கடந்த 2 நாட்களாக இந்த பஞ்சாயத்து ஓடியுள்ளது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி நானே சசிகலாவை சந்திக்க வேண்டும் இருப்பினும் இந்த சூழ்நிலையில் சந்திப்பது டெல்லிக்கு ஏற்புடையதாக இல்லை என கூறியிருக்கிறார்.ஆனால் அவரிடம் பேசிய அமைச்சர்கள், நாங்கள் சின்னம்மா மூலம் தான் பதவி, பொறுப்புக்கு வந்தோம், அம்மா இருக்கும் போதே சின்னம்மா தான் எங்களை பரிந்துரைத்தார். ஆகவே நாங்கள் அவரை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை என கூறினார்கள். அதை கேட்ட எடப்பாடி, மீண்டும் ஒரு சிக்கல் வராமல் நீங்கள் பேசுங்ககள் என கூறியிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக சசிகலா பரோலில் வந்த நாளில் இருந்து தமிழக அமைச்சர்களான ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி, சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன், ஆர்.பி.உதயகுமார், உட்பட கொங்கு மண்டல அமைச்சர்களான கே.சி.கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன், என 10 அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக பெரும்பாலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சுமார் 20 பேர் வரை சிசிகலாவை சந்திக்க உள்ளனர். இந்த தகவல்கள் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தெரிந்துள்ளது. இது இன்னொரு குழப்பத்தை ஏறப்படுத்துமா? என்கின்ற விவாதத்தை அதிமுகவில் உருவாக்கியுள்ளது.
சசிகலா வந்து செல்லும் வரை நடக்கிற அரசியல் நிகழ்வுகள், அதன் பின்பு நடக்கிற புதிய அரசியல் சூழல், தமிழ்நாட்டில் நடக்கிற அதிமுக அரசியலில் பாஜகவின் பஞ்சாயத்து என அடுத்தடுத்து எதிர்பார்ப்பு கூடியுள்ளது.&">- ஜீவா தங்கவேல்</
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக