியின் ஓரினசெர்க்கைக்கு பலநாள் பயன்பட்டு வந்த இவன் கில்ஜியின் கடைசி காலத்தில் இந்த ஒரே ஒரு திறமையின் அடிப்படையில் படைத்தலைவன் ஆக்கப்பட்டவன், கில்ஜி இறந்த பிறகு, சக தளபதிகளால் கொல்லப்பட்டவன்) உள்ளே நுழைந்து பஞ்சாயத்து செய்ததை பார்த்தோம், இதில் தோற்று ஓடிய வீரபாண்டியனும் அவனது குழுவும் கேரளா நாட்டில் அடைக்கலம் புகுந்தனர். அங்கே பந்தள நாட்டில் கைபுலதம்பன் என்ற மன்னன் அவர்களுக்கு அடிக்கலம் தந்தான். கைபுலத்தம்பன் வாரிசு இல்லாமல் இறந்து போக நாயர்கள், தமக்குள் ஏற்ப்பட்ட சண்டையில், யாருக்கும் வேண்டாம், பாண்டியனே மன்னனாக இருக்கட்டும் என்று அவனை முடிசூட்டுகின்றனர்.
கி.பி. 1300-களில், பஞ்சம் காரணமாக பாண்டிய நாட்டிலிருந்து சிறு படைகளோடு, கொள்ளையடிக்க கேரள காட்டுபகுதிக்கு வருகிறான் உதயணன் என்ற பாண்டிய மறவர் வீரன். இவன் அங்கு தலப்பாரா, இஞ்சிப்பாரா, கரிமலா ஆகிய இடங்களில் கோட்டைகள் கட்டி வருவோர் போவோரிடம் கொள்ளை அடித்து வருகிறான். இந்த பாதை, பழங்காலத்திலிருந்தே, கடல் வழியே வரும் அராபிய ராவுத்தர்கள் (இஸ்லாம் வருவதற்கு முன் குதிரை வணிகர்களின் பெயர்), முண்டகாயம், இடுக்கி, பந்தனம்திட்ட பகுதிகளில் வெள்ளாளர்கள் (விவசாயகுடிகள்) வியாபாரத்திற்கு பயன் படுத்திவந்த பாதையாகும்.
சபரிமலையில் இருந்த புத்த கோயிலின் பழைய பெயர், அவலயோகிச்வர விகாரம், அங்கே மக்கள் வழி பட்ட தெய்வம் தர்ம சாஸ்தா என்ற அவலயோகிச்வர ஸ்ரீபுத்தர். சபரிமலையை சுற்றி உள்ள பகுதிகளின் பேர்கள் பெரும் பாலும் பள்ளி, காவு என்ற சொல்லை கொண்டிருக்கும் கருநாகப்பள்ளி, பள்ளிக்கால், பரணிக்காவு, புத்தனுர்(போத்தனூர்). சாத்தன், புத்தஞ்சன், சாச்த்தவு போன்ற பெயர்கள் புத்தரை குறிக்கும் சொற்களே.
முன்னர் சொல்லப்பட்ட கொள்ளையன் உதயணன், பலமுறை அவலயோகிச்வர விகாரத்தை கொள்ளையடிப்பது வழக்கம், அங்கே அருகே இருந்த அலங்காடு, அம்பலப்புழா என்ற இரண்டு ஊர்மக்கள் அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற சண்டையில் இருந்த்தது உதயணனுக்கு, தன் கொள்ளை வேட்டைக்கு வசதியாக இருந்த்தது.
ஒருமுறை உதயணன், பந்தள நாட்டிக்கு வந்தான், (பந்தளம் – பத்து தளம் – பத்து ஊர்களை கொண்ட ஒரு சிறு நாடு), அவன் வந்த போது நாட்டில், அரசன் மற்றும் முக்கய வீரர்கள் யாரும் இல்லை, வயதான் தளபதி காம்பிள்ளில் பணிக்கர் மட்டுமே இருந்தார், வந்த உதயணன் அரசனின் தங்கையான இளவரசியையும் தூக்கி செல்கிறான்.
அவளை காதலித்து வந்த பணிக்கரின் மகன், உதயணன் கோட்டைக்குள் ரகசியமாக புகுந்து அவளை மீட்கிறான். ஆனால் தப்பித்த இளவரசி நாட்டுக்கு திருப்பினால் தான் புனிதம் இல்லாதவள் என்று நம்பூதிரிகள் என்று சொல்லுவார்கள் என சொல்ல இருவரும், பொன்னம்பலமேடு காட்டுபகுதிக்குள் சென்று வசிக்கிறார்கள், அவர்களுக்கு ஐயப்பன் என்ற மகன் பிறக்கிறான். இங்கு அவர்களுக்கு பெரிதும் உதவுவது பெரிசெரி பிள்ளை என்ற வேளான்குல தலைவன், இவரே பின்நாளில் ஐயப்பனின் மாமன் என்று அழைக்கப்படுகிறார். ஐயப்பன் பிறகு செம்பொறா குருகுலத்தில் களரி பயின்று வருகிறான்.
பிறகு ஒரு நாள் பந்தள ராஜா, போனம்பலமேடு பகுதியில் வேட்டைக்கு வரும் போது, தன தங்கையை பார்த்துவிட, எனக்கும் வாரிசு இல்லை, என் மருமகன் தான், இனி நாட்டை ஆளவேண்டும், என்று கூறி அழைத்து செல்கிறான்.
ஒருமுறை, காட்டெருமைகளின் தொல்லை அதிகமாக இருக்க, ஐயப்பன் அவற்றை விரட்ட, சிலகாலம் தனகி வேட்டையாடிய இடமே எரிமேலி (எருமை கொல்லி) பகுதி.
இறுதியாக உதயணனை அழித்து, அவலயோகிச்வர விகாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தன பொறுப்பை நிறைவேற்ற ஐயப்பன் முடிவுசெய்கிறான். உதயணன் இதற்குள் பெரும் பலத்துடன் வளர்ந்து விட்டதால், தனியாக முடியாது என்று சுற்றி உள்ள மற்ற அரசர்களின் உதவியை நாடுகிறான், முதலில் காயம்குளம் அரசனை நாடுகிறார், அவர் தன மக்கள் கடற்கொள்ளையரால் அவதிபடுவதாகவும், அவர்களை அடக்கினால், தான் உதவ தயார், என்று கூறுகிறார். காரணவர் என்ற அந்த நாட்டின் படைத்தலைவனின் உதவியோடு, ஐயப்பன் கடற்கொள்ளையரை வெல்கிறான், அந்த கொள்ளையர் தலைவன் வாவர் என்ற பெயர் கொண்ட இஸ்லாமியன், ஐயப்பன் அவனின் விரத்தை மெச்சி தன் படைகளுடன் சேர்த்து கொள்கிறான்.
பின்னர், நட்பு அரசர்கள் படைகளுடன், பந்தள நாட்டின் தலைமை தளபதி கடுத்தநாயர், வில்லன், மல்லன், என்ற இருசிறந்த வீரர்கள், மற்றும் வாவர் ஆகியோரின் தலைமையில் பெரும் படையை சேர்த்துக்கொண்டு உதயணனை அழிக்க புறப்படுகிறான்.
தன் படைகளை முன்று பிரிவுகளாக ஐயப்பன் பிரிக்கிறார்.
1. வாவரின் தலைமையில் ஆலங்காட்டு யோகம்
2. கடுத்தநாயர் தலைமையில் அம்பலப்புழா யோகம்
3. வில்லன் மல்லன் தலைமையில் பந்தலநாடு யோகம்
என்பவை அவற்றின் பெயர்கள்
ஆலங்காட்டு யோகம் மற்றும் அம்பலப்புழா யோகம் படைகள் போரிட்டதையே இன்று பெட்டதுள்ளல் என்ற பழக்கமாக மாறிவிட்டது. சண்டைக்கு புறப்பட்ட படைகள் அவலயோகிச்வர விகாரத்தை நெருங்கிய போது, அமைதியான கோயிலின் அருகே செல்லும் போது போர்கருவிகளை எடுத்து செல்லக் குடாது என்று அங்கிருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கிழே வைத்து விட்டு செல்ல சொன்னான். அதுவே இன்று பக்தர்களின் சரம்குத்தி என்ற பழக்கமாக மாறிவிட்டது.
இம்மூன்று படைகளும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு என்று மூன்று திசைகளிலிருந்து தாக்க நாலவது திசையில் அரபிக்கடல் வழிமறிக்க இறுதியாக கொள்ளையன் உதயணன் கொல்லப்படுகிறான்.
அவலயோகிச்வர விகாரத்தை புனரமைத்து, புதிய அவலயோகிச்வரர் சிலையை நிர்மாணிக்கும் வரை இப்போது சபரி மலையில் மணிமண்டபம் இருக்கும் இடத்தில் அமர்ந்து மேற்பார்வை செய்துவந்தான், பின்னர் தன் நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்தான்.
1300-ல் நடந்த இந்த வரலாறு எப்போது புராணமாக மாற்றப்பட்டது என சரிவர தெரியவில்லை.
அனாலும் சபரி மலை தர்ம சாஸ்தா கோயில் என்பதை அங்கே உள்ள வழக்கங்களை கொண்டு அறியலாம்.
உதாரணமாக தர்மம் (அ) தம்மம் என்பது புத்தமத வார்த்தையே, புத்தமத நூலான அமரகோசம் “சத்தா தேவ மனுசானாம்” சாத்தான் என்றால் புத்தர் என்று சொல்கிறது. பழைய புராண நூலான விஷ்ணு புராணத்தில் ஐயப்பனை பற்றிய எந்த குறிப்பும் இல்லை ஆனால், பிற்காலத்தில் எழுதப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தில் ஐயப்பன் வருகிறார், இதிலிருந்து நாம் அறிவது பிற்காலத்தில் பாகவதத்தில் ஐயப்பன் செர்க்கப்படிருக்க வேண்டும் அல்லது பாகவதமே 1400-பின் தான் எழுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஐயப்பன் கையில் காட்டும் சின் முத்திரை, உலகில் உள்ள எல்லா புத்த சிலைகளிலும் காண முடியும். ஐயப்பனின் அய்துங்கள் எல்லாமே போதிசத்துவரின் ஆயுதங்களே.
பிரபல வரலாற்று ஆசிரியர் வானமாமலை கூறுவது என்னவென்றால், புத்தமதம், தமிழ்நாட்டில் அழியவில்லை, பவுத்த கதைகள் அனைத்தும் விஷ்ணு கதைகளாக மாற்றப்பட்டுவிட்டன, அய்யனார், சாஸ்தா, தர்மராஜா, போதிராஜா இவை அனைத்துமே புத்தர் வழிபாடே.
இவை எல்லாவற்றையும் கடந்து அய்யப்பன் கோயில் வழி பாட்டில் ஒருவித சமத்துவத்தை காணலாம், எல்லா சாதியினரும் தன குழுவுக்கு குருசாமி ஆகலாம், தீவிரமான விரதங்கள், விரதம் இருக்கும் ஒரு பார்பானை காட்டுங்கள் பார்போம்
பத்மசம்கிதை என்ற வேதபுராண நூல், ஐயப்பன் கோயிலில் பூஜை செய்ய வேண்டியது பரசவா என்னும் சூத்திரனாக இருக்க வேண்டும் என்கிறது, அனால் அதையும் பார்பனர் ஏமாற்றி அவர்க்கே எடுத்து கொண்டார்கள்.
இதில் மோற்றும் ஒரு வேடிக்கை என்னவென்றால், கேரளாவில் இருக்கும் கோயிலில், தலைமுறை தலைமுறையாய் பூஜை செய்பவர்கள் ஆந்திரா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட தெலுங்கு பார்பனர், விஜயநகர பேரரசை கடைசி வம்சமான அரவிடு வம்சத்தினரான நாயகர்கள் ஆண்ட போது இந்த அவலயோகிச்வரர் இந்து ஐயப்பனாக மாற்றப்பட்டிருக்கலாம்.
இதற்கும் ஒரு காதலி பரசுராமன் ஆந்திர தேசத்தில் இருந்து இரண்டு பார்பனரை அய்யப்பன் கோயிலில் பூஜை செய்ய கூட்டிவந்தான், அவர்களை ஆற்றை கடந்து வர சொன்ன போது, ஒரு பார்பான் தண்ணியின் மீது ஏறி நடந்துவந்தான், அவனை பரசுராமன் தாரைநேன்னிள்ளார் என்றான், அடுத்தவன் ஆற்றுநீரை இரண்டாக பிளந்து நிற்கச்செய்து, அடியிலிருந்த மண் தரையில் நடந்து வந்தான் அவனை தாளமண் என்று அழைத்து நீ தான் உயர்ந்தவன் எனவே நீ தான் அய்யப்பனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்றான் அன்று முதல் இன்றுவரை தாளமண் குடும்பத்தினரே அங்கு பூஜை செய்து வருகின்றனர்,
1821-ல் பந்தளம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் சேர்க்கும் போது சுமார் 48 கோயில்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சேர்க்கப்பட்ட போது சபரி மலையும் செர்க்கபடுகிறது. பின்னர் இப்போது அங்கிருக்கும் சிலையே 1910-ல் தான் நிறுவப்படுகிறது. 1975-ல் அங்கிருந்த கோயில் தீக்கிரையாகிறது (அல்லது ஆக்கப்பட்டதா தெரியாது) அதன் பின் இப்போது நாம் பார்க்கும் வடிவில் கோயில் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு அதன் பழைய பவுத்த அடையாளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது.

7 கருத்துகள்:

VILMEENKODI சொன்னது…

பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர்கள் ஆவர். அவர்கள் தற்போதைய பந்தளத்தின் நம்புதிரி பாண்டிய வம்சத்துடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல. நம்பூதிரிகள் பரசுராமரின் பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள். நம்பூதிரிகள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூர வர்மாவின் ஆட்சியின் போது உத்தர பாஞ்சாலத்தின் (பண்டைய நேபாளம்) தலைநகராக இருந்த அஹிச்சத்ராவிலிருந்து கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தவர்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் பாண்டிய வம்சம் முடிவுக்கு வந்தது. அன்றிலிருந்து நம்பூதிரிகள் பந்தள அரசர்களாக மாறி, பாண்டியர்களாக வேடமிட்டனர். இதேபோல் பூஞ்சார் பாண்டிய வம்சத்திற்குப் பதிலாக திருச்சூரைச் சேர்ந்த சார்க்கரா கோவிலகம் என்ற துளு பிராமண வம்சம் வந்தது. தமிழ் வில்லவர் வம்சத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்கள் வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர். தற்போதைய பந்தளம் மன்னர்கள் வில்லவர்களோ தமிழர்களோ அல்ல. அவர்கள் மதுரை தமிழ் பாண்டிய வம்சத்துடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல.

VILMEENKODI சொன்னது…

அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பந்தளத்தின் பாண்டிய இளவரசன் அய்யப்பன் தலைமையில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாயக்கர் படையைத் தோற்கடித்தனர். மதுரை திருமலை நாயக்கர் கி.பி.1623ல் மறவர் தலைவனும் கொள்ளைக்காரனுமான உதயணன் தலைமையில் ஒரு கொள்ளைப் படையை அனுப்பினார். உதயணனும் அவனது படையும் 17 வருடப் போராட்டத்திற்குப் பிறகு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

அர்த்துங்கல் தேவாலயம்

செயின்ட் ஆண்ட்ரூ பேராலயம், அர்த்துங்கல் அரபிக்கடலை நோக்கிய கடற்கரையோரத்தில் கேரளாவின் சேர்த்தலையில் உள்ள அர்த்துங்கலில் அமைந்துள்ளது. அர்த்துங்கல் தேவாலயம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டது. இது 1584 இல் விகார் ஜாகோமோ ஃபெனிசியோ என்ற இத்தாலிய ஜேசுயிட் பாதிரியாரால் மீண்டும் கட்டப்பட்டது. பக்தர்கள் இவரை "அர்த்துங்கல் வெளுத்தச்சன்" என்று அழைத்தனர். திருத்தந்தை. ஜியாகோமோ ஃபெனிசியோ (கி.பி. 1558 - கி.பி. 1632), லத்தீன் மொழியில் இந்து மதத்தைப் பற்றிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதுவதற்காக இந்து மதத்தைப் படித்த முதல் ஐரோப்பிய மிஷனரி ஆவார். இந்து கலாச்சாரத்திலும், சீரப்பஞ்சிற பணிக்கர்களிடம் கற்றுக்கொண்ட களரிப்பயற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

அர்த்துங்கல் வெளுத்தச்சன்

அர்த்துங்கல் வெளுத்தச்சன் அர்த்துங்கல் தேவாலயத்தின் விகாரியாக இருந்தபோது, ​​சேர்த்தலையின் லத்தீன் கத்தோலிக்கர்களும் உதயணனுக்கு எதிரான போரில் இணைந்தனர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் முகம்மாவிலேயே புகழ்பெற்ற சீரப்பஞ்சிற களரியில் பயிற்சி பெற்றவர் என்றும் புகழ் பெற்றவர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் அவரது லத்தீன் கத்தோலிக்கர்கள் ஐயப்பனின் ஆதரவாளர்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்வுகள் அதாவது கி.பி.1623 முதல் 1659 வரையிலான காலகட்டத்தில், அர்த்துங்கல் வெளுத்தச்சன் மிகவும் வயதானவராக இருந்திருக்கலாம். அர்த்துங்கல் வெளுத்தச்சன் கிபி 1632 இல் காலமானார்.

கி.பி.1632ல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் ஐயப்பன் சுவாமி ஒரு இளைஞராக இருந்தார். எனவே உதயணனுடன் ஐயப்பன் செய்த போர் கி.பி.1632 முதல் 1640 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கலாம். நாயக்கர் படையெடுப்பிற்கு பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உதயணன் கொல்லப்பட்டதாக வாய்மொழி மரபுகள் கூறுகின்றன.

புனித செபாஸ்டியன் சிலை

கி.பி 1747 இல் புனித செபஸ்தியார் சிலை நிறுவப்பட்ட போது, ​​பல உள்ளூர் பக்தர்கள் சிலையை வெளுத்தச்சன் என்றும் அழைக்கத் தொடங்கினர்.

ஆலங்காடு யோகம்

ஐயப்ப ஸ்வாமி ஆலங்காடு தலைவர் ஞாலூர் கர்த்தா, காம்பிள்ளி பணிக்கர் மற்றும் முல்லப்பிள்ளி நாயர் ஆகியோர் முன்னிலையில் அர்த்துங்கல் வெளுத்தாவுடன் ஆலுவாவில் உள்ள பெரியாறு கரையில் ஆலங்காட்டு வீரர்களுக்கு உரையாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எருமேலியில் மலைப்பாங்கான நிலப்பரப்பில் ஏறிச் செல்லும் போது 'சரணம் ஐயப்பா' என்று முதன்முதலில் முழக்கமிட்டவர் காம்பிள்ளி பணிக்கர் ஆவார். முதல் வெளிச்சப்பாடு அல்லது தேவ வாக்கு கூறுபவர் இவரே ஆவார். ஆலுவாவில் உள்ள பாரூர்கவலயிலிருந்து இடதுபுறம் போகும்போது ஆலங்காட்டுக்கு அருகில் உள்ள இடம் காம்பிள்ளி.

அம்பலப்புழா யோகம்

அம்பலப்புழா பழமையான பாண்டிய துறைமுக நகரமான புறக்காடு அருகே உள்ளது. பழங்காலத்தில் வேம்பநாட்டுக் காயலுக்கு தெற்கே உள்ள அனைத்து பகுதிகளும் பாண்டிய வம்சத்தின் கீழ் இருந்தன. கி.பி 77 இல் முசிறிக்குச் சென்ற பிளினி, மோதுராவின் மன்னன் பாண்டியோன் ஆட்சி செய்த நகரமான பரேகே-புறக்காட்டில் மிளகு வாங்க உள்ளூர் மக்களால் வற்புறுத்தப்பட்டார்.

எருமேலியில் வாவர் தலைமை தாங்கிய ஐயப்பன் படையில் சேர்வதற்காக இங்கிருந்து ஒரு பணிக்கர் படை புறப்பட்டது. அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எருமேலியில் அம்பலப்புழா யோகம் பக்தர்களால் பேட்ட துள்ளல் என்ற புனித சடங்கு நடனம் ஆடப்படுகிறது.

VILMEENKODI சொன்னது…

அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

பாண்டியன் வனவாசம்

திருமலை நாயக்கர் (கி.பி. 1723 முதல் 1759 வரை) ஆட்சிக்கு வந்தபோது, ​​மதுரையிலிருந்து அனைத்து பாண்டிய குடும்பங்களையும் நாடு கடத்தினார் என்று பொதுவாக நம்பப்படுகிறது. சிலர் வேணாட்டில் உள்ள கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் குடியேறினர். ஆனால் பூஞ்சாறு மற்றும் பந்தளம் ஆகிய இடங்களில் குடியேறிய பாண்டியக் குடும்பங்கள் கி.பி 1610 ஆம் ஆண்டிலேயே குடியேறியிருக்கலாம்.

பாண்டிய இளவரசி மாயாதேவிக்கு பிறந்த அய்யப்பன், 1632 இல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் இளைஞராக இருந்ததால், பாண்டிய குடியேற்றம் கி.பி 1610 இல் நிகழ்ந்திருக்கலாம்.

பணிக்கர்கள்

பணிக்கர்கள் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்கள், அவர்கள் போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தனர். ஒவ்வொரு பணிக்கரும் ஒரு சிறிய படையை பராமரித்து, அவர்கள் சேர மற்றும் தொடர்புடைய பாண்டிய வம்சங்களை ஆதரித்தனர். பணிக்கர் என்பவர்கள் தமிழ் வில்லவர் மக்களின் துணைக்குழுக்கள் ஆவர்.

ஆனால் கி.பி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு, மற்றும் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு கி.பி 1335 இல் கேரளாவில் துளு தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. அதன் பிறகு சாமந்த க்ஷத்திரியர்கள், துளு பிராமண நம்பூதிரிகள் மற்றும் நாயர்களால் கேரளா ஆட்சி செய்யப்பட்டது. இக்காலத்தில் பல பணிக்கர்களும் கேரளாவை விட்டு வெளியேறினர். சிலர் இலங்கை சென்றனர். சிலர் ஈழவர்களுடனும், மற்றவர்கள் போர்த்துகீசிய இராணுவத்துடனும் பின்னர் சிரியன் கிறிஸ்தவர்களுடனும் இணைந்தனர்.

சீரப்பஞ்சிற பணிக்கர்கள்

சேர்த்தலையில் உள்ள முகம்மாவில், சீரப்பஞ்சிற களரி அமைந்திருந்தது. சீரப்பஞ்சிற பணிக்கர்கள் ஈழவர்களுடன் இணைந்திருந்தார்கள். இந்த சீரப்பஞ்சிற களரியில் ஜேசுயிட் பாதிரியார் அருட்தந்தை ஜாகோமோ ஃபெனிசியோ, என்ற அர்த்துங்கல் வெளுத்தச்சன் களரிப்பயற்றில் பயிற்சி பெற்றார். சீரப்பஞ்சிற களரியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அர்த்துங்கல் தேவாலயம் இருந்தது. அய்யப்பன் சீரப்பஞ்சிற களரியில் தற்காப்பு கலை பயிற்சி பெற்றவர்.
அடுத்த சீரப்பஞ்சிற பணிக்கரின் மகள் லளிதா பிற்காலத்தில் மாளிகப்புறத்தம்மா என்று அழைக்கப்பட்டார்.

பாண்டிய பிரதேசங்கள்

17 ஆம் நூற்றாண்டில், மத்திய கேரளா தாய்வழி துளு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டாலும், ஆலங்காடு, அம்பலப்புழா மற்றும் பெரியாற்றின் கரையோரம் இருந்த பல பணிக்கர்களும் பந்தளத்தின் பாண்டியர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். மத்திய கேரளாவில் பாண்டியர்களின் பிரதேசங்கள் பந்தளம், மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளி பகுதி ஆகும். மேலும் இந்த பாண்டிய பிரதேசம் பாண்டியன் பதிவுகளில் கேரளசிங்க வளநாடு என்று அழைக்கப்பட்டது.

கேரளாவில் பாண்டியரின் குறுநாடுகள்
1. மாறநாடு கொல்லம்
2. பந்தளம்
3. அம்பலபுழா-புறக்காடு
4. நிரணம்-கோட்டயம்
5. ஆலங்காடு

நாயக்கர் தாக்குதல்

திருமலை நாயக்கர் 1623 முதல் 1630 கி.பி.க்கு இடைப்பட்ட காலத்தில் கேரள பாண்டியர்களுக்கு எதிராக மறவப்படையுடன் கொள்ளையனாக இருந்த உதயணன் என்ற மறவ தலைவனை கேரளாவிற்கு அனுப்பினார். மூணாறு அருகே கரிமலையில் உதயணன் கோட்டை கட்டினான். உதயணன் அருகில் இருந்த இடங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான். உதயணன் பாண்டிய இளவரசி மாயாதேவியைக் கடத்தினான் ஆனால் அவள் மீட்கப்பட்டாள். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகுதான் உதயணன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

நாயக்கர் படையெடுப்பு பற்றிய அச்சம் உதயணனுக்கு எதிராக பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைவதற்கு வழிவகுத்தது.

பாண்டியன் இளவரசியின் மீட்பு

பாண்டிய மன்னர் சீரப்பஞ்சிற பணிக்கர் உதவியுடன் தன் சகோதரியை மீட்டு சீரப்பஞ்சிற தறவாடு வீட்டில் தங்க அனுப்பினார். பாண்டிய இளவரசி சீரப்பஞ்சிற பணிக்கரின் மருமகனை மணந்திருந்தார் என்பது ஒரு பார்வை. அவர்களுக்குப் பிறந்த மகன்தான் ஐயப்பன்.
பணிக்கர் களரியாக இருந்த ஆலங்காடு யோகம், ஐயப்பனின் தந்தையின் இடமான பித்ருஸ்தானமாகவும் கருதப்படுகிறது. சீரப்பஞ்சிற பணிக்கரின் சகோதரியின் கணவர் ஆலங்காடு பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

பொதுவாக பணிக்கர் வில்லவர் வம்சங்களுக்கு சேவை செய்த தற்காப்பு பிரபுக்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அந்தஸ்தால் இளவரசிகளை அவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சமே கேரளாவில் தப்பியோடியவர்கள் மற்றும் அவர்கள் பாதுகாப்பிற்காக பணிக்கர் படைகளை நம்பியிருந்தனர்.

VILMEENKODI சொன்னது…

அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

ஒத்திசைவான நம்பிக்கை

ஆனால் அய்யப்பன் மிகவும் இளமையாக இருந்த அந்த சகாப்தத்தில், ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்று மக்கள் நம்பத் தொடங்கினர்.

செபஸ்தியார் ஒரு ரோமானிய அதிகாரி, அவர் கிறித்துவ மதத்தைத் தழுவினார், அவர் பிரிட்டோரியன் காவலர்களின்  கேப்டனாக இருந்தார், அவர் ரோமானிய பேரரசர் டியோக்லெஷியனை (கி.பி. 284 முதல் 305 வரை) கேலி செய்து அவமானப்படுத்தினார். இது புனித செபஸ்தியார் மீது அம்புகளை எய்து மரணதண்டனை நிறைவேற்ற வழிவகுத்தது. புனித செபஸ்தியார் அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் பிரபலமான புனிதர் ஆனார்.

அர்த்துங்கல் தேவாலயத்தில் மிலனில் செதுக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிலை கி.பி 1647 இல் நிறுவப்பட்டது.

போர்த்துகீசிய சகாப்தத்தில் ஜேசுயிட் பாதிரியார்கள் உள்ளூர் இந்து மற்றும் திராவிட பழக்க வழக்கங்களை நிராகரிக்கவில்லை. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெண்கலக் கொடிக் கம்பங்கள் இருந்தன, அதில் கொடிகள் ஏற்றப்பட்டன. புனித செபாஸ்டியன் தேவாலயங்களில் இன்றும் வருடாந்திர திருவிழாவின் போது தேவாலயத்தின் மீது இரண்டு வெள்ளை பருந்துகள் பறக்கும் தோற்றத்திற்காக பலர் காத்திருக்கிறார்கள். இது கேரள கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படும் ஒரு இந்து வழக்கம் ஆகும்.

ஐயப்பன் பக்தர்கள்

பல ஐயப்பன் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக அர்த்துங்கல் பசிலிக்காவிற்கு வருகை தருகின்றனர். அய்யப்பன் புனித செபஸ்தியாருடன் மிகவும் நட்பாக பழகியதே இதற்குக் காரணம். அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவர்கள் சகோதரர்களாக கருதப்பட்டனர்.1647 ஆம் ஆண்டு அர்த்துங்கல் தேவாலயத்தில் பளிங்கு கல் செபஸ்தியார் சிலை நிறுவப்பட்டது. எனவே புனித செபஸ்தியாரோடுள்ள சுவாமி ஐயப்பனின் நட்பு அந்த காலத்திலேயே தொடங்கியிருக்கலாம்.

சுவாமி அய்யப்பன் கி.பி 1647 இல் அர்த்துங்கல் தேவாலயத்தில் உள்ள புனித செபஸ்தியார் சிலையை பார்வையிட்டிருக்கலாம். இந்த நிகழ்வு சுவாமி ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்ற புராணத்தை உருவாக்கியிருக்கலாம். அர்த்துங்கல் லத்தீன் கத்தோலிக்கர்கள் அய்யப்பனின் வலுவான ஆதரவாளர்களாக இருந்தனர்.

அர்த்துங்கல் தேவாலயத்தில் சபரிமலை பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். அவர்கள் யாத்ரீகர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் முத்ரா என்ற புனித சங்கிலி மாலையை அகற்றுகிறார்கள். தேவாலயத்திற்கு அருகில் உள்ள இரண்டு குளங்களில் ஒன்றில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

மத நல்லிணக்கம்

அய்யப்பனால் நிறுவப்பட்ட மத மற்றும் இன நல்லிணக்கத்தால் அர்த்துங்கல் தேவாலயத்திலும் வாவர் பள்ளியிலும் பக்தர்கள் வழிபட முடிந்தது. மலை அரையர், பணிக்கர், லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஐயப்பனை ஆதரித்து மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.

அசல் பந்தளம் தமிழ் வில்லவர் பாண்டிய வம்சம் 1700 களின் பிற்பகுதியில் முடிவுக்கு வந்திருக்கலாம். அதன் பிறகு பந்தளம் பாண்டியன் பிரதேசம் ராஜா என்ற பட்டத்துடன் பாண்டியர்களாக வேடமணிந்த பார்கவ குலத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் குடும்பத்தால் கைப்பற்றப்பட்டது.

பூஞ்சார் பாண்டிய வம்சம்

1700களில் குருவாயூர் அருகே உள்ள வெங்கிடங்குவில் இருந்து தமிழ் பூஞ்சார் பாண்டியன் வம்சத்திற்குப் பதிலாக சார்க்கரா கோவிலகம் என்ற துளு பிராமண போற்றி குடும்பம் வந்தது. பாண்டிமண்டலம் உடைய குலசேகரப் பெருமாள் என்ற திருநாமத்துடன் துளு பிராமண வம்சத்தினர் பூஞ்சாரை ஆண்டனர்.

பிராமண பந்தளம் மற்றும் பூஞ்சார் வம்சங்கள் இரண்டும் தாய்வழி வம்சாவளியைக் கடைப்பிடித்தன.

அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர்.

பாண்டிய வம்சத்திற்குப் பின் வந்த ஆரிய நம்பூதிரி பாண்டியர்கள் அஹிச்சத்திரத்திலிருந்து குடிபெயர்ந்த நேபாள வேர்களைக் கொண்ட துளு பிராமணர்கள் ஆவர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து நம்பூதிரி பாண்டியர்கள் காலத்தில் சீரப்பஞ்சிற பணிக்கர்களும் மலை அரையர்களும் சபரிமலை கோயிலில் தங்களின் முதன்மையான இடத்தை இழந்தனர். பக்தர்கள் இனம், மதம், பாலினம் மற்றும் வயது அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டனர்.

VILMEENKODI சொன்னது…

அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

மாலிக் காஃபூரின் படையெடுப்பு

கி.பி 1310 இல் டெல்லி சுல்தானகத்திலிருந்து படையெடுப்பாளராக இருந்த மாலிக் காபூருடனான போரில் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் டெல்லி ராணுவத்தால் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டனர். மலபாரின் துளு படையெடுப்பாளர்கள் அதாவது சாமந்தர், நாயர் மற்றும் நம்பூதிரிகளுக்கு டெல்லி சுல்தானியம் மற்றும் மாலிக் காஃபூர் ஆகியோர் கேரளாவின் ஆதிக்கத்தை அளித்தனர்.

1335 ஆம் ஆண்டு கேரளா முழுவதும் துளு சாமந்தர்கள் மற்றும் நம்பூதிரிகளால் துளு-நேபாள தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. துளு-நேபாளத் தாய்வழி சவர்ண வம்சங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களால் ஆதரிக்கப்பட்டன.

முந்தைய பிராமணர்கள்

பிற்கால சேர வம்ச காலத்தில் (கி.பி. 800 முதல் கி.பி. 1120 வரை) பிராமணர்கள் பட்டர், பட்டாரர், பட்டாரகர், பட்டாரியர், பழாரர், சாத்திரர், நம்பி, உவச்சர் போன்ற பெயர்களால் அறியப்பட்டனர். கி.பி.1335க்கு முந்தைய தமிழ்ப் பதிவுகள் எதிலும் நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை.

1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு முந்தைய தமிழ் பிராமணர்கள் அனைவரும் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்.

பரசுராமர் கேரளாவின் மீது தங்களுக்கு அதிகாரம் அளித்ததாக நம்பூதிரிகள் கூறுகின்றனர். உண்மையில் 1310 ஆம் ஆண்டு துளுவ பிராமண நம்பூதிரிகளுக்கும் துளு சாமந்தர்களுக்கும் மாலிக் காஃபூரால்தான் கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது.

வில்லவர்களின் வீழ்ச்சி

இது கேரளாவில் திராவிட தமிழ் வில்லவர் வம்சங்களான சேர மற்றும் பாண்டிய வம்சங்களை அடக்கப்படுவதற்கு வழிவகுத்தது. பெரும்பாலான திராவிட மலையாளிகள் ஆரிய-நாக படையெடுப்பாளர்களால் அவர்ணர் என்று முத்திரை குத்தப்பட்டனர். நம்பூதிரிகள் துளு-நேபாள பிராமணர்கள், அவர்கள் பாண்டிய வம்சத்தின் பரம எதிரிகளாக இருந்தனர்.

நம்பூதிரி பாண்டிய வம்சம்

தற்போதைய பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம் ஆரிய பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தது, அவர்கள் உபநயனத்தை நடத்துபவர்கள், சைவ உணவு உண்பவர்கள், தமிழ் ஒருபோதும் பேசாதவர்கள்.

சபரிமலை கோயிலும் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியமும் திராவிட வில்லவர் மக்களுக்கு சொந்தமானது ஆனால் அவர்களின் பாரம்பரியம் இப்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து

1950ல் சபரிமலை கோவிலில் மீண்டும் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அய்யப்பன் சிலை தீயில் எரிந்து சேதமானது.

புதிய அய்யப்பன் சிலை

1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த சர் பொன்னம்பல தியாக ராஜன் என்கிற பி.டி.ராஜன், பழமையான ஐயப்பன் சிலைக்குப் பதிலாக, தற்போதைய பஞ்சலோக ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலுக்கு பரிசாக அளித்தார். ஆனால், சபரிமலை கோவிலுக்கு திராவிடத் தொடர்பை யாரும் விரும்பாததால், இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

ஐயப்பன் புராணத்தின் காலம்

சுவாமி ஐயப்பன் புராணத்தின் காலம் 1623 இல் திருமலை நாயக்கரின் படையெடுப்பில் தொடங்கி கி.பி 1647 இல் புனித செபஸ்தியாரின் பளிங்கு சிலை நிறுவப்பட்டதில் முடிவடைகிறது.

VILMEENKODI சொன்னது…

பந்தளத்தின் வில்லவர் பாண்டியர்கள் மற்றும் நம்பூதிரி பாண்டியர்கள்

தமிழ் பாண்டிய ஆட்சியின் முடிவு

1700களில் பந்தளத்தின் அசல் தமிழ் வில்லவர்-மீனவர் பாண்டியன் வரிசை முடிவுக்கு வந்தது. தமிழ் பாண்டிய வம்சம் தமிழ் வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. தமிழ் பாண்டிய இராச்சியம் வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டது.

பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம்

1700 களின் பிற்பகுதியில் நம்பூதிரி வம்சத்தினர் பந்தளம் பாண்டிய பிரதேசங்களை ஆக்கிரமித்து தங்களை பாண்டியர்கள் என்று அழைக்கத் தொடங்கினர். பந்தளத்தின் நம்பூதிரி பாண்டிய வம்சத்தினர் தங்களை "ராஜா" என்று அழைத்துக் கொள்கின்றனர். நம்பூதிரி பாண்டியர்கள் பார்ப்பனர்களின் பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள். கேரளாவின் மற்ற துளு-நேபாள வம்சங்களைப் போலவே மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன் பிறந்த நட்சத்திரத்தை சேர்க்கிறார்கள் உதாரணமாக "அஸ்வதி திருநாள்" கோதவர்மா. பந்தளத்தைச் சேர்ந்த நம்பூதிரி பாண்டியர்கள் சுத்த சைவ உணவு உண்பவர்கள்.
நம்பூதிரி பாண்டியர்கள் பதினோரு வயதில் உபநயனம் செய்து வாழ்நாள் முழுவதும் புனித நூலை (பூணூல்) அணிவார்கள்.
தற்போதைய பந்தளம் பாண்டியர்களின் தந்தை, தாத்தா மற்றும் அவர்களின் முன்னோர்கள் அனைவரும் நம்பூதிரி பிராமணர்கள் ஆவர். நம்பூதிரி பாண்டியர்கள் பாண்டியர்களாக வேடம் போடுகிறார்கள் ஆனால் அவர்கள் இனரீதியாக மதுரை பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

வில்லவர் பாண்டியன் மற்றும் நம்பூதிரி பாண்டியன்

வில்லவர் பாண்டியன்

1. திராவிடர்கள்

2.கொற்கை மற்றும் மதுரையை சேர்ந்த வில்லவர்-மீனவர் மக்கள்

3. பட்டங்கள் மாறவர்மன், சடையவர்மன், மாறன், வில்லவன், மீனவன்

4. தமிழ் வேர்கள்

5. அசைவம்

6. மகாபலியின் வம்சாவளி

7. பாண்டியர்கள் அனைத்து திராவிட மக்களுக்கும் நண்பர்கள்.

8. மலை அரையர்களின் நண்பர்கள்

9. பாண்டியர்கள் ஹிரண்யகர்ப சடங்குகளை நடத்தினர்

10. வில்லவர், மலையர், வானவர், மீனவர் போன்ற பூர்வகுடி திராவிட குலத்தாரால் ஆதரிக்கப்பட்டது.

நம்பூதிரி பாண்டியர்கள்

1. ஆரியன்

2.பார்கவகுலம் நேபாள வேர்களைக் கொண்ட துளுவ பிராமணர்கள்.

3. பட்டங்கள் ராஜா, கோதவர்மா. பெயர்களுடன் பிறந்த நட்சத்திரத்தை சேர்ப்பார்கள்.

4. இந்திய-நேபாள எல்லையில் உள்ள அஹிச்சத்திரத்தில் இருந்து வந்த துளு-நேபாள மக்கள்.

5. சைவம்

6. பரசுராமன், பார்கவராமனின் வம்சாவளி

7. திராவிட எதிர்ப்பு

8. மலை அரையர்களை துன்புறுத்தினார்கள்

9. உபநயன விழா நடத்துகிறார்கள். அவர்கள் புனித நூலை அணிவார்கள்.

10. அஹிச்சத்திரத்தில் இருந்து குடியேறிய நாகர்களாகிய நாயர்களால் ஆதரிக்கப்பட்டார்கள்.

இப்படி பந்தளத்தில் ஒருபோதும் தமிழ் பேசாத நம்பூதிரிகள் தங்களை பாண்டியர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்..

பெயரில்லா சொன்னது…

நன்றி தெரியாத அனைத்தும் தெரிந்து கொண்டேன்