Selvendhran Denmark :ஈழப்போராட்ட ஆரம்ப காலத்தில் இந்தியாவிலும்
அது பற்றிய தகவல்கள் முறையாக தெரிந்திருக்கவில்லை. மேலும் பலர் அது
உள்நாட்டு விவகாரம் அதுபற்றி ஏதாவது பேசவேண்டும் என்றால் அது டெல்லியில்
உள்ள மத்திய அரசுதான் பேசவேண்டும் , அது முழுக்க முழுக்க இந்திய வெளிநாட்டு
அமைச்சு தொடர்புடைய விவகாரம் என்ற அளவிலேயே பார்க்கப்பட்டது.
தமிழகதிலும்
அங்காங்கே சிலர் ஈழத்தமிழர்கள் மீது ஆதரவான கருத்துக்களை மேலேடுத்து சென்றார்கள் . ஆனால் அவர்களுக்கு போதிய விளம்பரம் அன்று கிடைத்திருக்கவில்லை,
கம்யுனிஸ்ட் கட்சிகள் அது முழுவது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனை என்றும் தாங்கள் தேசிய இனங்களுக்குள் உண்டாகும் பிரச்சனைகள் வர்க்க ரீதியான போராட்டங்களை புறந்தள்ளி விடும் என்ற கோணத்தில் பார்த்தனர்,
அன்று ஆட்சியில் இருந்த எம்ஜியாரோ தனக்கு சிங்கள ரசிகர்களும் உள்ளார்கள் என்று தனது அரசியல் ஆற்றலை வெளிப்படுத்தினார்.
1983 இனக்கலவரம் தோன்றி பிரச்சனை ஒரு பூதாகரமாக மாறிய பொழுது அது பற்றி போதிய அளவு கருத்துக்கள் மக்கள் மத்தியில் போய் சேர்த்ததற்கு
திமுகதான் காரணம் என்பது வரலாற்றில் யாராலும் புறந்தள்ளி விட முடியாத உண்மை.
எதிர்கட்சியில் இருந்த திமுகவின் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்கள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு பயத்தை கொடுத்ததோ இல்லையோ நிச்சயமாக எம்ஜியாருக்கு கடும் பயத்தை கொடுத்தது,
காலஞ்சென்ற அமிர்தலிங்கமும் அவர் மனைவியும் கலைஞர் வீட்டுக்கு சென்று இரவு உணவு சாப்பிட்ட பின்பு இரவோடு இரவாக எம்ஜியார் ஆட்களை அனுப்பி அமிர்தலிங்கம் தம்பதிகளை அதே இரவு தனது வீட்டிலும் சாப்பிட வருமாறு வற்புறுத்தி அழைத்தார்,
பாவம் அமிரதலிங்கம் தம்பதிகள் எம்ஜியார் கோபித்து விடக்கூடாதே என்பதற்காக கஷ்டப்பட்டு மீண்டும் அதே இரவில் சாப்பிட்டார்கள்.
அடுத்தநாள் அமிர்தலிங்கம் தம்பதிகள் எம்ஜியார் வீட்டில் சாப்பிட்டனர் என்ற செய்தி வரவேண்டும் என்று எம்ஜியார் செய்த விளம்பர அரசியல் அது.
தமிழக அரசியலையும் தாண்டி இந்த விடயத்தில் டெல்லி வரை கலைஞர் கருணாநிதியின் குரல் ஓங்கி ஒலித்தது,
ஈழத்தில் இருந்து வருகை தந்த அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் சம்பந்தன் எல்லோருமே கலைஞர் கருணாநிதியின் இல்லத்துக்கு வருகை தந்து திமுகவின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டுக்கு தனது நன்றியை தெரிவித்தனர்,
முழுத்தமிழகமும் உணர்ச்சி கொந்தளிப்பில் கொதித்து போய் இருந்த நேரம் அது. வடஇந்தியாவிலும் ஈழத்தமிழர் ஆதரவு அலை வீசியது,
அது வரை இது பற்றி எதுவித புரிதலும் இன்றி இருந்த தமிழ் ரசிகல்ர்கள் மட்டுமல்ல சிங்கள ரசிகர்ளும் உள்ளனர் என்று கூறி கொண்டிருந்த எம்ஜியாருக்கு மிகவும் அவசரமாக ஈழ ஆதரவு வண்டியில் ஏறி அமரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ஈழ இயக்கங்களுக்கு நிதி உதவியை அறிவித்தார்.
முதலில் அறிவித்தவர் கலைஞர். எனவே புலி தவிர்ந்த நான்கு இயக்கங்களும் கலைஞரிடம் சென்று ஆதரவு பெற்றனர், புலிகள் இயக்கம் எம்ஜியாரிடம் மட்டும் சென்றனர்,
இதன் பின் புலிகள் முழுக்க முழுக்க எம்ஜியாரின் இயக்கமாகவே இருந்தது.
ஏனைய இயக்கங்கள் காலப்போக்கில் புலிகளால் அழிக்கப்பட்டது,
அந்த அழிவை தடுத்து இருக்க கூடிய ஒரே நபராக அன்று எம்ஜியார் மட்டுமே இருந்தார். ஆனால் அவர் அதை ரசித்தார், மேலும் புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கி கொண்டே இருந்தார், புலிகள் எந்த காலத்திலும் திமுகவை ஆதரிக்க மாட்டார்கள் என்ற ஒரே காரணம் மட்டுமே அவருக்கு தெரிந்த அரசியல் கோட்பாடு.
எம்ஜியாரின் புலி அரசியல் அபிமானம் பிரபாகரனுக்கு மிகப்பெரிய சக்தியை கொடுத்தது ..
சகோதர போராளிகளை கொன்றொழித்து விட்டு தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அரசியல் செய்ய முடியும், தமிழக அரசு தங்கள் கையில்தான் என்ற நம்பிக்கைதான் பின்பு வரலாற்றில் ஏற்பட்ட துன்பங்களுக்கு எல்லாம் காரணமாக அமைந்தது! ஈழவிடுதலை போராட்டத்தின் மீது விழுந்த மரண அடியாக இருந்தது டெலோ இயக்கத்தின் மீதான கொலைவெறியாட்டம் . நூற்றுக்கணக்கான போராளிகளும் தலைவர் ஸ்ரீ சபாரத்தினமும் கொல்லப்பட்டனர். அதன் பின் ஈழவிடுதலை போராட்டம் என்பது எம்ஜியாரின் செல்லப்பிள்ளை பிரபாகரனிடம் முற்று முழுதாக வந்துவிட்டது.
ஒரே குடும்பத்தில் அண்ணன் டெலோ தம்பி புலி இன்னொரு சகோதரன் வேறொரு இயக்கம் என்ற நிலை எல்லாம் அப்போது இருந்தது. அந்த சகோதர இயக்கங்கள் என்ற கோட்பாடு அன்று இறந்து போனது.
எந்த தமிழ் தலைவர்களையும் போராளிகளையும் கொன்றாலும் தமிழகத்தில் தங்களுக்கு ஒரு பிரச்சனையும் வரப்போவதில்லை என்ற நம்பிக்கையை புலிகளுக்கு கொடுத்தது எம்ஜியார்.
இந்த தைரியம் பின்னாளில் யாரை எம்ஜியார் வலிந்து அழைத்து உபசரித்தரோ அந்த அமிர்தலிங்கத்தைகூட கொல்லும் துணிவை கொடுத்தது .
புலிகள் சக போராளிக்குழுக்களை அழித்து கொண்டிருக்கையில் அவர்கள் எம்ஜியாரிடம் வந்து முறையிட்டார்கள் .அதற்கு எம்ஜியார் என்ன பதில் கூறினார் தெரியுமா?
இண்டர்காமில் தான் பேசினார் .." அவங்ககிட்ட இருக்கிற ஆயுதம்தானே உங்ககிட்டேயும் இருக்கு? "
கலைஞர் ஆதரவு குழுக்கள் அழியவேண்டும் என்று விரும்பினார் எம்ஜியார்/
ஒரு விடுதலை போராட்டத்தை எப்படி எப்படி எல்லாம் சிதைக்க முடியுமோ அப்படி அப்படி எல்லாம் சிதைத்ததில் எம்ஜியார் பங்கு எந்த அளவு என்பதை வரலாறு காட்டும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக