மின்னம்பலம் : சசிகலாவின்
கணவர் நடராஜன், உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள குளோபல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து
கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனிடையே, கணவரைப்
பார்ப்பதற்காக சசிகலா பரோலில் வர விண்ணப்பித்திருக்கிறார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடராஜனை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (அக்டோபர் 03) நேரில் சென்று நலம் விசாரித்தார்.
சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் செயலிழந்துவிட்ட காரணத்தினால் சிறுநீரக பிரச்னைக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அவருக்குச் சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
தற்போது திருச்சியில் மூளைச்சாவு அடைந்த கார்த்தி என்பவருடைய கிட்னி மற்றும் கல்லீரல் நடராஜனுக்குப் பொருந்துமா என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள கார்த்தியின் உடலை சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்
பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள். ஆய்வுக்குப் பின், நடராஜனுக்குக் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும்.
இந்நிலையில், நடராஜனைச் சந்தித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ கூறுகையில், நீங்கள் பரிபூரண நலமடைவீர்கள் என்று நடராஜனிடம் தெரிவித்தேன். நடராஜனுக்கு இன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அறுவை சிகிச்சை முழு வெற்றி பெரும். அவர் பூரண சுகமடைந்து மீண்டும் பழைய நடராஜனாக உலவுவார். அந்த நம்பிக்கை நிறைந்த உள்ளத்தோடு செல்கிறேன். மீண்டும் நாளைக் காலை சென்று நான் அவரைச் சந்திப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக