சனி, 7 அக்டோபர், 2017

சாரு ஹாசன் : கமல் ரஜினி சேர்ந்து வந்தாலும் அரசியலில் வெற்றி பெறமுடியாது!

Gajalakshmi Oneindia Tamil சென்னை : நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்தே கட்சி தொடங்கினாலும் அரசியலில் சாதிக்க முடியாது என்று நடிகர் சாருஹாசன் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் கால் பதித்தே தீருவேன் என்று தனிக்கட்சி தொடங்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையும் லதா ரஜினிகாந்த் அண்மையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார் என்று கூறி பரபரப்பை கூட்டினார்.
இந்நிலையில் நடிகர் ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து நடிகரும் கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது : சினிமாவைத் தாண்டி ரஜினியும், கமலும் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேரும் இணைந்து கட்சி தொடங்கினாலும் அவர்களால் அரசியல் களத்தில் சாதிக்க முடியாது. பெரிய விஞ்ஞானியாக இருந்தால் என்ன பெரிய தத்துவஞானியாக இருந்தால் என்ன அரசியலுக்கு அது மட்டுமே போதுமா?


மக்களின் நம்பிக்கை வேண்டும் அரசியல் என்பது மக்களை சந்திக்க வேண்டும். இவர்கள் நமக்கு ஏதாவது செய்வார்கள் என்று மக்கள் நம்ப வேண்டும். அந்த எண்ணம் வந்தால் தான் ஓட்டு போடுவார்கள். சினிமாவிற்காக ஓட்டு விழாது சினிமாவிற்காக ஓட்டு விழாது சினிமா வேறு அரசியல் வேறு. சினிமாவில் இருந்த தாக்கம் இன்று அரசியலில் 10 சதவீதம் கூட இருக்காது. அரசியலில் வாக்களிப்பவர்கள் நிச்சயம் வேறு காரணங்களுக்காகவே ஓட்டு போடுவார்கள்,சினிமாவிற்காக யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.

சினிமா ஓட்டு என்பது 5 முதல் 6 சதவீதம் மட்டுமே. மனிதனின் திறமையை வைத்து இவரால் இதைச் செய்ய முடியும் என்று மக்கள் நினைத்து ஓட்டு போடுவதே அதிகம். நடிகராக இருந்ததால் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார், நடிகையாக இருந்ததால் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தால் என்று சொல்ல முடியாது. 3வது கட்சி சாத்தியமில்லை 3வது கட்சி சாத்தியமில்லை தமிழக மக்கள் மனதில் திமுக, அதிமுக மட்டுமே பதிந்துள்ளது. இதனால் 3வது கட்சி உருவாகுமா என்று நான் கருதவில்லை என்று சாருஹாசன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: